கடலூர், : கடலூர் மாவட்டத்தில் அனுமதி செய்யப்பட்ட 44 நர்சரி பள்ளிகள் இயங்குகிறதா? என அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
கட்டாயக்கல்வி உரிமைச்சட்ட நிபந்தனைகளின் கீழ் இயங்காத நர்சரி பள்ளிகள் தொடர்ந்து செயல்பட தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன் படி கடலூர் மாவட்டத்தில் 44 நர்சரி பள்ளிகள் இயங்க தடை விதிக்கப்பட்டு உள் ளது. இதையடுத்து பள்ளி கள் தொடர்ந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள் ளது. இதனால் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் மற்றும் 300 ஆசிரியர்கள் நிலை கேள்விக்குறியாகி இருக்கிறது.
அண்ணா கிராமம், பண்ருட்டி, நெய்வேலி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த ஆய்வு நடந்தது.
இதுகுறித்து மாவட்ட நர்சரி பள்ளிகள் அலுவலர் ராஜசேகர் கூறுகையில்: தடை உத்தரவை மீறி நர்சரி பள்ளிகள் இயக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிகளை கண்காணிக்க வட்டார கல்வி அலுவலரை அறிவுறுத்தியுள்ளோம்.
பள்ளி நிர்வாகங்கள் தங்களது குறைபாடுகள் மற் றும் கட்டிடங் களை முழுமைப்படுத்தி உரிய தகுதி சான்றிதழ்களை சமர்ப்பித்தால் பள்ளிகள் தடை உத்தரவு நீக்கப்பட்டு தொடர்ந்து நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.
எனவே தடை செய்யப்பட்ட பள்ளிகள் உடனடியாக முழு தகுதி அறிக் கையை மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கையாக வழங்க அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
இதற்கிடையே தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளிகள் சங்க மாவட்ட செயலாளர் டாக் டர் மோகனன் தலைமை யில் தடை செய்யப்பட்ட பள்ளி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ராஜேந்திரனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அதில், சில பள்ளிகளில் கட்டிட வேலைகள் நடைபெறுவதாலும், சான்றிதழ்கள் பெற காலதாமதம் ஏற்படுவதாலும் கால அவ காசம் வழங்க வேண்டுமென கூறியுள்ள னர்.
தடை செய்யப்பட்ட பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் நர்சரி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக