AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 28 டிசம்பர், 2011

வேலையில்லாத சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி


தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் வழங்கும்   வேலையில்லாத சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி திட்டம்
தமிழ்நாடுஅரசு  சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்  வேலையில்லாத சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி திட்டத்தினை வழங்குகிறது.
தமிழகத்தில் படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சிகள் திட்டத்தின் கீழ் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் நூலாம் தமிழக அரசின் நிதி உதவியோடு தமிழ்நாடு அரசு சாலை போக்குவரத்து நிறுவனம் சார்பாக இலகு ரக மற்றும் கனரக ஓட்டுனர் பயிசிகள் நடத்தப்பட உள்ளன.
நேர்காணல் மற்றும் பயிற்சி நடைபெறும் இடங்கள்
இலகு ரக வாகனம் ஓட்டுனர் பயிற்சிக்கு  நேர்காணல் மற்றும் பயிற்சி நடைபெறும் இடங்கள்
சாலை போக்குவரத்து நிறுவனம் (ஐ ஆர் டி)   தரமணி சென்னை113
தொலைபேசி எண் 044 -22541723
22542679 .  22541444                         
சாலை போக்குவரத்து நிறுவனம் ஓட்டுனர் பயிற்சிபள்ளி
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்  திருச்சி மண்டலம்
பெரிய மிளகுபாறை   திருச்சி  1
தொலைபேசி எண் 0431-2415551
பயிற்சிக்கான காலம்  ஆறு  வாரங்கள்
இலகு ரக வாகன ஓட்டுனர் பயிற்சிக்கான இதர தகுதிகள்
எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்கவேண்டும்.
கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி
நேர்காணல் பயிற்சி நடைபெறும் இடங்கள்
சாலை போக்குவரத்து நிறுவனம் (ஐ ஆர் டி)ஓட்டுனர் பயிற்சிப்பள்ளி பிரிவு
கும்மிடிப்பூண்டி  திருவள்ளூர் மாவட்டம் 601201
தொலைபேசி எண்  044 -27900328

சாலை போக்குவரத்து நிறுவனம் ஓட்டுனர் பயிற்சிபள்ளி
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்  திருச்சி மண்டலம்
பெரிய மிளகுபாறை   திருச்சி  1
தொலைபேசி எண்  0431 -245551
கனரக வாகன ஓட்டுனர் பயிற்சிக்காலம்
12 வாரங்கள்

கனரக வாகன ஓட்டுனர் பயிற்சிக்கான இதர தகுதிகள்
எட்டாம் வகுப்பில் தமிழை பாடமாகக்கொண்டு தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்
குறைந்த பட்ச எடை  50 கிலோ கிராம்
உயரம் 159.5  செமீ.
(01 -01 -2012 )  அன்று இலகு ரக வாகன ஓட்டுனர் உரிமம் psv  BADGE  பதியப்பெற்று ஒரு வருடம் நிறைந்திருக்க வேண்டும் (நேர்காணலின்போது அசல் ஓட்டுனர் உரிமத்தை கொண்டு வரவேண்டும்
இப்பயிற்சியில் சேர்வதற்கு கீழ்
க்கண்ட தகுதிகள் இருத்தல் வேண்டும்
1 பெற்றோர் குடும்ப ஆண்டு வருமானம்  ஒரு லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
2 பயிற்சி பெறுபவர்கள் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும் (இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள்,சீக்கியர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சிகள் )

சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் :
1. சமீபத்தில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்கள் (பாஸ் போர்ட் அளவு கொண்டது)
2. சாதி சான்றிதழ்
3. வருமான சான்றிதழ் ,
4. பள்ளி மாற்று சான்றிதழ்,
5. அனைத்து சான்றிதழ்களின் ஜெராக்ஸ் ஒரு செட் சமர்ப்பிக்க
ப்பட வேண்டும்.
குறிப்பு: நேர்காணல்  நடைபெறும்போது அசல் சான்றிதழ்களை
க் கொண்டு வரவேண்டும்

பயிற்சிக்கான தகுதிகள்
1. உடல் ஊனம் அங்க அசைவில் குறைபாடு நீண்ட நாள் நோய் ஆகிய குறைபாடுகள் இல்லாமல் இருத்தல் வேண்டும்
2. 01-01-2012  அன்று20  வயது நிறைவடைந்தவர்கள் விண்ணபிக்கலாம்.
3 .கண்ணாடி அணிந்தோ அணியாமலோ பார்வை திறன்    6 .6 மற்றும் நிற பேதம்( கலர் ப்ளைண்ட் ))குறைபாடு இல்லாமல் இருத்தல் வேண்டும்
கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி மற்றும் நேர்காணல்  கீழ் காணும் அரசு போக்குவரத்துக்கழக பயிற்சி மையங்களிலும் நடைபெறும்
1.விழுப்புரம் , 2.வேலூர், 3.திருச்சி(அரசு  விரைவு  போக்குவரத்து கழகம் ), 4.புதுக்கோட்டை, 5.கும்பகோணம், 6.காரைக்குடி, 7.சேலம், 8.தர்மபுரி, 9.ஈரோடு,  10.பொள்ளாச்சி, 11.மதுரை, 12.திருநெல்வேலி, 13.நாகர்கோவில், 14.திண்டுக்கல், 15.விருதுநகர்.
இப்பயிற்சிகள் மேற்கண்ட நிறுவனங்கள் மூலமாக அளிக்கப்படும் ஜனவரி ஐந்து மற்றும் ஆறு தேதிகளில் நேர்காணல் நடைபெறும். இப்பயிற்சியில் சேர விரும்புவோர் நேர்முகத்தேர்வுக்கு காலை ஒன்பது மணி முதல் பத்து மணிக்குள் மேலே தெரிவித்துள்ள முகவரிகளில் உள்ள சம்பந்தப்பட்ட பயிற்சி நிறுவனங்களுக்கு சான்றிதழ்களுடன் கலந்துகொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்/தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் / சம்பந்தப்பட்ட நிறுவனங்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

பேரீச்சம் பழத்தின் அற்புதமான பயன்கள்! – தினமும் சாப்பிட வேண்டிய ஒன்று


பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.
இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது.
சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.
கண்பார்வை தெளிவடைய:
வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
பெண்களுக்கு:
பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆண்களுக்கு: ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது.
சளி இருமலுக்கு:
பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சி நீங்க:
அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.
பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.
பேரீச்சைப் பழத்தின் இன்னும் சில நன்மைகள்:
* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.
* எலும்புகளை பலப்படுத்தும்.
* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.
*முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.
* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.
*பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.

செவ்வாய், 27 டிசம்பர், 2011

சிதம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

முல்லைப்பெரியாறு பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு? பலன் இருக்குமா?


மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 20 சதவீத ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக 4.5 சதவீதத்தை சிறுபான்மையினருக்குஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனால் இந்த சதவீதம் மிக மிக குறைவு என்று பல சிறுபான்மை அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளது!!
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட இந்த ஒப்புதலை அடுத்து, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அதற்கான அரசாணையையும் வெளியிட்டுவிட்டது. அதன்படி, 2012, ஜனவரி 1ம் தேதி முதல் இந்த ஒதுக்கீடு நடைமுறைக்கு வருகிறது.
இதன் மூலம், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் உட்பட தேசிய சிறுபான்மையின ஆணையம் வரையறுத்துள்ள மதம் மற்றும் மொழி அடிப்படையில் சிறுபான்மையினராகக் கருதப்படும் அனைத்து மாணவர்களும் பயன் பெறலாம்.
இந்த உள் ஒதுக்கீட்டின் மூலம், ஐஐஎம், ஐஐடி, ஏஐஐஎம்எஸ், என்ஐடி, என்ஐஎப்டி, என்ஐடீ, 44 மத்திய பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் சேர்க்கையில் சிறுபான்மையின மாணவர்கள் பயன்பெறலாம்.
மத்திய கல்வி நிறுவனங்களில் ஏற்கனவே நுழைவுத் தேர்வுக்கான அறிவிக்கைகள் வெளியாகிவிட்டதால், மாணவ சேர்க்கையில் வரும் கல்வியாண்டில் இந்த இட ஒதுக்கீட்டு மாற்றத்தை அனைத்து கல்வி நிறுவனங்களும் நடைமுறைப்படுத்த ஏதுவாக இருக்கும்.
மத்திய அரசின் இந்த முயற்சி எந்த அளவிற்கு சாத்தியம் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!!

ஆசிக் ஆலி - ஹதிஜா திருமணம்

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}                                                      வாழ்த்துக்களுடன்…
                                         இணையதளம்
  


இறுதி வேதம் உங்களை அழைக்கிறது கருத்தரங்கம்-கண்காட்சி

ஆயங்குடியில் இறுதி வேதம் உங்களை அழைக்கிறது கருத்தரங்கம்-கண்காட்சி

                     Thanks: lalpetexpress

திங்கள், 26 டிசம்பர், 2011

சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்


மத்திய  இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையினரை குறிப்பாக முஸ்லிம்களை வஞ்சித்த காங்கிரஸ் அரசை கண்டித்தும், முல்லை பெரியாறு அணை பிரச்னையில் தமிழக உரிமையை நிலை நாட்டிட மறுத்து மெத்தன போக்குடன் நடக்கும் மத்திய அரசை கண்டித்து, தமிழகம் வந்த பிரதமருக்கு தமுமுக வினர் சென்னையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி ஏராளமானோர் கைதாகினர்.

இதேபோல் காரைக்குடி வந்த பிரதமருக்கு தமுமுக வினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி ஏராளமானோர் கைதாகினர்.
சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்


சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்


சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்



சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்


சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

காரைக்குடியில் ..........

சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

சென்னை மற்றும் காரைக்குடியில் தமுமுக நடத்திய கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

முல்லை பெரியாறு அணையினைக் காக்க மெரினா கடற்கரையில் பேரணி பொதுக்கூட்டம். மமக பொதுச்செயலாளர் பி. அப்துல்சமது பங்கேற்பு


முல்லை பெரியாறு அணையினைக் காக்க மெரினா கடற்கரையில் பேரணி பொதுக்கூட்டம். மமக பொதுச்செயலாளர் பி. அப்துல்சமது பங்கேற்பு

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

காணாமல் போன இந்திய ஹஜ் பயணிகள்: விசாரணை தொடங்கியது


ஜெத்தா:இந்தியாவின் மேற்கு வங்காளத்தை சேர்ந்த பெரும்பாலான ஊனமுற்றோர்களை உள்ளடக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட ஹஜ் யாத்ரிகர்கள், கடந்த மாதம் இறுதியில் தங்கள் ஹஜ்ஜை நிறைவேற்றிய பின் காணாமல் போனதை தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான வழக்கு அறிவிப்பை இந்திய அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் ஜெத்தாவில் உள்ள ஹஜ் மற்றும் இந்திய தூதரகத்தின் தலைவர் பி.எஸ்.முபாரக் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்; ‘மேற்கு வங்காளத்திற்கான கடைசி விமானம் டிசம்பர் 5-ஆம் தேதி அதன் தலைநகர் கொல்கத்தாவிற்கு புறப்பட்டு சென்றது. ஆனால் காணமால் போன அனைவரும் முர்ஷிதாபாத் நகரத்தை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு சவூதி அரேபியாவை குறித்து ஒன்றும் அறியாதவர்கள். இவ்வருடம் இந்தியாவில் உள்ள 21 மையங்களில், அனைத்து மாநிலங்களிலிருந்தும் கோட்டாவிற்கு அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றது, ஆனால் மேற்கு வங்காளத்தில் இருந்து மட்டும் கோட்டவிற்கு கீழே விண்ணப்பங்கள் இருந்ததால் அனைவரும் அனுமதி பெற்றுள்ளனர். எண்ணற்ற விண்ணப்பங்கள் உள்ள இடத்தில் அவர்கள் ஊனமுற்றோர்களா? என்று கண்டறிவது அத்தனை எளிதல்ல’ என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினையை பாரளுன்மன்றத்திற்கு கொண்டு வந்த கம்யயூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மொய்னுள் ஹசன் பொறுப்பற்று பாராமுகமாக செயல்படும் தேசிய மற்றும் மாநில ஹஜ் கமிட்டியின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்தியாவின் மத்திய ஹஜ் கமிட்டியை சேர்ந்த மூத்த தலைவர் ஷாகிர் ஹுசைன், இத்தனை எண்ணிக்கையை உடைய ஊனமுற்றோர்ளை பயணிக்க அனுமதி அளித்த மேற்கு வங்காளத்தின் மாநில ஹஜ் கமிட்டி மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த பாஸ்போர்ட் அலுவலகத்தின் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் இவர்களை பற்றிய வெளியான தகவலின் படி இவர்களில் பெரும்பாலானோர் ஊனமுற்றோர்கள் என்றும், அவர்கள் ஹஜ் விசாவில் பயணிக்க வைத்தது ஹஜ் செய்வதற்காக அல்ல, அவர்கள் ஊனத்தை பயன்படுத்தி பிச்சை எடுக்க வைக்கும் நோக்குடனே ஹஜ்ஜிற்கு அனுப்பட்டுள்ளதாகவும், இதனால் ஹஜ் செய்த முடிந்த பின் இவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டோ அல்லது தலைமறைவாகி இருக்கவோ அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும் செய்தி வெளியாகி உள்ளது.
இது போன்ற தேவையற்ற குழப்பத்தை தவிர்க்கவே, ஹஜ் மற்றும் உம்ரா விசாவின் பேரில் நடத்தப்படும் சுரண்டலை தடுக்க கடந்த வருடம் சவூதி அமைச்சகம் அனைத்து ஹஜ் மற்றும் உம்ரா விசாவை வழங்கும் அலுவலகங்களுக்கு மிகவும் வயதான மற்றும் ஊனமுற்றோர்கள் புனித சடங்கை செய்ய திறனற்றவர்கள் என்ற அறிவிப்பை வழங்கி இருந்தது.
புனித யாத்திரிகையின் பேரில் ஊனமுற்றோர்களை வைத்து தொழில் செய்யும் சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளபட வேண்டும் என்று மத்திய ஹஜ் கமிட்டியின் தலைமை நிர்வாகி ஷாகிர் ஹுசைன் மற்றும் துணை தலைவர் ஹசன் அஹ்மத் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

எழுதி படிக்கும் குழந்தை அறிவாற்றல் மிக்க மாணவனாக வளரும்!! – ஆராய்ச்சி தகவல்


நார்வே நாட்டின் ஸ்தவஞ்சர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஆன்னி மான்ஜென் மற்றும் பிரான்சின் மார்செல்லி பல்கலைக்கழக நரம்பியல் நிபுணர் ஜீன் லக் வேலே இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டனர். இதற்காக இரு குழுக்களாக குழந்தைகள் பயன்படுத்தப்பட்டனர்.
புதிய வார்த்தைகள் கொடுக்கப்பட்டன. ஒரு குழு கையால் எழுதி படிக்கவும், மற்றொரு குழு கம்ப்யூட்டரில் டைப் செய்து படிக்கவும் அறிவுறுத்தப்பட்டனர்.
ஒரு வார கால ஆய்வுக்கு பின், கையால் எழுதி படித்த மாணவர்கள் சிறந்த ஞாபக சக்தியுடன் வார்த்தைகளை நினைவு கூர்ந்தனர். ஆனால், கம்ப்யூட்டரில் டைப் செய்தவர்களால் வார்த்தைகளை ஞாபகத்திற்கு கொண்டு வர முடியவில்லை.
“எழுதும் போது மூளையின் உணரும் பகுதியில் எழுத்துக்களின் உருவம் படிந்து விடுகிறது. ஆனால், டைப் செய்யும் போது அவ்வாறு படிவதில்லை. டைப் செய்வது படிப்பதற்கு வலு சேர்ப்பதில்லை.”
இதேபோல், உடல் அசைவுகளுடன் கூடிய பேச்சுகள், விளக்கங்கள் எளிதில் மூளையில் படிந்து விடுகின்றன. உடல் அசைவுகள் இல்லாத பேச்சுகள், விளக்கங்கள் எளிதில் மூளையில் படிவதில்லை.
மற்றொருவர் உடல் அசைவுகளுடன் பேசும் போது எளிதில் விஷயங்கள் மனதில் பதியும். அதையே நாம் நம் உடல் அசைவுகளுடன் செய்யும் போது பதிவதில்லை போன்றவை ஆய்வில் தெரிய வந்துள்ளன.

வெள்ளி, 23 டிசம்பர், 2011

உலகின் மிகமுக்கிய நவீன நகராக புனிதமக்கா நகரம் மாறிவருகின்றது.

உலகின் மிகமுக்கிய நவீன நகராக புனித மக்கா நகரம் மாறிவருகின்றது,
இதன்விளைவாக புனித மக்கா நகரில் பல பாரிய வேலைத்திட்டங்கள் 
நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக புனித மக்கா நகரின் ஆளுநர் கலாநிதிஉஸமா அல்-பஆர் தெரிவித்துள்ளார்.மக்கா நகரின்புனித ஹரம் பள்ளிவாசலின் மேலதிக வேலைத்திட்டங்கள் மற்றும் அல்-ஹூஜூனிலிருந்து புனித ஹரம் பள்ளிவாசல்வரையான இரு சுரங்க நடைபாதைகள் உட்பட வேலைத்திட்டங்களின் பெரும்பகுதி நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் மக்கா நகரின் ஆளுநர் தெரிவித்தார்.யாத்திரீகர்களுக்கு புனித ஹரம் ஷரீபுக்கு 
அருகே தங்குமிடங்களை அமைக்கும் ஜமல் உமர் வேலைத்திட்டம் சிறிதுகாலத்தில் முடிவடைவடையவுள்ளது.தற்போது புனித ஹரம்ஷரீபிலிருந்துதூரத்திலேயே யாத்தீரீகர்களின் தங்குமிடங்கள் காணப்படுவதுடன்,ஜமல் உமர்வேலைத்திட்டம் முடிவடைந்தால் யாத்திரீகர்களுக்கு ஹரம்ஷரீபுக்கு மிக அருகேயே தங்குமிடங்களை வழங்கமுடியுமாயிருக்கும் எனவும், மக்கா நகரினுள் புகையிர சேவையை வழங்கும் 23பில்லியன் சவூதிரியால்கள் செலவான பாரிய திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுவருவதாகவும் கலாநிதி அல்-பஆர் மேலும் தெரிவித்துள்ளார்.


மக்கா நகரில் இரண்டு,மூன்று மற்றும் நான்கு வட்டப்பதைகள் விரிவுபடுத்தப்பட்டுவருவதுடன் இதற்காக 200மில்லிய சவூதிரியால்கள் செலவிடப்பட்டுள்ளன.உம் ஜூத் பகுதியில் வசிக்கும் மக்கா நகரவாசிகளுக்கு 4000வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பணிக்கு மொத்தமாக 800மில்லியன் சவூதிரியால்கள் செலவிடப்பட்டுள்ளன. ஸபாவிலிருந்து மர்வாவிக்கு யாத்திரீகர்கள் வசதியாகச் செல்லும்பொருட்டு இரண்டு மாடிகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளதாகவும் மக்காவின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிராக இந்து முன்னணி சுவரொட்டி ! காவல் துறை உதவியோடு முறியடித்த INTJ & TMMK

முஸ்லிம்களுக்கு   எதிராக இந்து முன்னணி சுவரொட்டி !
காவல் துறை உதவியோடு முறியடித்த  INTJ & TMMK 




தனிப்பட்ட மனிதர்களின் , தனிப்பட்ட குழுக்களின் தவறுகளை இஸ்லாத்தின் தவறாக சித்தரித்து ,முஸ்லிம்களை தீவிரவாதிகளாக ,கெட்டவர்களாக் சித்தரிக்கும் போக்கு உலக அளவில் யூத சியோனிச சக்திகளாலும் ,இங்கு நமது நாட்டில் பார்ப்பன பனியா கும்பலும் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.


அந்த பார்ப்பன பணியா கும்பல் தமிழகத்தில் இந்து முன்னணி என்று செயல் பட்டு வருகிறார்கள்.சென்னை விருகம்பாக்கத்தில் யாரோ ஒரு தனி நபர் செய்த  அரசு நில ஆக்கிரமிப்பை இஸ்லாமிய சமுதாயத்தின் தவறாக சித்தரித்து, அதை மீட்ட அரசை பாராட்டி  போஸ்டர் அடித்து   பேனர் வைத்து பொதுக் கூட்ட ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. இதைக் கண்ட இயக்க சகோதர்கள் கொதித்து போய் காவல் துறையினரை அணுகி உடனடியாக இவை அகற்றப் பட வேண்டும் ! இந்த பாராட்டுக் கூட்டம் நிறுத்தப் பட வேண்டும் ! இலையென்றால் மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கும்! அரசியல்வாதிகளிடம் இருந்து அரசு நிலங்களை மீட்கும் போதெல்லாம் நாங்கள் 'இந்துக்களிடம் இருந்து சொத்தை மீட்ட அரசுக்கு நன்றி' என்று நாங்கள் போஸ்டர் போட்டால் என்னவாகும்? என கேட்டு பிரச்னை எழுப்பிய பின் காவல் துறை உயர் அதிகாரிகள் உடனடியாக நேரில் வந்து போஸ்டர் பேனர்கள் அகற்றப் பட்டு கூட்டமும் ரத்து செய்யப் பட்டது. தமுமுக மற்றும் எம்.ஜி.ஆர்.நகர் இதஜ வினரின் முயற்சியால் இந்து முன்னணியின் முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப் பட்டது. நாம் விழிப்போடும், இணைப்போடும் இருந்தால் இறையருளால் எதிர்களின் சூழ்சிகளை எளிதில்   முறியடிக்கலாம் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று. 

கேரள அரசை கண்டித்து மமக பேரணி



முல்லை பெரியார் ஆணை விவகாரம். கேரளா அரசை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் இரு சக்கர வாகன பேரணி  நடத்தினர். இந்த பேரணிக்கு  தமுமுக மாநில செயலாளர் இ. உமர்  தலைமை  தாங்கினார். தமுமுக பொது செயலாளர் செ. ஹைதர் அலி பேரணியை தொடங்கி வைத்து கலந்து கொண்டார். தமிழக கேரளா எல்லையான ஆத்துப்பாலத்தில் ஆரம்பித்த பேரணிக்கு காவல்துறை தடை விதித்ததால் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற 300க்கும் மேற்பட்ட தமுமுக மற்றும் மமக வினர் கைது செய்யப்பட்டனர்.

சிறுபான்மையினருக்கான உள்ஒதுக்கீடு ஒரு மோசடி - பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டும் போராட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சிறுபான்மையினருக்கு பிற்படுத்தபட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில்  4.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு வழங்கப்படும் என நேற்று மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவு ஒரு ஏமாற்று வித்தையாகும்.

2004ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு அளிக்கப்படுமென வாக்குறுதி அளித்தது. 2004 மே மாதம் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைக்கபட்டபோது அதன் குறைந்த பட்ச செயல் திட்டத்திலும் சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக ஒரு ஆணையம் அமைக்கப்பட்டு ஆறு மாதங்களுக்குள் அதன் அறிக்கை பெறப்பட்டு இடஒதுக்கீடு அளிக்கப்படுமென அறிவிக்கப்பட்டது. இதன் பிறகு அக்டோபர் 2004ல் மத்திய அரசு நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் மத மற்றும் மொழி சிறுபான்னைமயினருக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் மே 2007ல் தனது அறிக்கையை சமர்பித்தது. இந்த ஆணையத்தின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதை மன்மோகன் சிங் அரசு தாமதப்படுத்தியது. 2009 மே மாதம் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் வந்த போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் முஸலிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுமென வாக்குறுதி அளிக்கப்பட்டது. மீண்டும் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்தது. இதன் பிறகும் மன்மோகன் சிங் அரசு மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. இந்த ஆணையத்தின் அறிக்கை பத்திரிகைகளில் வெளியான பிறகு டிசம்பர் 2009ல் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது உ.பி. உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வரும் சூழலில் சிறுபான்மையினருக்கு 4.5 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்படுமென மத்திய அமைச்சரவை நேற்று முடிவு செய்துள்ளது. மிஸ்ரா ஆணையததின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மிஸ்ரா ஆணையம் தனது பரிந்துரையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 15 விழுக்காடு மதவழி சிறுபான்மையினருக்கு அளிக்க வேண்டும். அதில் 10 விழுக்காடு முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டுமென குறிப்பிட்டார்கள். இவ்வாறு இடஒதுக்கீடு அளிப்பது அரசியலமைப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கு முரணானது இல்லை என்றும் ஆணையம் தெரிவித்தது.  ஆனால் இவ்வாறு இடஒதுக்கீடு அளிப்பது மத்திய அரசுக்கு சிரமமாக இருந்தால் மண்டல் ஆணைய பரிந்துரையின் படி பிற்படுத்த்ப்பட்ட வகுப்பினருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில் மதவழி சிறுபான்மையினருக்கு 8 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் அதில் 6 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டுமென பரிந்துரைச் செய்தது. ஆனால் தற்போது மத்திய அரசு மிஸ்ரா ஆணையத்தின் இந்த  இரண்டு பரிந்துரைகளையும் ஏற்றுக் கொள்ளாமல்  இதர பிற்படுத்தப்பட்டோர பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து சிறுபான்மை வகுப்பினருக்கும் 4.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு அளிக்க முடிவுச் செய்துள்ளது. இந்த உத்தரவின் படி இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள முஸ்லிம்கள், கிறிஸ்த்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள் முதலியோருக்கு இந்த உள்ஒதுக்கீடு அளிக்கப்படும். இத்தகைய இடஒதுக்கீட்டினால் எந்தவொரு பலனும் முஸ்லிம்களுக்கும் இதர சிறுபான்மை மக்களுக்கும் கிடைக்கப் போவதில்லை. மிஸ்ரா ஆணையம் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு தனியாக 6 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க வேண்டுமென பரிந்துரைத்தையும் மத்திய அரசு புறந்தள்ளி முஸ்லிம்களை ஏமாற்றியுள்ளது.

மன்மோகன் சிங் அரசு முஸ்லிம்களுக்கு தொடர்ந்து இடஒதுக்கீடு பிரச்னையில் செய்துவரும் துரோகத்தை கண்டிக்கும் வகையிலும் 4.5 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற ஏமாற்று வித்தையை உடனடியாக வாபாஸ் வாங்க கோரியும் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க கோரியும் தமிழகத்திற்கு வரும் பிரதமருக்கு சென்னையிலும் காரைக்குடியிலும் கறுப்புக்கொடி காட்டும் பேராட்டத்தை தமுமுக நடத்தும்.

பஹ்ரைன் மண்டல தமுமுக செயற்குழு...

பஹ்ரைன் மண்டல தமுமுக செயற்குழு வெள்ளிக்கிழமை அன்று பஹ்ரைன் மண்டல தற்காலிக தமுமுக தலைவர் ராஜகிரி யூசுப் தலைமையில் குதைபியா தமுமுக மர்கஸில் மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இறையருளால் நடந்தது. இதில் மண்டல தமுமுக செயலாளர் டாக்டர் ஜகபர் அலி, மண்டல பொருளாளர் நாகை தமீமுன் அன்சாரி, மண்டல துணைச் செயலாளர் தேங்காய்ப்பட்டிணம் சக்கீர், மக்கள் தொடர்பு மன்னை அலி, ஹபீபுல்லாஹ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பொதக்குடி ஆசிக், ஏர்வாடி பஷீர், நாகூர் எஸ்எம்ஏ காதர் ஆகியோர் கலந்து கொண்டனர். இச் செயற்குழுவில் வரும் காலங்களில் தமுமுக பஹ்ரைனில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இச்செயற்குழுவிற்கு மற்றுமொரு செயலார் கரம்பை ஜெக்கரியா பஹ்ரைனில் இல்லாத காரணத்தினாலும், மற்றும் சில நிர்வாகிளுக்கு பணியினாலும் கலந்து கொள்ள இயலாமைக்கு அனுமதி பெற்றுக் கொண்டனர். அவர்களின் ஆலோசனைகள் தொலைபேசி வாயிலாக தெரிவித்தனர்.

இரவு 10 மணியளவில் இச்செயற்குழு மண்டல செயலாளர் டாக்டர் அலியின் துஆவுடன் நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ் நாம் நாடிய அனைத்து நல்ல காரியங்களையும் நமக்கு இலகுவாக்கி நம்மை வெற்றியில்பால் ஒன்றிணைத்து வைப்பானாக ஆமீன்...

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு குழுவுடன் மமக தலைவர்.

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் சுப. உதயகுமாரும், தலைவர் மனோ தங்கராஜும் கன்னியாகுமரியில் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களை சந்தித்து பேசினார்கள்.  மனிதநேய மக்கள் கட்சி தொடந்து கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புக்கு ஆதரவு அளிப்பதாக பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்தார். மேலும் வரும்  29 ஆம் தேதி நாகர்கோயிலில் நடைபெறும் மாநாட்டிற்கு வருகை தருமாறும் அழைப்பு விடுத்தார்கள்.

வியாழன், 22 டிசம்பர், 2011

நிடாகத் விழிப்புணர்வு முகாம்


சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் அந்நாட்டின் மைந்தர்களை குறிப்பிட்ட சதவிகிதம் வேலைக்கு அமர்த்த கட்டாயப்படுத்தும் சட்டமே "நிடாகத் திட்டம்" சவூதிஅரேபியாவின் தொழிலாளர் அமைச்சகத்தின் மூலம் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் செயல் திட்டம் கடந்த 26-11-2011 முதல் கட்டாய அமுலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பெருகி வரும் தனது நாட்டு மக்களின் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க தொழிலாளர் மற்றும் சமூக நல விவகார அமைச்சர் ஆதில் ஃபக்கிஹ் அவர்கள் இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.

இச்செயல் திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர் அமைச்சகம் வணிக துறைகளில் இந்நாட்டினரை சதவிகித அடிப்படையில் பணியில் அமர்த்த உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் சவூதியில் உள்ள நிறுவனங்கள் வண்ணங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன நான்கு விதமான வண்ணங்களில் அதாவது சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் (பிளாட்டினம்) மிகச் சிறந்த என நிர்ணயித்துள்ளது. இதில் சிவப்பு நிற அந்தஸ்தில் உள்ளகம்பெனிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இதன் மூலம் அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளார்கள்.

இந்தத்திட்டத்தின் கீழ் பாதிப்புக்குள்ளகி இருக்கும் இந்தியர்கள் அவர்களின் நிலையை அறிந்து கொள்ளும்வகையில் அவர்களின் (இக்காமா) குடியுரிமை அடையாள அட்டை எண் மூலம் தொழிலாளர் அமைச்சக இணையத்தளத்தில் உதவியுடன்  அவர்களுக்கு விளக்கம் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகமாக நிடாகத் விழிப்புணர்வு முகாம் 5 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறுகிறது. கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் இந் நிகழ்ச்சியில் பலதரப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர் தொடர்ந்து எதிர்வரும் 24-12-2011ம் தேதி வரை நடைபெரும் இந்த முகாமில் பல லட்சம் தொழிளாலர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரியாத் நகரில் உள்ள நெஸ்டோ ஹைப்பர் மார்க்கெட்டில் அந்நிறுவனத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந் நிகழ்ச்சியை ரியாத் மண்டலத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், Pleaceindia மற்றும் Sauditimes Magazines ஒறுங்கிணைத்து மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது.
நிடாகத் விழிப்புணர்வு முகாம்
நிடாகத் விழிப்புணர்வு முகாம்

இரத்த வங்கி ”நற்சான்றிதழ்”


கடந்த 02.12.2011 அல் அய்ன் மண்டல த.மு.மு.க சார்பில் அமீரக 40வது தேசிய தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்டஇரத்ததான முகாமை பாராட்டி அல் அய்ன் இரத்ததான வங்கி நற்சான்றிதழ் வழங்கியுள்ளது. அச்சான்றிதழை அல் அய்ன் மண்டல தலைவர் சகோ. தோப்புத்துறை. J.S. சேக் தாவுது அவர்களும்,   மருத்துவ அணி செயலாளர் சகோ. கீழை அ. முஹம்மது இபுனு அவர்களும்மண்டல முன்னாள் தலைவரும்மூத்த நிர்வாகியுமான சகோ. தோப்புத்துறை அ. சர்புதீன் அவர்களும் பெற்றுக் கொண்டார்கள்.

புகழ் அனைத்தும் இறைவனுக்கே!!இரத்ததான வங்கி ”நற்சான்றிதழ்”

மூளைக்கு தீங்கு விளைவிக்கும் 10 செயல்கள்!


மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், செரிமானம், இதயத்துடிப்பு, கொட்டாவி, போன்ற செயற்பாடுகளையும்,விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.இதில் மூளையை பாதிக்கும் விஷயங்களும் இருக்கின்றன.
காலை உணவு..
காலையில் உணவு உண்ணாமல் இருப்பதன் மூலம் ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.
அதிகமாகச் சாப்பிடுவது..
மிக அதிகமாகச் சாப்பிடுவதன் மூலம் இரத்த நாளங்கள் இறுகி மூளையின் சக்தி குறைந்து போகிறது.
புகை பிடித்தல்..
புகை பிடிப்பதால் மூளை சுருக்கமும் அல்ஸைமர்ஸ் வியாதி வருயதற்கு காரணமாகிறது
சர்க்கரை சாப்பிடுதல்..
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.
சுவாசித்தல்..
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
தூக்கமின்மை..
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
போர்வையால் மூடிக்கொண்டு தூங்குவது..
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
நோயுற்ற காலம்..
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
மூளைக்கு வேலை..
மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது,மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
பேசாமல் இருப்பது..
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.
“உங்க மூளையை இனி நல்லா பாதுகாத்துகோங்க”

மமக நடத்தும் ‘உள்ளாட்சித் தேர்தல் வெற்றி & அரசியல் எழுச்சி‘ பொதுக்கூட்டம்! டிச.25இல் நடைபெறுகிறது!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்அரசியல் பிரிவான மனித நேய மக்கள் கட்சியின் சார்பில், உள்ளாட்சித் தேர்தல் வெற்றி & அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் 25.12.2011 அன்று இரவு 07.00 மணிக்கு, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெறுகிறது. 

தமுமுக மற்றும் மமக நகரத் தலைவர் எம்.கே.ஜாஹிர் ஹுஸைன் தலைமை தாங்குகிறார். மமக மாவட்டச் செயலாளர் பீரப்பா, தமுமுக மாவட்டச் செயலாளர் நவாஸ், ஹாங்காங் தமுமுக நிர்வாகி ஹாஜா அரபி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். 

மமக மாவட்டத் தலைவர் ஆஸாத் வரவேற்புரையாற்றுகிறார். தமுமுக மாநில துணைச் செயலாளர் எம்.தமீமுன் அன்சாரி, மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத், மாநில செயற்குழு உறுப்பினர் என்.ஏ.தைமிய்யா ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். 

நகர தமுமுக செயலாளர் ஃபிர்தவ்ஸ் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொள்ளுமாறு மனித நேய மக்கள் கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.   மமகவின் உள்ளாட்சி தேர்தல் வெற்றி பொதுக்கூட்டம் இறைவனின் உதவியால் சிறப்பாக நடக்க வாழ்த்துகிறேன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக சட்டபேரவையின் மதிப்பிட்டு குழு ஆய்வு - பேராசிரியர் ஜவாஹிருல்லா பங்கு கொண்டார்


கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக சட்டபேரவையின் மதிப்பீட்டு குழு
இன்று ஆய்வுகளை மேற்கொண்டது. இதில் பேராசிரியர் 
ஜவாஹிருல்லா பங்கு கொண்டார்.



நெல்லை மாவட்டதில் தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வு


நெல்லை மாவட்டதில் தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வு


நெல்லை மாவட்டதில் தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வு

நெல்லை மாவட்டதில் தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வு

நெல்லை மாவட்டதில் தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வு

நெல்லை மாவட்டதில் தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வு

நெல்லை மாவட்டதில் தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வு

புதன், 21 டிசம்பர், 2011

மலேசிய ஏர்போர்டில் தமிழில் அறிவிப்பு...

கோலாலம்பூர் : மலேசிய சர்வதேச விமான நிலையத்தில் அறிவிப்புக்கள் அனைத்தும் தமிழில் செய்யப்பட ஏற்பாடு செய்யப்பட்டு வரவதாக மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் காங் ஷோ ஹா தெரிவித்துள்ளார். மலேசியாவில் அனைத்து சமூக மக்களும் வசித்து வருவதால் அவர்களின் தரம் குறித்த விழிப்புணர்வை அனைவரிடமும் ஏற்படுத்த இது போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த அறிவிப்புக்கள் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மலேசியாவில் வசிக்கும் 27 மில்லியன் மக்களில் 8 சதவீதத்தினர் தமிழர்களாக உள்ளனர். மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்களாக உள்ளனர். இங்கு பணிபுரிபவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்களாக உள்ளனர். அவர்கள் ஆங்கிலம் தெரியாதவர்களாக இருப்பதால் சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களில் இருந்து வருபவர்களுக்காக பொது மக்களின் கோரிக்கையின் பேரில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.