AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 30 மே, 2013

அன்பையும் சமாதானத்தையும் கற்க கல்வி அனைவருக்கும் கடமை : UAE-ன் இளவரசர் ஷேக் முகமது

பாகிஸ்தானின் பெண் கல்வி முன்னேற்றத்திர்க்காக பேசியதற்காக தாலிபானால் தலையில் சுடப்பட்ட மலளா யூசுப்சய் தனது பெற்றோரொடுடன் உம்ரா செல்லும் வழியில் மாண்பிமிகு ஐக்கிய அரபு எமிரேட்சின் இளவரசர் மற்றும் துணை ராணுவ தலைமை அதிகாரி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களை சந்தித்து பேசினார் 
தான் உயிருக்கு போராடும் போது  மருத்துவ சிகிச்சைக்காக தனி மருத்துவ குழுவை அனுப்பிவத்தமைக்கும், உதவி செய்தமைக்கும், தனது கொள்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகமைக்கும் நன்றி கூறினார்.
ஷேக் முகமது மலளாவின் உறுதியையும்  சிரமங்களை கடந்து அவரது உன்னதமான செய்தி முன்னோக்கி செல்ல தொடர்ந்து முயற்சிப்பதையும் பாராட்டினார். மேலும் அன்பையும் சமாதானத்தையும் பெறவும் கற்கவும்  கல்வி அனைவருக்கும் கடமை என்றும், மலளாவின் நிலைபாடு இந்த உலகத்துன் கல்விக்கான குறிப்பிடத்தக்க மயமாக இருக்கும் என்று வாழ்த்தினார். மன்னிப்பு மற்றும் சகிப்புத்தன்மை மதிப்புகளை  ஊக்குவிக்க மலளா தொடர்ந்து பணியாற்ற கேட்டு கொண்டார்.
ஷேக் முகமது ஆதரவற்ற பெண் மீதான தாக்குதலை கண்டித்ததோடு மட்டும் இல்லாமல் மலளாவின் மீதான தாக்குதல் சிறந்த எதிர்காலத்தை தேடும் ஒவ்வொரு பெண்ணின் மீதான தாக்குதல் என்று கண்டித்தார்
இஸ்லாமில் பெண் கல்வி என்பது அடிப்படை அவசியம் என்பதை வலியுறுத்தியதோடு,  ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பெண் கல்வியில் தொடர்ந்து முனேற்ற நாடக விளங்கும் என்பதை குறிப்பிட்டார்.
மேலும் பெண் கல்வி, சமூக நீதி , மரியாத மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றிற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரின் விருப்பத்தையும் பகிர்ந்து கொண்டார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்துள்ளார்கள். இங்கே மிக்கியமான அனைத்து அமைச்சரவைகளிலும் பெண்கள் இடம்பெற்று சாதித்து வருகிறார்கள் என்றார்.
இந்த சந்திப்பில் ஷேக் ஹம்தான், ஷேக் சாயித் , ஷேக் நஹ்யான், ஷேக் ஓமர் என பலர் கலந்து கொண்டார்கள்.
மலளா பேசுகையில், நான் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்,ஆனால் நீங்கள் உங்கள் இலக்கை அடைய செல்வம் மற்றும் ஓய்வு தேவையில்லை.நான் பெண்கள் கல்வி உரிமை எழுத கேட்டபோது நான் தைரியமாக முன்வரவேண்டீருந்தது. மேலும் நான் பெண்கள் கல்வி உரிமை பற்றி பேசா சொன்னபோது பல கேமராக்களை சந்திக்க வேண்டிருந்தது. இங்கே என்னை பெண்கள் கல்வியின் ஒரு மரியாதைக்குரிய அடையாளமாக சொல்கிறார்கள், என்றார் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக