AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 30 மே, 2013

கொள்ளுமேடு அல்-அமான் பள்ளியில் 25% சதவீத இடஒதுக்கீடு...



SSLC தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள முக்கிய இணைய முகவரிகள்.

இந்த இணைப்புகளில் ஏதேனும் ஒன்றை கிளிக் செய்து நுழையுங்கள்.

http://tnresults.nic.in/

http://dge1.tn.nic.in/

http://dge2.tn.nic.in/

http://99likes.blogspot.com/

http://dge3.tn.nic.in/ 

http://tnpubliclibraries.gov.in/

மாணவர்கள் வெற்றி பெற 

வாழ்த்துக்களுடன்.. .
கொள்ளுமேடுடைம்ஸ் இணையதளம்  

அன்பையும் சமாதானத்தையும் கற்க கல்வி அனைவருக்கும் கடமை : UAE-ன் இளவரசர் ஷேக் முகமது

பாகிஸ்தானின் பெண் கல்வி முன்னேற்றத்திர்க்காக பேசியதற்காக தாலிபானால் தலையில் சுடப்பட்ட மலளா யூசுப்சய் தனது பெற்றோரொடுடன் உம்ரா செல்லும் வழியில் மாண்பிமிகு ஐக்கிய அரபு எமிரேட்சின் இளவரசர் மற்றும் துணை ராணுவ தலைமை அதிகாரி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களை சந்தித்து பேசினார் 
தான் உயிருக்கு போராடும் போது  மருத்துவ சிகிச்சைக்காக தனி மருத்துவ குழுவை அனுப்பிவத்தமைக்கும், உதவி செய்தமைக்கும், தனது கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகமைக்கும் நன்றி கூறினார்.
ஷேக் முகமது மலளாவின் உறுதியையும்  சிரமங்களை கடந்து அவரது உன்னதமான செய்தி முன்னோக்கி செல்ல தொடர்ந்து முயற்சிப்பதையும் பாராட்டினார். மேலும் அன்பையும் சமாதானத்தையும் பெறவும் கற்கவும்  கல்வி அனைவருக்கும் கடமை என்றும், மலளாவின் நிலைபாடு இந்த உலகத்துன் கல்விக்கான குறிப்பிடத்தக்க மயமாக இருக்கும் என்று வாழ்த்தினார். மன்னிப்பு மற்றும் சகிப்புத்தன்மை மதிப்புகளை  ஊக்குவிக்க மலளா தொடர்ந்து பணியாற்ற கேட்டு கொண்டார்.
ஷேக் முகமது ஆதரவற்ற பெண் மீதான தாக்குதலை கண்டித்ததோடு மட்டும் இல்லாமல் மலளாவின் மீதான தாக்குதல் சிறந்த எதிர்காலத்தை தேடும் ஒவ்வொரு பெண்ணின் மீதான தாக்குதல் என்று கண்டித்தார்

புதன், 29 மே, 2013

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியாகிறது


தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 27-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 12-ந்தேதி வரை நடைபெற்றது. சுமார் 5 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். தற்போது தேர்வு முடிவுகளுக்காக மாணவ-மாணவிகள் காத்திருக்கிறார்கள். 

தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணியில் அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. மதிப்பெண்கள் சரிபார்த்தல், அவற்றை கம்ப்யூட்டரில் பதிவு செய்தல் போன்ற பணிகள் இறுதி கட்டத்தை எட்டி முடிவடையும் தருவாயில் உள்ளது. 

அப்பாவி முஸ்லீம் இளைஞர்களை கைது செய்வதை நிறுத்த வேண்டும்: சீமான் கோரிக்கை


நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக மாநிலம் மல்லேஸ்வரத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டில், குறிப்பாக கோவையில் வசிக்கும் முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதும், பிறகு அவர்கள் தொடர்பற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்யப்படுவதும் சமீப நாட்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 17-ம் தேதி நடந்த மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 14 முஸ்லீம் இளைஞர்கள் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக கர்நாடக காவல் துறையின் பிடியில் உள்ளனர்.

லால்பேட்டை நகர தமுமுக சார்பில் பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான நல்லொழுக்க பயிற்ச்சி (தர்பியா) முகாம்.........!!


லால்பேட்டையில் நகர தமுமுக மாணவரணியின் சார்பில் மாணவர்களுக்கான தர்பியா முகாம் 25,26-05-2013 சனி மற்றும் ஞாயிறு இருதினங்கள் நல்லொழுக்க தர்பியா முகாம் JMAதிருமணம் மண்டபத்தில் நடைபெற்றது.

மாநில தலைவர் ஜே.எஸ்.ரிபாஃயி மாநில செயலாளர் மண்டலம் ஜெய்னுல் ஆபுதீன்,மிஸ்பாஹுல் ஹுதா,சதகத்துல்லா உமரி,கோவை ஜெய்னுல் ஆபுதீன் ஆகியோர்”இளைய தலைமுறையினரிடம் இருக்க வேண்டிய நற்பண்புகள்” குறித்துவகுப்பெடுத்தார்கள் . 

செவ்வாய், 28 மே, 2013

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு: 10-ம் தேதி திறக்கப்படும்


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆண்டு இறுதி தேர்வு முடிந்ததும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்து ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. 
இந்நிலையில் ஒரு மாத காலமாக மக்களை வாட்டி எடுத்த அக்னி நட்சத்திரம் இன்று முடிந்தது. ஆனாலும் கோடை வெப்பம் தொடர்வதால் பள்ளிகளுக்கான விடுமுறை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 3-ம் தேதிக்கு பதிலாக ஜூன் 10-ம்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. 

வெள்ளி, 24 மே, 2013

சவுதி அரேபியாவில் இருந்து 56,700 இந்தியர்கள் நாடு திரும்ப முடிவு : அமைச்சர் சல்மான் குர்ஷித்


புதுடெல்லி: சவுதி அரேபியாவில் இருந்து 56 ஆயிரத்து 700 இந்தியர்கள் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்து அங்குள்ள இந்திய தூதரகத்தில் பெயர் பதிவு செய்துள்ளனர். இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். வேலை வாய்ப்புகளில் 10 சதவீதத்தை சவுதி இளைஞர்களுக்கு ஒதுக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அண்மையில் உத்தரவிட்டது.

வியாழன், 23 மே, 2013

இன்ஷா அல்லாஹ் லால்பேட்டையில் மாணவர் நல்லொழுக்க பயிற்ச்சி(தர்பியா) முகாம்.


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
லால்பேட்டை நகர தமுமுக நடத்தும் பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான நல்லொழுக்க பயிற்ச்சி (தர்பியா) முகாம்..........!!

இன்ஷா அல்லாஹ்...
வருகின்ற சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்களுக்கு நலலொழுக்க தர்பியா முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது...

இதில் முதல் நாள் வரும் சனி கிழமை காலை சுபுஹு தொழுகைக்கு பிறகு மாணவர்களுக்கான தர்பியா தொடங்குகிறது...

இரண்டாம் நாள ஞாயிற்று கிழமை மாலை 3 மணி முதல் 5 மணிவரை பெண்களுக்கான சிறப்பு பயான் நடைபெறுகிறது....

புதன், 22 மே, 2013

லால்பேட்.நெட் இல்லத்திருமணம்

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்
{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில்ஒன்றிணைத்து வைக்கட்டும்}   
வாழ்த்துக்களுடன்.. .
கொள்ளுமேடுடைம்ஸ் இணையதளம்  
லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம்  

புனித ஹஜ் பயணிகளுக்கு மாவட்டங்களில்பயிற்சி முகாம் நடத்துவோருக்கான பயிற்சி கூட்டம்


சென்னை, மே.22-2013-ம் ஆண்டு புனிதஹஜ்ஜுக்குச் செல்லும் பயணிகளுக்கு தமிழகத்தில் உள்ளஅனைத்து மாவட்டங்களிலும்பயிற்சி அளிப்போருக்கானபயிற்சி கூட்டம், தமிழ்நாடு ஹஜ்சர்வீஸ் சொசைட்டி வளாகத்தில்அதன் கவுரவ பொதுச் செயலாள ரும், தமிழ் மாநில ஹஜ் குழுஉறுப்பினருமான அல்ஹாஜ் எச்முஹம்மது அப்ஸல் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் தமிழ் மாநிலஹஜ் குழு நிர்வாக அதிகாரிஹாஜி முஹம்மது காஸிம்வரவேற்றுப் பேசினார்.தமிழ் மாநில ஹஜ் குழுமுன்னாள் உறுப்பினர் திருப்பூர்சத்தார், முதன்மைப் பயிற்சியாளர்கள் வாணியம்பாடி கல்லூரிபேராசிரியர் ஹாஜி லியாகத்அலிஜான், ஓசூர் உர்தூ பள்ளிதலைமையாசிரியர் ஹாஜிஹபீபுர் ரஹ்மான் ஆகியோர்மாவட்ட பயிற்சியாளர்களுக்குபயிற்சியளித்தனர்.

திங்கள், 20 மே, 2013

எவரெஸ்ட் சிகரம் ஏறி சவுதி பெண் சாதனை

காட்மாண்டு : உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் ஏறி சவுதி அரேபிய பெண் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரைச் சேர்ந்த ரஹா மொஹாரக் (25) துபாயில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர் பெண்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள நாட்டிலிருந்து எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி மிகக்குறைந்த வயதில் எவரெஸ்ட் ஏறிய அரபு நாட்டவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இவருடைய குழுவில் 4 பேர் இடம் பெற்றிருந்தனர்.

லால்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி துவங்க தாமதப்படுத்தினால் போராட்டம் நகர த.மு.மு.க செயற்குழு கூட்டத்தில் முடிவு..........!!

லால்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி துவங்க தாமதப்படுத்தினால் போராட்டம் நகர த.மு.மு.க செயற்குழு கூட்டத்தில் முடிவு.

லால்பேட்டையில் நகர த.மு.மு.க செயற்குழு கூட்டம் நகர அலுவலகத்தில் 19.05.2013 அன்று இரவு நடைபெற்றது.நகர தலைவர் ஹாரிஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழுவில் 2 வார்டு த.மு.மு.க.தலைவர் புஹாரி இறைவசனம் ஓதி துவக்கி வைத்தார்மாவட்ட பொருளாளர் முஹமது அய்யுப், மாவட்ட முன்னால் ம.ம.க.செயலாளர் யாசர் அரபாத் மனித நேய மக்கள் கட்சியின் லால்பேட்டை பேரூராட்சி மன்ற துணை தலைவர் அஹ்மத் அலி, த.மு.மு.க. மாவட்ட துணை செயலாளர்மௌலவி அப்துல் சமது, ம.ம.க. மாவட்ட துணை செயலாளர் முஹமது ஆசிக், நகர த.மு.மு.க செயலாளர் நூருல் அமீன், நகர ம.ம.க செயலாளர் ஆசிக் நூர், நகர பொருளாளர் நவ்வர் ஹுசைன் மற்றும் நகர துணை நிர்வாகிகள்,வார்டு நிர்வாகிகள் செயர்குழுஉறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

ஞாயிறு, 19 மே, 2013

ஷார்ஜாவில் அனுமதியின்றி தங்கியிருந்த 170 பேர் கைது

அபுதாபி, மே 19-

ஷார்ஜாவில் அனுமதியின்றி தங்கியுள்ள வெளிநாட்டினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உள்துறை மற்றும் வெளியுறவு துறை அமைச்சகங்கள் உத்தரவிட்டிருந்தன.

இதனையடுத்து, ஷார்ஜா நகராட்சி மற்றும் வெளியுறவு துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் நடத்திய அதிரடி சோதனையில் 170 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 100 பேர் உரிய ஆவணங்களின்றி ஷார்ஜாவில் தங்கி தெரு வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.

53 பேர் வெளிநாட்டினருக்கான குடியுரிமை சட்டத்தை மீறியவர்கள். 17 பேர் சட்டபுறம்பான வகையில் கூலி தொழிலாளிகளாக வேலை செய்தவர்கள்.

சனி, 18 மே, 2013

நிடாகத் சட்டம் - சவூதியில் அறிவிக்கப்பட்டுள்ள கருணை காலத்தையும் பொது மன்னிப்பையும் முறையாக பயன்படுத்திக் கொள்ளும் படி இந்தியச் சமூகத்தைக் குறிப்பாக தமிழ்ச் சமூகத்தைக் கேட்டுக் கொள்கிறோம்


சவூதியில் உள்ள அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களையும் நிறுவனங்களையும் நிடாகத் சட்டத்தின் கீழ் கொண்டு வரும் திட்டத்தை சவூதி அரேபியா தொழிலாளர் நலத்துறை அமுல் படுத்தி அதை நடைமுறைப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மெற்கொண்டு வருகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் பல லட்சம் வெளிநாட்டவர்கள் குறிப்பாக இந்தியர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் நிலை இருந்தது. தீர்வுக்கான பல் வேறு உயர்மட்ட ஆலோசனைகள் சவூதி அதிகாரிகளுடன் தூதரக ஆதிகாரிகள் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டனர். தூதரக அதிகாரிகள் இந்தியச் சமுகத்தின் தமுமுக உட்பட பல சமுக நல ஆர்வளர்களிடம் பல்வேறுகட்ட ஆலாசனைகளை மேற்கொண்டர் வழங்கப்பட்ட அனைத்து ஆலோசனைகளையும் ஏற்று மத்திய அமைச்சர் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. மத்திய அமைச்சர் குழுவும் சவூதி அமைச்சகத்திடம் பேசி சுமூக தீர்வுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவை, இரண்டு புனிதப் பள்ளிகளின் பராமரிப்பாளரும், சவூதி அரேபிய மன்னருமான அப்துல்லாஹ் அவர்களால் ஏற்கப்பட்டு கருணை காலம் மற்றும் மன்னிப்பு தீர்வாகக் கிடைக்கப்பட்டுள்ளன. எல்லாப்புகளும் இறைவனுக்கே.
சவூதிக்கு முறையாக வந்துள்ள அனைவரும் இந்த பொது மன்னிப்பை பயன்படுத்தி தங்களது பணிகளை உறுதி செய்து கொள்ளவும் அல்லது எந்த கட்டணமும் தண்டனையும் நிபந்தனையும் இன்றி தாயகம் செல்லவும் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
சவுதி அரசாங்கத்தால் 10.05.2013 அன்று அறிவிக்கப்பட்ட சலுகைகளின் குறிப்பிட்ட விவரங்கள்.

SDPI யின் காட்டுமன்னார்குடி தொகுதி செயற்குழு கூட்டம்


SDPI யின் காட்டுமன்னார்குடி தொகுதி செயற்குழு கூட்டம் 17.5.2013 அன்று மாலை 5 மணிக்கு லால்பேட்டை நகர SDPI அலுவலகத்தில் நடைப்பெற்றது.
காட்டுமன்னார்குடி தொகுதி தலைவர் அப்துல் ஹமீது தலைமை தாங்கினார் லால்பேட்டை, கொள்ளுமேடு, எள்ளேரி மற்றும் ஆயங்குடி யிலிருந்து தொகுதி செயர்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

செவ்வாய், 14 மே, 2013

அரசு உத்தரவு வெளியீடு ஒரே பள்ளியில் 3 ஆண்டுக்கு மேல் வேலை பார்த்தால் டிரான்ஸ்பர்

சென்னை: அரசு பள்ளிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் ஆசிரியர்கள் பணியாற்றக் கூடாது என்ற உத்தரவு இந்த ஆண்டும் தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆசிரியர் நலனுக்காக வெளிப்படையான ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு பொதுமாறுதல் வழிகாட்டி விதிமுறைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும். பள்ளிக்கல்வி துறை கட்டுப்பாட்டில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் இடையே 201314ம் கல்வியாண்டில் பொது மாறுதல்கள் வழங்க கீழ்க்காணும் நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

* 3 ஆண்டுகளுக்கு மேல் அரசு பணியாளர்கள் ஒரே இடத்தில் பணியாற்ற கூடாது என்ற பொதுவான ஆணை உள்ளது. இது 201314ம் கல்வியாண்டிலும் தொடரும். ஒரு ஆசிரியருக்கு டிரான்ஸ்பர் தருவதற்காக காரணம் ஏதுமின்றி வேறொரு ஆசிரியரை டிரான்ஸ்பர் செய்யக்கூடாது.

திங்கள், 13 மே, 2013

ஹூரூப் கொடுக்கப்பட்டவர்களின் பாஸ்போர்ட் திருப்பிக் கொடுக்கப்படுகிறது.


யாரெல்லாம் ஹூரூப் கொடுக்கப்பட்டிருந்ததோ அவர்களின் பாஸ்போரட் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது அந்த வகையில் தூதரகத்திற்கு 15 ஆயிரம் பாஸ்போர்ட் வந்துள்ளது.
அந்த பாஸ்போர்ட்டின் எண்கள் தூதரக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதை சரிபார்த்து தூதரகம் சென்று பெற்றுக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறோம்.

13/05/2013 முதல் 18/05/2013 வரை பாஸ்போர்ட் வழங்க உள்ளது நேரம் மாலை 6 மணி முதல் 9 மணி வரை.

தங்களிடம் உள்ள பழைய பாஸ்போர்ட் காப்பியை எடுத்துச் செல்ல வேண்டும். அவரவர் போஸ்ட் அவரவரிடம் வழங்கப்படும்.

ஒருவருடைய பாஸ்போர்ட் அடுத்தவர்கள் பெறமுடியாது.

அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகளை தடை செய்ய அரசு தயங்காது: முதல்வர் எச்சரிக்கை:

சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது : 

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகளை தடை செய்ய தமிழக அரசு தயங்காது. தமிழக அரசும், போலீசும் திட்டமிட்டு வழக்கு தொடர்வதாக ராமதாஸ் பேசுவது அபத்தமானது. ஜாமினில் வெளிவந்த பின்னரும் பா.ம.க.,வினரை தூண்டிவிடும் வகையில் பேசி வருகிறார். ராமதாஸ் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்படும். பா.ம.க.,வின் சட்டவிரோத நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ள முடியாது. ராமதாஸ் கைது செய்யப்பட்ட பின்னர் பொதுச்சொத்துக்களுக்கு பா.ம.க.,வினர் சேதம் ஏற்படுத்தினர். கலவரத்தின் போது சேதமான சொத்துக்களுக்கு பா.ம.க.,விடமிருந்து நஷ்ட ஈடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேதம் குறித்து கணக்கிடப்பட்ட பின்னர் பா.ம.க.,விடமிருந்து நஷ்ட ஈடு பெறப்படும்.

இணையதளம் மூலம் சொத்து விவரங்களை நகல் எடுக்கும் வசதி: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, மே 13-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

1981-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆடம்பர வரிச் சட்டத்தின் கீழ், தற்போது ஓட்டல்களில் வாடகைக்கு விடப்படும் அறைகளின் கட்டணம் 199 ரூபாய் வரையில் இருந்தால் வரி விலக்கும், 200 ரூபாய் முதல் 499 ரூபாய் வரையில் இருந்தால் 5 விழுக்காடு வரியும், 500 ரூபாய் முதல் 999 ரூபாய் வரையில் இருந்தால் 10 விழுக்காடு வரியும், 1000 ரூபாய் மற்றும் அதற்கு மேலிருந்தால் 12.5 விழுக்காடு வரியும் ஆடம்பர வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட ஆடம்பர வரி விலக்கிற்கான வாடகை உச்சவரம்பு 199 ரூபாய் என்பதை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் வரப் பெற்றுள்ளன. இந்தக் கோரிக்கையினை ஏற்று, ஆடம்பர வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெறுவதற்கான உச்சவரம்பு 199 ரூபாயிலிருந்து 499 ரூபாயாக உயர்த்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதனால் 500 ரூபாய்க்கு கீழ் வாடகை உள்ள அறைகளை வாடகைக்கு எடுக்கும் சாதாரண, நடுத்தர மக்கள் பயன் பெறுவர்.

சனி, 11 மே, 2013

முஸ்லிம் சிறைவாசிகளை விடுவிக்க வலியுறுத்தி இ. யூ. முஸ்லிம் லீக் தூதுக்குழு பிரதமரை சந்திக்கும் தேசிய செயற்குழு கூட்ட முடிவை விளக்கி இ. அஹமது, பேராசிரியர் கே.எம்.கே. பேட்டி


சென்னை, மே 11 நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிறை வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும், தமிழக முஸ்லிம் இளைஞர் கள் விசாரணை என்ற பெயரால் சித்ர வதைக்கு ஆளாக்கப் பட்டுள்ளதை பற்றி மத்திய அரசின் கவனத் திற்கு கொண்டு செல்லவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூதுக்குழு பிரதமரை சந்தித்து முறையிடுவது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்டம் இன்று மே 11 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை பூந்தமல்லி நெடுஞ் சாலையில் உள்ள ஹோட்டல் அபூபேலஸ் நீலகிரி அரங்கில் நடைபெற்றது.

அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவு

காட்டுமன்னார்கோவில், : பிளஸ் 2 தேர்வு  முடிவுகள் வெளியானதில் காட்டுமன்னார்கோவில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்தது. இந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளான குமராட்சி 53, லால்பேட்டை 71, மேலவன்னியூர் 45, டி.நெடுஞ்சேரி 23, ஸ்ரீ நெடுஞ்சேரி 63, கானூர் 62, கண்ட மங்கலம் 85, கஞ்சங்கொல்லை 60, ரெட்டியூர் 36, மாமங்கலம் 31, முட்டம் 27, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 25, பெண்கள் மேல்நிலைப்பள்ளி 48 ஆகிய சதவிகிதங்களில் அரசு பள்ளிகள் தேர்ச்சி பெற்றுள்ளது.

சென்னையில் இஸ்லாமிய கூட்டமைப்பு நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம் !

இஸ்லாமிய இளைஞர்களை பொய் வழக்கில் கைது செய்யும் காவல்துறை கண்டித்தும் கர்நாடகா காவல்துறையின் பாசிச வெறியின் உச்சத்தை கண்டித்தும் அனைத்து இஸ்லாமிய கூட்டமைபின் எற்பாட்டில் அனைத்து இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களும் அரசியல் கட்சியின் தொண்டர்களும் பெரும் திறலாக கலந்து கொண்டு தன் கண்டனத்தை பதிவு செய்தார்கள்.94433794295493393421089163518

வியாழன், 9 மே, 2013

சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பும் 18,000 இந்தியர்கள்

புதுடெல்லி: சவுதி அரேபியாவில் அந்நாட்டு அரசின் புதிய சட்டத்தால் வேலை இழக்கும் 18 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர். இதற்காக அவர்கள் இந்திய தூதரகத்தில் அவசரகால சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.சவுதி அரேபியாவில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க அந்நாட்டு அரசு, Ôநிதாகத்Õ என்ற புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, அங்கு உள்ள தனியார் நிறுவனங்கள் வெளிநாட்டினர் 10 பேரை பணி அமர்த்தினால், ஒரு சவுதி குடிமகனுக்கு வேலை வழங்க வேண்டும். இந்த விகிதாச்சாரத்தை அமல்படுத்துவதால், பல கம்பெனிகளில் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் வேலை இழக்கின்றனர். தற்போது 2 லட்சம் இந்தியர்கள் சவுதியில் பணிபுரிகின்றனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் ஜெயசூர்யா, அபினேஷ் மாநிலத்திலேயே முதலிடம்

சென்னை: பிளஸ் 2 தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் ஜெயசூர்யா(திருச்செங்கோடு வித்யா விகாஸ்), அபினேஷ்(கிரீன் பார்க் பள்ளி) ஆகியோர் 1189/1200 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றனர். 1188 மதிப்பெண்கள் பெற்று நாமக்கல் மாணவன் பழனிராஜ்(திருச்செங்கோடு வித்யா விகாஸ்), ஓசூர் மாணவி அகல்யா(விஜய் வித்யாலயா பள்ளி) ஆகியோர் மாநிலத்திலேயே 2வது இடத்தை பிடித்தனர். 1187/1200 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே 9 பேர் 3வது இடத்தை பிடித்துள்ளனர். மாணவிகள் ராஜேஸ்வரி(மதுரை), கலைவாணி(நாமக்கல்), கண்மணி(நாமக்கல்), மனோதினி(நாமக்கல்), ரவீனா(கிருஷ்ணகிரி), நிவேதிதா(செங்கல்பட்டு), பூஜா(பொன்னேரி) ஆகியோரும், மாணவர்கள் விஷ்ணுவர்த்தன்(நாமக்கல்), முத்து மணிகண்டன்(திருவள்ளூர்) ஆகியோரும் மாநிலத்திலேயே 3வது இடத்தை பிடித்துள்ளனர்.

புதன், 8 மே, 2013

SMS மூலம் +2 தேர்வு முடிவுகள்

சென்னை: +2 மாணவர்கள் தேர்வு முடிவுகளை   SMS மூலம் தெரிந்தது கொள்ள ஏற்பாடு செய்யபட்டுள்ளது. 09282232585 என்ற எண்ணுக்கு SMS அனுப்பி முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். TNBOARD  <பதிவுஎண் > <பிறந்த தேதி > என டைப்செய்து 10 மணிக்குமேல் அனுப்பவேண்டும். எடுத்துக்கட்டு : TNBOARD 56890 05/08/1995 என டைப்செய்து அனுப்ப வேண்டும்.

புற்று நோயை தடுப்பதற்காக குட்கா, பான்மசாலா புகையிலைக்கு தடை: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, மே. 8-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

டெங்கு, சிக்குன் குனியா, பன்றிக் காய்ச்சல் போன்ற பல நோய்களை கண்டறியும் பரிசோதனை வசதிகளை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் எனது தலைமையிலான அரசு ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், பல்வேறு வகையான வைரஸ் நோய்களைக் கண்டறியக் கூடிய செரோடைப்ஸ் சோதனைகளை ஒரே இடத்தில் பரிசோதிக்கும் வசதி தமிழ் நாட்டிலேயே சென்னையில் உள்ள அரசு கிங் இன்ஸ்டிட்யூட்டில் மட்டுமே உள்ளது. இதனால், அசாதாரண வைரஸ்களால் ஏற்படும் நோயினை கண்டுபிடிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.

சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய ஐந்து மருத்துவத் துறைகளைக் கொண்டது இந்திய மருத்துவம் ஆகும்.

பிறந்த தினத்திலே மரணிக்கு குழந்தைகள்:இந்தியா முதலிடம்!


புதுடெல்லி:பிறந்த 24 மணிநேரத்தில் குழந்தைகள் மரணிப்பதில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. ஆண்டுக்கு 3 லட்சம் குழந்தைகள் பிறந்த தினத்திலேயே இறப்பதாக அமெரிக்காவில் இயங்கும் சேவ் த சில்ட்ரன் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி அதிகரித்து, மக்களின் வாங்கும் சக்தி பெருகி வரும் நிலையில் இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளை காப்பாற்ற முடியவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகில் பிறந்த தினத்தில் மரணிக்கும் குழந்தைகளில் 29 சதவீதமும் இந்தியாவிலாகும். குறைமாத பிரசவம், சுத்தமின்மை, தாயின் உடல் நிலை சீர்கெடுதல், பருவ வயதை அடையும் முன்பே கர்ப்பமடைதல் ஆகியன முக்கிய காரணமாகும். இந்தியாவில் 47 சதவீதம் பெண்களுக்கு 18 வயது ஆகும் முன்பே திருமணம் நடைபெறுவதாகவும், பிறக்கும் குழந்தைகளில் 28 சதவீதம் குழந்தைகளுக்கு எடைக் குறைவு இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

செவ்வாய், 7 மே, 2013

மன்பஈ உலமா பேரவை துவக்கம்



 லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வாரில் இன்று 07.05.2013 மன்பஈ உலமா பேரவை துவக்க விழா இனிதே நடைபெற்றது. நிகச்சி்யில் நூற்றுக்கணக்கான மன்பஈ உலமாக்கள் பங்கேற்ப்பு.

கட்டாய திருமண பதிவுச் சட்டத்தில் மாற்றம் கோரும் முஸ்லிம்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் – தமிழக அரசு!


முஸ்லிம்களின் கோரிக்கையை ஏற்றுகட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலிக்கும் என வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.வி. ரமணா தெரிவித்துள்ளார்
சட்டப்பேரவையில் நேற்று(திங்கள்கிழமை) நடைபெற்ற வணிகவரி மற்றும்பதிவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, “கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கட்டாய திருமணப்பதிவுச் சட்டத்தினால் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள ்ளனர். ஹிந்து கோயில்களில் நடக்கும் திருமணங்களை, கோயில் நிர்வாகம் வழங்கும் சான்றிதழைக்கொண்டு பதிவு செய்ய முடிகிறது. அதுபோல தமிழக அரசின் தலைமை ஹாஜியால் நியமனம் செய்யப்பட்டவர்கள் மூலம் நடக்கும் திருமணங்களையும் பதிவுசெய்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றார்.

நமதூர் ஓர் வபாத் செய்தி

நமதூர்  சின்ன தெருவில்  இருக்கும் மர்ஹும் ஹிடயதுள்ள அவர்களின் மகன் முஹம்மது ரபீக் இன்று பிற்பகல் 3:45 க்கு வபாத் ஆகி    விட்டார்கள் அன்னாரின் ஜனாஸா  நல்லடக்கம் இன்ஷா அல்லா நாளை காலை நடைபெறும்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி ஊன் ....

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின்  பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள வேண்டும் என.  கொள்ளுமேடுடைம்ஸ் இணையதளம்  பிரார்த்தனை செய்கிறது.

இந்தியத் தூதரகம் சவூதியில் உள்ள பல்வேறு நிறுவனங்களை தொடர்பு கொண்டு நிடாகத் திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நம் தேசத்தவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்க ஏற்பாடுகள் செய்து வருகின்றது அதன் பட்டியல்...


சவூதி அரேபியா தொழிலாளர் நலத்துறையின் நிடாகத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு பணியாளர்களை குறைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை சவூதி அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் நிடாகத் திட்டத்தின் கீழ் வராத நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களை அந்த திட்டத்தின் வரையறைக்குள் வர மூன்று மாத கால அவகாசம் மன்னர் அப்துல்லாஹ் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்திற்குள் தங்களின் தகுதிக்கேற்ப பணிகளை தேடி தகுதி உள்ள நிறுவனங்களில் சேர்ந்து கொள்ளவேண்டும் என்று நம் சமூகத்தை கேட்டுக் கொள்கிறோம்.
சவூதியில் நிடாகத் திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டு வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள், நிடாகத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள அதாவது பச்சை வண்ண தகுதி உடைய நிறுவனங்களில் சேர்ந்து கொள்ள தொழிலாளர் நலத்துறையிலிருந்து இணையத்தளம் வெளியிடப்பட்டுள்ளது http://www.redyellow.com.sa/ இந்த இணையத்தளத்தில் (சவூதியில் உள்ளவர்கள் மட்டும்) உங்களின் முழுத்தகவல்களையும் CV உட்பட உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ளவும்.. அதே தளத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ள விபரமும் உள்ளன. தகுதி உடையவர்கள் நல்ல நிறுவனம் மற்றும் பணிகளை தேர்வு செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

சிதம்பரத்தில் ஜமாஅத்துல் உலமா நடத்திய ஷரிஅத் மாநாடு!


ஜமாஅத்துல் உலமா பேரவையின் சார்பில் ஷரிஅத் விளக்க மாநாடு சிதம்பரத்தில் நடைப்பெற்றது.
சிதம்பரம் லால்கான் பள்ளிவாசலில் நடைப்பெற்ற இக்கூட்டத்திற்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவரும் கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவருமான எம்.எஸ்.. முஹம்மது யூனுஸ், அல்ஹாஸ் அறக்கட்டளை நிர்வாகி எஸ.ஓ. செய்யது ஆரிஃப், பள்ளி நிர்வாகிகள் அஹ்மதுல்லாஹ், காதர் முஹ்யத்தீன் முன்னிலை வகித்தனர். இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினர்.
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் முதல்வர் மௌலானா ஏ.நூருல் அமீன் ஹஜ்ரத் அவா்களின் பயான்

சென்னை அடையாறு பெரியபள்ளிவாசல் தலைமை இமாம்,மவ்லானா மவ்லவி ஹாபிஃழ் அல்ஹாஜ் M.சதீதுத்தீன் ஹஜ்ரத் பாகவி அவர்களின் பயான்

லால்பேட்டை மதரஸாவின் பேராசிரியருமான மௌலானா ஏ.இ.எம். அப்துல்ரஹ்மான் ஹஜ்ரத் அவா்களின் பயான்

வெள்ளி, 3 மே, 2013

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகிறது

சென்னை: கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் மே 9ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகிறது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் உடனடியாக அறிந்து கொள்ள வசதியாக தேசிய தகவல் மையத்தில் 16 மைய கனிணிகள் அமைக்கப்பட்டுள்ளன. http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in, http://dge3.tn.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

வெளிநாட்டு சிறையில் 6500 இந்தியர் : வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: வெளிநாட்டு சிறைகளில் 6500க்கும் அதிகமான இந்தியர்கள் அடைபட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்தியர் சரப்ஜித்சிங் கடந்த வாரம் சக கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டார். கோமா நிலைக்கு சென்ற அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதை தொடர்ந்து அன்னிய நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர் பற்றிய விவரங்களை இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொச்சியை சேர்ந்த மனித உரிமை பாதுகாப்பு இயக்கம் என்ற என்ஜிஒ அமைப்பு எடுத்த முயற்சியின் பலனாக இந்த தகவல் கிடைத்துள்ளது.

சட்டம் ஒழுங்கு என்ன விலை..?

கடந்த சில நாள்களாக வட மாவட்டங்களில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களைப் பார்க்கும் போது தமிழகத்தில் அரசு எந்திரம் முற்றிலும் பழுதடைந்து விட்டது என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.

எங்களது கடலூர் மாவட்டத்தை பெறுத்த வரையில் குறைந்த பட்சம் 50 கிமீ தூரம் பயணிக்க வேண்டுமெனில்,நீண்ட காத்திருப்புக்கு பின்னர் தான் பயணிக்க இயலும் என்ற நிலை இருக்கிறது. லால்பேட்டையில் வாடகை கார்கள் தொழிலில் ஈடுபட்ட ஒருவரிடம் நேற்று நான் பேசினேன்.. 

அவர் கூறினார்... நமது பகுதியிலிருந்து சென்னைக்கு செல்ல வேண்டுமென்றால்.. சேத்தியாதோப்புக்கு சென்றவுடன் காவல்துறையினர் வாகனங்களை காத்திருக்க சொல்கின்றனர்.வடலூர் மார்க்கமாக செல்ல வேண்டி வரக்கூடிய குறைந்தபட்சம் 15 அல்லது 20 வாகணங்கள் ஒன்று சேர்ந்த உடன் முன்னும் பின்னுமாக காவல்துறை வாகனங்கள் சூழ இந்த வாகன அணிவகுப்பு வடலூரை சென்றடைகிறது.

கொள்ளுமேடு அல்அமான் பள்ளியில் 2013-14 கல்வி ஆண்டிற்காண அட்மிஷன் நடைபெறுகிறது

“கற்பது கடமை படிப்பது இனிமை”
அன்புடையிர்.., 
கொள்ளுமேடு அல்அமான் பள்ளியின் 2013-2014 கல்வி ஆண்டிற்காண அட்மிஷன் வரும் மே 13முதல் நடைபெறுகிறது. அல் அமான் பள்ளியின் சிறப்பு அம்சங்கள் தரமான கல்வி, கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகள்,ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள்,பொது அறிவுத்திறன்,மார்க்க கல்வி,யோக பயிற்சி,விளையாட்டு பயிற்சி மற்றும் பல சேவைகள் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு தொடர் கண்காணிப்பு, அனுபவமிக்க ஆசிரியைர்கள், திறமையான நிர்வாகம் கொண்டு செயல்படுகிறது.

தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை

சென்னை : இளைஞர்கள் மட்டுமல்லாது பெரியவர்கள், சிறியவர்கள் என்று அனைவரும் பயன்படுத்தும் தளமாக பேஸ்புக், டுவிட்டர் உள்ளது. கம்ப்யூட்டரில் மட்டுமே அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த இணையதளங்களை, இப்போது மொபைல் போன்களில் கூட பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இளைஞர்கள் மத்தியில் பேஸ்புக் பயன்படுத்தும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பேஸ் புக்கை நல்ல நோக்கத்திற்காகவும் சிலர் பயன்படுத்துகின்றனர். 

வியாழன், 2 மே, 2013

சவூதி அரேபியாவில் கனமழை: திடீர் வெள்ளத்தில் 13 பேர் பலி, பலரை காணவில்லை.

தெற்கு அரேபியாவில் கனமழை பெய்ததால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் 13 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் பலரை தேடும் பணி நடைபெறுகிறது. தெற்கு அரேபியாவில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த மழை பெய்துள்ளது. அதன் காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் 13 பேர் பலியாகியுள்ளனர்.


நால்வருக்கும் அதிகமானோர் காணாமல் போனதாக தேடப்பட்டு வருகின்றனர். இதற்கு முன்னர் 2011ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலூர் கோட்டை பள்ளிவாசலில் தொழுகை நடைபெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டபேரவையில் மமக வலியுறுத்தல்


25.04.2013 அன்று தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் கேள்வியும் அமைச்சரின் பதிலும்
வேலூர் கோட்டையிலே அகழ்வாராய்ச்சித் துறையினரால் பராமரிக்கப் படக்கூடிய கோட்டையிலே சர்ச் இருக்கிறது. அங்கே வழிபாடு நடக்கிறது. அங்கே ஜகதீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. அங்கேயும் வழிபாடு நடக்கிறது. அங்கே இருக்கக்கூடிய வரலாற்றுச் சிறப்புமிகுந்த பள்ளிவாசலிலும் வழிபாடு நடத்தவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாண்புமிகு திரு முனைவர் வைகைச் செல்வன் (தொல்லியல் துறை அமைச்சர்): வேலூரில் இருக்கின்ற பழமையான அந்த நினைவுச் சின்னத்தை பற்றி ஒரு கேள்வியை மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் எழுப்பினார்கள். வேலூர் என்றாலே ஜெயில் ஞாபகம் வரும் மற்றொன்று வெயில் ஞாபகம் வரும் இருந்தாலும் கூட அவர் எழுப்பியிருக்கக்கூடிய கேள்வியில் நியாமான கோரிக்கை இருப்பின் மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய தலைமையிலான அரசு பரிசீலனை செய்யும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 1 மே, 2013

J.சாதிக்அலி-நூருல்பஹிமா திருமணம்

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}  வாழ்த்துக்களுடன்..  கொள்ளுமேடுடைம்ஸ் இணையதளம்