AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 30 ஜூன், 2013

அமீரகத்தின் TOP 10 இந்தியர்கள்


துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட மாகாணங்களை கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தில் பல ஆண்டுகளுக்கு முன் தொழில் தொடங்கி வெற்றியாளர்களாக விளங்கும் இந்தியர்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொருவரின் சொத்து மதிப்பு, அவர்களின் பணியாட்களின் எண்ணிக்கை, வர்த்தக வரவு – செலவு, அவர்கள் அறப்பணிக்கு செலவிடும் தொகை, அவர்களின் ஆளுமை என பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக போர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.

போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள பட்டியலின் படி வளைகுடாவில் 100க்கும் மேற்பட்ட லூலு அங்காடிகளை கொண்டுள்ள எம்கே குழுமத்தின் தலைவர் யூசுப் அலி முதலிடத்திலும், மேக்ஸ், செண்டர் பாயிண்ட் முதலான ரீடெயில் வணிக கடைகளை வைத்துள்ள லேண்ட்மார்க் குழுமத்தின் தலைவர் மிகி ஜக்தியானி இரண்டாம் இடத்திலும் யூ.ஏ.ஈ எக்ஸ்சேஞ்ச் மற்றும் என்.எம்.சி மருத்துவமனைகளின் தலைவர் பி.ஆர்.ஷெட்டி மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

வெள்ளி, 28 ஜூன், 2013

நோன்பு கஞ்சிக்கான அரிசியை முன்கூட்டியே வழங்க தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை


சென்னை: ரமலான் நோன்பு துவங்கும் முன்பே நோன்பு கஞ்சிக்கான அரிசியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. கட்சி தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், பொருளாளர் எம்.எல்.ஏ.ஷாஜகான், எம்.அப்துல் ரகுமான் எம்.பி. உள்பட பலர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதன், 26 ஜூன், 2013

தி.மு.க.,விற்கு ஆதரவு அளித்ததால் மனித நேய மக்கள் கட்சினர் விலகல்

  • மனித நேய மக்கள் கட்சியில் இருந்து கடலூர், அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் திடீரென விலகியுள்ளனர்.மனித நேய மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்சிக்கு அங்கீகாரம் கொடுத்த அ.தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவிக்காமல் தி.மு.க.,விற்கு ஆதரவு தெரிவித்த கட்சியின் தலைமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காட்டுமன்னார்கோவிலில் எதிர்ப்புக் கூட்டம் போடப்பட்டது.

செவ்வாய், 25 ஜூன், 2013

கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக-மமகவின் ஒருங்கிணைந்த பொதுக்குழு

 கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக-மமகவின் ஒருங்கிணைந்த பொதுக்குழு இன்று (25-06-2013 செவ்வாய் கிழமை) சிதம்பரத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் மமகவின் இணை பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது மமக மாநில அமைப்பு செயலாளர்கள் மண்டலம் ஜெய்னுல் ஆபிதீன் எஸ்.சம்சுதீன் நாசர் உமரி மற்றும் மாவட்ட கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.


கடந்த மாதம் ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரையின் படி கட்சியிலிருந்து மானியம் ஆடூர் மெஹராஜுதீன் நீக்கப்பட்டதற்கான காரணங்களை கழக செயல் வீரர்களுக்கு தலைமை நிர்வாகிகள் தகுந்த ஆதாரத்துடன் விளக்கினர்.

ஞாயிறு, 23 ஜூன், 2013

சவூதி: வார விடுமுறை நாள்கள் மாற்றம்!


சவூதி மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் இன்று வெளியிட்டுள்ள அரசாணை ஒன்றின் மூலமாக

சவூதி வார விடுமுறை நாள்களை வியாழன் வெள்ளி என்பதிலிருந்து வெள்ளி, சனி என்று மாற்றி அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

1). அமைச்சகங்கள், நிதியகங்கள், அரசு அலுவலகங்கள், சவூதி மைய வங்கி, பங்குச் சந்தை, ஆகியவை இனி ஞாயிறு முதல் வியாழன் வரை இயங்கும். வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் இனி வார விடுமுறையாகக் கருதப்படும். இந்த மாற்றம் இம்மாதம் 29 ஜூன் முதலே நடைமுறைப்படுத்தப்படும்.

தமிழகத்தில் பள்ளி நேரம் மாற்றம் : நாளை முதல் அமல்

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து வகை மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை முப்பருவ பாடநூல் முறையும், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையும் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கல்வி ஆண்டு முதல் பள்ளிகளின் பாடவேளை மற்றும் பள்ளி தொடங்கும் நேரமும் மாற்றியமைக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

சனி, 22 ஜூன், 2013

இந்திய தேசிய லீக் கட்சியுடன் தேசிய லீக் இணைந்தது

இந்திய தேசிய லீக் கட்சியுடன், தேசிய லீக் கட்சி இணைந்தது. கட்சியின் தமிழ்நாடு தலைவராக, பஷீர் அகமது நியமிக்கப்பட்டுள்ளார் என்று, இந்திய தேசிய லீக் கட்சியின் அகில இந்திய தலைவர் முகமது சுலைமான் அறிவித்தார்.
இந்திய தேசிய லீக் கட்சியின் அகில இந்திய நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, கட்சியின் தலைவர் முகமது சுலைமான் தலைமை தாங்கினார். கூட்ட முடிவில், முகமது சுலைமான் நிருபர்களிடம் கூறியதாவது:–

வெள்ளி, 21 ஜூன், 2013

லால்பேட்டை நகரே விழாக்கோலம்

சரித்திர பிரசித்திப்பெற்ற லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரியின் 150-வது ஆண்டு விழாவை வரவேற்க லால்பேட்டை நகரே விழாக்கோலம் பூண்டுள்ளது..
லால்பேட்டையின் நுழைவு வாயிலாக கருதப்படும் காயிதேமில்லத் சாலையின் முகப்பிலிருந்து வண்ண விளக்குகளும்,அலங்கார பந்தல்களும் காண்போரின் கண்களை கவருகின்றன.IMG-20130621-WA0000IMG-20130621-WA0021IMG-20130621-WA0001

வியாழன், 20 ஜூன், 2013

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கலுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


கடலூர், : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கலுக்காக விண்ணப்பிக்கலாம் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ராஜேந்திரன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
கடந்த 10&1&2013 அன்று வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு தொடர்ந்து வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக படிவம் 7லும், நீக்குதல் தொடர்பாக படிவம் 6லும், பெயர், முகவரி மற்றும் புகைப்பட திருத்தங்கள் தொடர்பாக படிவம் 8லும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். ஒரே சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் குடியிருப்பு மாற்றம் செய்தவர்கள் தங்களது பெயர்களை புதிய முகவரிக்கு மாற்றம் செய்து கொள்ள படிவம் 8ல் விண்ணப்பிக்கலாம். 

வீராணம் ஏரி வற்றியதால் வெற்றிலை கொடிக்கால்கள் அழியும் அபாயம்



வீராணம் ஏரி வறண்டதால் வெற்றிலை கொடிக்கால்கள் அழியும் அபாயத்தில் உள்ளன.
காட்டுமன்னார்கோவில் பகுதி வீராணம் ஏரி கரையில் உள்ள திருச்சின்னபுரம், கொள்ளுமேடு, மானியம் ஆடூர், நத்தமலை, கந்தகுமாரன், கொல்லமலை கீழ்பாதி என பல்வேறு 
பகுதிகளில் வெற்றிலை சாகுபடி  செய்யப்படுகிறது. வெற்றிலை பயிர் பல்லாண்டு பயிராகும். மேட்டு பாத்திகள் அமைத்து நடவு செய்யப்படும்.  வெற்றிலை பயிருக்கு அடிக்கடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 
  இந்த ஆண்டு வீராணம் ஏரி வறண்டதால் தண்ணீர் இல்லாமல் இந்த பகுதிகளில் வெற்றிலை கொடிக்கால்கள் காய்ந்தன. ரூ. 2.5 லட்சம் வரை செலவு செய்து விட்டு விவசாயிகள் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து போய் உள்ளனர். 

புதன், 19 ஜூன், 2013

மேல்சபை தேர்தலில் தி.மு.க.வுக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு: ஜவாஹிருல்லா


டெல்லி மேல்-சபை தேர்தலில் போட்டியிடும் கனிமொழிக்கு தி.மு.க. தலைவர்கள் ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்த நிலையில் மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஜவாஹிருல்லா, அஸ்லம் பாஷா ஆகியோர் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று சந்தித்து பேசினர். 

சி.ஐ.டி காலனியில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி வீட்டில் பகல் 1 மணி அளவில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது மேல்-சபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:- 

செவ்வாய், 18 ஜூன், 2013

முழுமையாக நீக்க முடியாது ஜூலை 1ம் தேதி முதல் ரோமிங் கட்டணம் குறையும்


புதுடெல்லி: தேசிய ரோமிங் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் கட்டணத்தை, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்) குறைத்துள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் கட்டணக் குறைப்பு அமலுக்கு வருகிறது.ரோமிங் கட்டணத்தை நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. விரைவில் அதை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்திருந்தார்.

திங்கள், 17 ஜூன், 2013

வெளிநாட்டு ஹஜ் பயணிகளுக்கான அனுமதி 20 சதவீதம் குறைப்பு உறுதி: சவுதி அரசு முடிவு


சவுதி அரேபியாவில் உள்ள மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு 'ஹஜ்' புனித யாத்திரை செய்ய வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையை அந்நாட்டு அரசாங்கம் 20 சதவீதம் குறைத்துள்ளது. 
10 லட்சம்  மக்கள் தொகையின் அடிப்படையில் ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள சவுதி அரசாங்கம் முன்னர் அனுமதி அளித்து வந்தது. 

ஒரு கோடி மக்கள் தொகை உள்ள நாட்டில் இருந்து 10 ஆயிரம் பேர் ஆண்டிற்கு ஒரு முறை ஹஜ் பயணம் செய்ய முடியும். இதன் அடிப்படையில், கடந்த (2012) ஆண்டு இந்தியாவில் இருந்து மட்டும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் ஹஜ் யாத்திரை செய்தனர். 

ஞாயிறு, 16 ஜூன், 2013

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை செயற்குழு அதன் தலைவர் ஜே.எஸ். ரிபாயீ அவர்கள் தலைமையில் 15.06.2013 அன்று தஞ்சையில் நடைபெற்றது. மூத்த தலைவர்கள் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., செ. ஹைதர் அலி, பொதுச் செயலாளர் ப. அப்துல் ஸமது, பொருளாளர் ஒ.யூ. ரஹ்மத்துல்லாஹ், துணைத் தலைவர் குணங்குடி ஆர். எம். ஹனிபா, துணைப் பொதுச் செயலாளர் கோவை உமர் உட்பட 300 செயற்குழு உறுப்பினர்கள் பங்குக் கொண்டார்கள். இந்த செயற்குழுவில் பின் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

1. தமிழகத்தில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டு அளவை உயர்த்த வேண்டும்
தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு 3.5 சதவீதம் என்பது முஸ்லிம் சமுதாயத்தின் பின்னடைந்த தன்மைக்குப் பொருத்தமற்றதாக உள்ளது. இந்த இடஒதுக்கீடு அளவு உயர்த்தப்பட்டால் மட்டுமே முஸ்லிம் சமுதாயம் பயனடையும் என்பதையும், 3.5 சதவீத இடஒதுக்கீட்டின்படி நடந்துள்ள கடந்தகால அரசுப் பணி நியமனங்களில் முஸ்லிம் சமுதாயத்திற்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டிருப்பதையும், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே அதிமுக பொதுச் செயலாளரிடம் நம்மால் சுட்டிக் காட்டப்பட்டது.

சனி, 15 ஜூன், 2013

M.I.ஜபருல்லாஹ் - சைலா பானு திருமணம்

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்
{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில்ஒன்றிணைத்து வைக்கட்டும்}   
வாழ்த்துக்களுடன்.. .
கொள்ளுமேடுடைம்ஸ் இணையதளம்   

 

வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் தேர்தல்: வரும் 17 முதல் வேட்புமனு தாக்கல்


தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர் தேர்தலில் போட்டியிட வரும் 17 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் அலுவலர் க.அருள்மொழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பு:

வக்ஃபு வாரிய உறுப்பினர் தேர்தலுக்கு முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பிரிவுகளுக்கு தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

வெள்ளி, 14 ஜூன், 2013

இறைவனின் மிகபெரிய உதவியுடன் லால்பேட்டை நகரில் இலவச மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது..


13.06.2013 வியாழன் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை 
லால்பேட்டை த.மு.மு.க அலுவலகத்தில் 

லால்பேட்டை த.மு.மு.க &புதுச்சேரி வெங்கடேஷ்வரா மருத்துவ கல்லுரி இணைந்து லால்பேட்டை யில் இலவச மருத்துவமுகாம் நடைபெற்றது 

புதன், 12 ஜூன், 2013

பிரீபெய்டு மின் கட்டண மீட்டர் வசதி: தமிழ்நாட்டில் விரைவில் அறிமுகம்


செல்போன் வாடிக்கையாளர்கள் பிரீபெய்டு திட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் தேவைக்கு ஏற்றவாறு ரீசார்ஜ் செய்து பேசி வருகிறார்கள். 

மின்சாரத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும் இனி பிரீபெய்டு மூலம் மின் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. மராட்டியம், டெல்லியில் பிரீபெய்டு மீட்டர் திட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல தமிழ்நாட்டிலும் விரைவில் பிரீபெய்டு மின் கட்டண மீட்டர் வசதி முறையை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

தமிழ்நாட்டு மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையத்தின் என்.ஜி.ஒ. இது குறித்து ஆலோசனை செய்து வருகிறது. நுகர்வோர் கட்டணம் செலுத்தி பிரீபெய்டு இணைப்பை பெறலாம். இதற்கான மீட்டரை மின்சார வாரியம் பொருத்தும். அதோடு அதற்கான கார்டும் வழங்கப்படும். 

நேற்று புனித கஃபா கழுவப்பட்டது (வீடியோ இணைப்பு)

20130611-151114.jpg
புனித மக்கா நகரின் ஆளுநரும், இளவரசருமான காலித் அல் பைசல் அவர்கள் நேற்று புனித கஃபாவை கழுவினார்கள்.
நபி (ஸல்) அவர்களின் சுன்னஹ்வின் அடிப்படையில் புனித கஃபாவின் சுவர்கள் சம்சம் தண்ணீர் மற்றும் பன்னீர் வாசனைத் திரவியங்களை (Rose perfume) கொண்டு கழுவப்பட்டது.
இந்த நிகழ்வில் வீடியோ இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 11 ஜூன், 2013

கடலூர் மாவட்டத்தில் அனுமதி செய்யப்பட்ட 44 நர்சரி பள்ளிகள் இயங்குகிறதா?


கடலூர், : கடலூர் மாவட்டத்தில் அனுமதி செய்யப்பட்ட 44 நர்சரி பள்ளிகள் இயங்குகிறதா? என அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். 
கட்டாயக்கல்வி உரிமைச்சட்ட நிபந்தனைகளின் கீழ் இயங்காத நர்சரி பள்ளிகள் தொடர்ந்து செயல்பட தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன் படி கடலூர் மாவட்டத்தில் 44 நர்சரி பள்ளிகள் இயங்க தடை விதிக்கப்பட்டு உள் ளது. இதையடுத்து பள்ளி கள் தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள் ளது. இதனால் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் மற்றும் 300 ஆசிரியர்கள் நிலை கேள்விக்குறியாகி இருக்கிறது. 
நேற்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்ட நிலையில், தடை விதிக்கப்பட்ட பள்ளிகள் இயங்குகிறதா என மாவட்ட நர்சரி பள்ளிகள் அலுவலர் ராஜ சேகர் தலைமையிலான கல்வித்துறை அதிகாரிகள், அலுவலர்கள் குழுவினர் ஆய்வு நடத்தினர். 

உலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள்

துபாய்: உலகிலேயே கத்தார் நாட்டில்தான் கோடீஸ்வரர்கள் அதிகமாக உள்ளனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. 1,000 பேரில் 143 பேரிடம் ரூ.5 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. போஸ்டன் கன்சல்டிங் குழுமம் (பிசிஜி) 13வது உலக கோடீஸ்வரர்கள் நிலவரம் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: உலகத்திலேயே கத்தார் நாட்டில்தான் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளனர். கச்சா எண்ணெய் வளம் மிகுந்த இந்த நாட்டில் 1,000 பேரில் 143 பேரிடம் ரூ.5.60 கோடிக்கு தனிப்பட்ட சொத்துக்கள் இருக்கின்றன.

புகார் பதிவு செய்யாவிட்டால் போலீசுக்கு ஓராண்டு சிறை

புதுடெல்லி: எல்லையை காரணம் காட்டி பொதுமக்களின் புகார் மனுவை பெற மறுத்தாலோ அல்லது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுத்தாலோ சம்பந்தப்பட்ட போலீசார் மீது ஓராண்டு சிறை தண்டனை விதிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் எல்லைப்பிரச்னை காரணமாக போலீசார் துரித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விசாரணை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதே போலவே மார்ச் மாதத்தில் 5 வயது சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்யப்பட்டபோதும் போலீசார்  உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல் மெத்தனமாக செயல்பட்டதாக புகார் எழுந்தது.

திங்கள், 10 ஜூன், 2013

ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி 150ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்க தமிழக முன்னாள் அமைச்சர் M.R.K பன்னீர் செல்வத்திற்கு ஜாமிஆ நிர்வாக குழு உறுப்பினர்கள் நேரில் அழைப்பு


ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி 150ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்க தமிழக முன்னாள் அமைச்சர் M.R.K பன்னீர் செல்வத்திற்கு ஜாமிஆ நிர்வாக குழு உறுப்பினர்கள் நேரில் அழைப்பு 

ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி 150ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்க தமிழக முன்னாள் அமைச்சரும் தி .மு கழக மாவட்ட செயலாளருமான M.R.K பன்னீர் செல்வத்திற்கு ஜாமிஆ நிர்வாக குழு உறுப்பினர்கள் நேரில் சந்தித்து அழைப்பு கொடுத்தனர்.

ஞாயிறு, 9 ஜூன், 2013

கடந்த 5 மாதங்களில் சவுதியில் இருந்து 3 லட்சத்து 80 ஆயிரம் தொழிலாளர்கள் வெளியேறியுள்ளனர்


ரியாக், ஜூன் 9-

சவுதி அரேபியாவில் இருந்து ஒரு லட்சத்து 80 ஆயிரம் வெளிநாட்டு தொழிலாளர்கள் கடந்த 2 மாதங்களில் வெளியேறியுள்ளனர்.

2013-ஜனவரியில் இருந்து இதுவரை 3 லட்சத்து 80 ஆயிரம் வெளிநாட்டினர் வெளியேறியுள்ளதாகவும் இவர்கள் அனைவரும் உரிய ஆவணங்களின்றி சவுதி அரேபியாவில் தங்கியிருந்தவர்கள் என்றும் இவர்கள் மீது அபராதம் ஏதும் விதிக்கப்படவில்லை என்றும் அந்நாட்டின் பாஸ்போர்ட் துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

கோடை கொண்டாட்டம் முடிந்தது... தமிழகம் முழுக்க பள்ளிகள் நாளை திறப்பு..!


ஒன்றரை மாத கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்களை ஒரே வாரத்தில் வழங்க உத்தரவிட்டுள்ளதால் புகைப்படம் எடுக்கும் பணியும் நாளையே தொடங்குகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 20ம் தேதி பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறையை கொண்டாட மாணவ, மாணவிகள் பெற்றோருடன் சொந்த ஊர்களுக்கும் சுற்றுலா தலங்களுக்கும் சென்றனர். ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கோடை வெயில் கொளுத்தியதாலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும் பள்ளிகள் திறப்பு 10ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன.

கடலூர், காட்டுமன்னார்கோவில் இடி- மின்னலுடன் கனமழை


தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து 2-வது நாளாக பல இடங்களில் இடி- மின்னலுடன் கனமழை பெய்தது.

கடலூர், நெல்லிக்குப்பத்தில் நேற்று மாலை 5 மணி முதல் சுமார் 1 1/2 மணி நேரம் இடி- மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. மழையின்போது நெல்லிக்குப்பத்தில் மின்னல் தாக்கி 10-க்கும் மேற்பட்ட டி.வி.கள், 15 மின்விசிறிகள் கருகி சேதமடைந்தன. இது தவிர விருத்தாசலம், வடலூர், நெய்வேலி, புவனகிரி, காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று இரவு சுமார் 2 மணி நேரம் மழை தூறி கொண்டேயிருந்தது. விழுப்புரத்தில் நேற்று இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

சனி, 8 ஜூன், 2013

குறிஞ்சிப்பாடியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா ஷெய்கு அப்துல்லாஹ்  முபாரக் புதிய பள்ளிவாசலை திறந்து வைத்து வாழ்த்தினார் .
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் 8.6.2013 சனிக்கிழமை இன்று ரஹ்மானிய புதிய பள்ளிவாசல் திறப்பு விழா நடைப்பெற்றது .குறிஞ்சிப்பாடி முத்தவல்லி இ.காதர் தலைமை வகித்தார் ஜமாஅத் பிரமுகர் எம்.கே.எம் சுல்தான் வரவேற்று பேசினார் .இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் மௌலானா தளபதி ஷபீகுர் ரஹ்மான் துவக்க உரையாற்றினார் . விழுப்புரம் மேற்கு மாவட்ட பொருளாளர் ஜெ.அப்துல் ஹக்கீம் திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி தலைவர் ஜெ.சம்சுதீன் களமருதூர் ஜெ.அப்துல் ஹமீது குறிஞ்சிப்பாடி டாக்டர் எம்.ஏ.அப்துர் ரஜாக் லால்பேட்டை ஜெ.எம்.ஏ.அரபிக் கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர் ஏ.ஆர் .அப்துர் ரஷீத்  சாதிக் பாஷா அன்வர் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரசு பள்ளிகளில் தொடரும் கட்டணக் கொள்ளை

பள்ளிகளில் வசூலிக்கப்படும் பல்வேறு கட்டணங்களால் மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்கு போட்டியாக பல்வேறு அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கட்டண வசூல் நடக்கிறது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் கடந்த 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கோடையின் கொடிய தாக்கத்தால் 10ம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்படுகிறது. எனினும், பல்வேறு தனியார், மெட்ரிக் பள்ளிகளில் தொடர்ந்து 10ம் வகுப்பு, 12ம் வகுப்புகளுக்கு சிறப்பு கட்டணத்துடன் வகுப்புகள் நடந்து வருகிறது.
தற்போது அனைத்து தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளிலும் தீவிர மாணவர் சேர்க்கை நடந்து வந்தது. பெரும்பாலான பள்ளிகளில் சேர்க்கை முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல மெட்ரிக் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சியில் சிறிது குறைவான மார்க் பெற்ற மாணவ, மாணவிகள் தொடர்ந்து அதே பள்ளியில் படிக்க அனுமதிக்கப்படாததால் இவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

வெள்ளி, 7 ஜூன், 2013

கொள்ளுமேடு செய்திகளை உடனுக்குடன் தெறிந்து கொள்ள புதிய இணையதளம் விரைவில்….

அன்பார்ந்த கொள்ளுமேடு வாசகர்களே,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ! 

உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் கொள்ளுமேடு மக்களுக்கு தங்கள் ஊரின் அன்றாட நிகழ்வுகளையும் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த தளத்தினை நாம் துவங்க இருக்கிறோம்.

கொள்ளுமேடு மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடும் செயல்படும் வண்ணம் இந்தத் தளத்தினை துவங்க உள்ளோம்.

எனவே, இந்த இணையத் தளத்தில் வெளியிடும் தகவல்களுக்குக் கீழ்க்காணும் நிபந்தனைகளைப் பின்பற்ற முடிவு செய்துள்ளோம்.

லால்பேட்டையில் காயிதே மில்லத் பிறந்த நாளை முன்னிட்டு இ .யூ.முஸ்லிம் லீக் கொடி ஏற்று விழா

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் கண்ணியத்திற் குரிய காயிதே மில்லத் எம். முஹம்மது இஸ்மாயில் சாஹிபின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு, ஜுன்.5- மாலையில் லால்பேட்டையில் இ .யூ.முஸ்லிம் லீக் கொடி ஏற்று விழா நிகழ்ச்சி துவங்கியது  கடலூர் மாவட்ட தலைவர் கே .ஏ அமானுல்லா தலைமை  வகித்தார் மாவட்ட கௌரவ ஆலோசகர் எஸ் .ஏ .அப்துல் கப்பார் இ.யூ.முஸ்லிம் லீக்  கொடி ஏற்றி வைத்தார் நகர தலைவர் கே .ஏ .அபுசுஹூத் துணைத் தலைவர் ஏ .ஆர் .அப்துர் ரசித் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நகர செயலாளர் எம் .ஓ .அப்துல் அலி வரவேற்றார் ,துணைத் தலைவர் தாஹா முஹம்மது ( துஆ ) பிரார்த்தனை செய்தார்

குறைந்த சேவைக் கட்டணத்தில் பாஸ்போர்ட்

குறைந்த சேவைக் கட்டணத்தில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் புதிய திட்டம் சென்னையில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.

அரிமா சங்கம் மற்றும் தமிழ்நாடு இணையதள மைய உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தில், ரூ.150-க்கு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பாஸ்போர்ட் அதிகாரிகளிடம் முன்அனுமதி பெற்றுத் தரும் சேவைகள் வழங்கப்படுகின்றன.

இது குறித்து அரிமா சங்க ஆளுநர் பழமலை மற்றும் தமிழ்நாடு இணையதள மைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் முருகன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:-

பாஸ்போர்ட் பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் அது குறித்த தகவல்கள் பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் சில இடைத்தரகர்கள் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்களிடம் ரூ.1000 வரை கமிஷன் வாங்குகின்றனர்.

அங்கீகாரம் பெறாத 44 பள்ளிகளை மூட உத்தரவு

கடலூர் மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாமல் இயங்கும் 44 மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 இதுகுறித்து ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் படி எந்த ஒரு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியும் முதன்மைக்கல்வி அலுவலர் அல்லது மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அங்கீகாரம் பெறாமல் செயல்படக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரிடமிருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் 44 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவது தெரியவந்துள்ளது.

வியாழன், 6 ஜூன், 2013

ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் 150 வது ஆண்டு விழா அழைப்பிதழ்



  சன்மார்க்க கோட்டையாம் லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக் கல்லூரியின் 150 வது ஆண்டு விழா நிகழ்ச்சி நிரல்.

ஜூலை 6 பேரணி ஏன்?





புதன், 5 ஜூன், 2013

முஸ்லிம்களின் விவாகரத்து நடைமுறை குறித்த வழக்கு

முஸ்லிம் பெண்கள் விவாகரத்து செய்யப்படுவதற்கு சான்றிதழ் தரும் அதிகாரம் காஜிகளுக்கு இல்லை என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் கூடுதல் அட்வகேட் ஜெனரலுமான பதர் சயீத் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் ''விவாகரத்தைப் பொறுத்தவரை மற்ற மதங்களைச் சார்ந்த பெண்களுக்குப் பல்வேறு பாதுகாப்புகள் உள்ளன. ஆனால் ஒரு முஸ்லீம் கணவர் தன்னிச்சையாக விவாகரத்து செய்துவிடமுடியும். இது குறித்த சட்டங்கள் முறைப்படுத்தப்படவில்லை'' எனக்கூறுகிறார்.
ஷாரியா தொடர்பான சட்டம் செல்லாது என முன்னர் 2002ல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோது, அம்மனு நிராகரிக்கப்பட்டது.
ஆனால் அப்போது நீதிமன்றம் தலாக் சொல்லுவதற்கு போதுமான முகாந்திரம் வேண்டும். தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் முன் தம்பதியருக்கிடையே சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும், அவை தோற்றாலேயே தலாக் மூலம் விவாகரத்து அனுமதிக்கப்படலாம் என வலியுறுத்தியிருந்தது.

செவ்வாய், 4 ஜூன், 2013

குவைத்தில் இந்தியர்களை வெளியேற்ற திட்டம்: தடுத்து நிறுத்த சீமான் கோரிக்கை

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

சவுதி அரேபிய அரசு நித்தாகாத் என்கிற ஒரு அவசர சட்டத்தைக் கொண்டு வந்து அறிவிக்கப்படாத அவசர நிலையை உருவாக்கி அந்நாட்டில் பணியாற்றும் இந்தியர்களை சட்டத்திற்குப் புறம்பாக வெளியேற்றி வருகிறது. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் உட்பட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம் 300-க்கும் அதிகமான மக்கள் இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட்டு, இப்படிப்பட்ட சட்டத்திற்குப் புறம்பான குவைத் அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டிருக்கின்றனர். 

இப்பிரச்சினையில் தங்களால் எந்த அளவிற்கு பயனுள்ள வகையில் உதவிடமுடியும் என்று தெரியவில்லை என்றும், குவைத் அரசுத் துறையிடம் இதுபற்றி பேசுவதாகவும் இந்தியத் தூதர் உறுதியளித்துள்ளார். 

துபாய் உச்சி வெயிலில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 2 மணி நேர ஓய்வு வழங்க அரசு உத்தரவு

அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் வெயிலின் தாக்கம் உச்சகட்ட ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 

பாலைவனப் பிரதேசமான துபாயில் கடந்த ஆண்டு ஜுன் மாதத்தில் 120 டிகிரி வரை கொளுத்திய வெயில், கட்டுமானப் பணிகள், எண்ணெய் கிணறுகளில் பணி புரிதல் போன்ற வெட்ட வெளிகளில் பணியாற்றி வரும் தொழிலாளர்களை கடும் சிரமத்திற்குள்ளாக்கியது. 

இந்த ஆண்டும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

திங்கள், 3 ஜூன், 2013

உலர் பழங்களில் உள்ள சத்துக்கள்..

உலர் பழங்களில் எண்ணற்ற மருத்துவ குணங்களை இயற்கை நமக்கு வழங்கியுள்ளது. அவை நம்முடைய உடல் நலனுக்கு மிக இன்றியமையாததாக உள்ளன, அவற்றை பற்றி சில..
• அத்திப்பழம் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் மாதவிடாய் காலங்களில் பெண்கள் அதிகம் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்கும்.
• உலர்ந்த ப்ளம்ஸை, மல்டி-வைட்டமின் மாத்திரை என்று சொல்லலாம். ஏனெனில் அந்த அளவில் அதில் வைட்டமின்கள் உள்ளது மேலும் இது செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது.
• பெர்ரிப் பழங்களில் ஒன்றான ப்ளூபெர்ரியிலும், உலர்ந்து இருக்கிறது. இந்த உலர் ப்ளூபெர்ரியில் வைட்டமின் சி, பி மற்றும் ஏ அதிக அளவில் நிறைந்துள்ளது. இது மைய நரம்பு மண்டலத்தின் சீரான இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாத சத்துக்கள் உள்ளடக்கியது.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடலூர் மாவட்டத்தில் தேர்ச்சி குறைந்தது வருத்தமளிக்கிறது


கடலூர், : கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைந்திருப்பது வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என்று முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் 40 ஆயிரத்து 237 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினார்கள். இவர்களில் 14 ஆயிரத்து 240 மாணவர்கள், 16 ஆயிரத்து 24 மாணவிகள் என மொத்தம் 30 ஆயிரத்து 264 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 75.21 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் 81.10 ஆக இருந்தது. கடந்த ஆண்டை விட 6 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.  
தமிழ் பாடத்தை தவிர்த்து இதர பாடங்களில் 2 ஆயிரத்து 785 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் ஒருவரும், கணிதத்தில் 688 பேர், அறிவியலில் 1370 பேர், சமூக அறிவியலில் 726 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அடிப்படையிலான மாவட்ட வாரியான தர வரிசைப் பட்டியலில் கடலூர் மாவட்டம் மாநில அளவில் கடைசி இடத்தை பெற்றுள்ளது.

சிறுபான்மையினரு­க்கு கல்வி உதவித்தொகை - தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின (இஸ்லாமியர்கள்,­ கிறிஸ்தவர்கள் ,புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சிகள்) மாணவ – மாணவிகளுக்கு 2013-2014 ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை அறிவிக்கப்பட்டு­ உள்ளது.

2013-14ம் கல்வியாண்டிற்கு­, புதிதாக உதவித்தொகை பெறவும் மற்றும் முந்தைய வருடம் பெற்று கொண்டிருக்கும் உதவித்தொகையை புதுப்பிக்கவும்­ விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின­்றன.

ஞாயிறு, 2 ஜூன், 2013

அபுதாபி அய்மான் சங்கம் நடத்தும் புனித மிஃராஜ் சிறப்பு சொற்பொழிவு!

இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 05/06/2013 புதன் கிழமை மஃரிப் தொழுகைக்குப் பின் அபுதாபி ஹம்தான் சாலையில் அமைந்துள்ள Ruchi Restaurant Banquet Hall Building (Al Mansouri Building) Flat No#1403 என்கிற முகவரியில் நடைபெற உள்ளது.
சிறப்புரை:

மெளலவி கோவை.அய்யூப்

நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துக் கொண்டு சத்திய செய்திகளை கேட்டுப் பயனுற அன்புடன் அழைக்கின்றோம்.

அய்மான் வெள்ளி விழா முழக்கம்:

ஏழைகளை நேசிப்போம்

எஸ்எஸ்எல்சி தேர்வு மறுகூட்டலுக்கு : 7ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பம்

எஸ்எஸ்எல்சி தேர்வில் மறுகூட்டலுக்கு பாட வாரிய தனித்தனியாக வரும் 7ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 31ம் தேதி வெளியான எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு முடிவுகளில் தேர்வுதாள் மறுகூட்டலுக்கு விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியே www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் வரும் 7ம் தேதி முதல் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

சனி, 1 ஜூன், 2013

கடுமையான பொருளாதார வீழ்ச்சியை நோக்கி இந்தியா!

புதுடெல்லி:இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2012-2013 நிதியாண்டில் மிகமோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய வீழ்ச்சி இதுவென்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.கடந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாகவே இருந்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் இது 4.8 வீதமாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வரை, இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியை 9 வீதமாகவே தக்கவைத்து வந்திருக்கிறது.

கொள்ளுமேடு முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவு!தம்மிஹா பர்வீன் முதலிடம்

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிகள் இன்று வெளியிடப்பட்டது இதில் நமதூர் முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி 95% தேர்ச்சியை கண்டுள்ளது.மொத்தம் 25 மாணவர்களும் 47 மாணவிகளும் தேர்வு எழுதியத்தில் 95% சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளனர்.

தம்மிஹா பர்வீன் S/O லியாகத் அலி (ஜாவித் அவர்களின் தங்கை) 425 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும் நுஸ்மா  என்ற மாணவி இரண்டாம் இடமும் சுந்தர் என்ற மாணவர் மூன்றாம் இடமும் பெற்றனர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை வாழ்த்துகிறது…
கொள்ளுமேடு டைம்ஸ்  இணையதளம்

லால்பேட்டை இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி.தேர்வில் 98 % தேர்ச்சி

லால்பேட்டை இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி  இவ்வருடமும் எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வில் 98 %  தேர்ச்சி பெற்றுள்ளது.
முதல் மதிப்பெண் :   M.S.அப்ரின் பானு 492
இரண்டாம் மதிப்பெண்:   A.R.. அஸ்மினாபர்வீன் 488
மூன்றாம் மதிப்பெண்:  A.V. ரிஸ்வான் பர்வீன் 485
M.A. சாபியத்து ரஃபியா   485
கணக்குகில் 7  மாணவர்களும் அறிவியல்லில் 11 மாணவர்களும் சமுக அறிவியல்லில் 4 மாணவர்களும்  100 க்கு 100 மதிப்பெண்   பெற்றுள்ளனர்   450 க்குமேல் 33 மாணவர்கள்.400 க்குமேல் 38 மாணவர்கள்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை வாழ்த்துகிறது…
கொள்ளுமேடு டைம்ஸ்  இணையதளம்

தமிழக மக்கள் தொகை 7 கோடியை தாண்டியது

தமிழக மக்கள் தொகை 7 கோடியை தாண்டி உள்ளது என்று இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் தமிழ்நாடு பிரிவு இணை இயக்குனர் கிருஷ்ணாராவ் தெரிவித்தார். இதுகுறித்து கிருஷ்ணாராவ் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:பத்தாண்டுகளுக்கு ஒரு முறை இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். தமிழகத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஊழியர்களும், 19 ஆயிரம் மேற்பார்வையாளர்களும் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 7 கோடியே 21 லட்சத்து 47 ஆயிரத்து 30 பேர் இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் 3 கோடியே 61 லட்சத்து 37 ஆயிரத்து 975 பேர் ஆண்கள், 3 கோடியே 60 லட்சத்து 9 ஆயிரத்து 55 பேர் பெண்கள்.