AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கொள்ளுமேடு டைம்ஸ் இணையத்தளத்திற்கு வரவேற்கின்றோம்..

திங்கள், 20 மே, 2013

எவரெஸ்ட் சிகரம் ஏறி சவுதி பெண் சாதனை

காட்மாண்டு : உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் ஏறி சவுதி அரேபிய பெண் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரைச் சேர்ந்த ரஹா மொஹாரக் (25) துபாயில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர் பெண்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள நாட்டிலிருந்து எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி மிகக்குறைந்த வயதில் எவரெஸ்ட் ஏறிய அரபு நாட்டவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இவருடைய குழுவில் 4 பேர் இடம் பெற்றிருந்தனர்.

லால்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி துவங்க தாமதப்படுத்தினால் போராட்டம் நகர த.மு.மு.க செயற்குழு கூட்டத்தில் முடிவு..........!!

லால்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி துவங்க தாமதப்படுத்தினால் போராட்டம் நகர த.மு.மு.க செயற்குழு கூட்டத்தில் முடிவு.

லால்பேட்டையில் நகர த.மு.மு.க செயற்குழு கூட்டம் நகர அலுவலகத்தில் 19.05.2013 அன்று இரவு நடைபெற்றது.நகர தலைவர் ஹாரிஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழுவில் 2 வார்டு த.மு.மு.க.தலைவர் புஹாரி இறைவசனம் ஓதி துவக்கி வைத்தார்மாவட்ட பொருளாளர் முஹமது அய்யுப், மாவட்ட முன்னால் ம.ம.க.செயலாளர் யாசர் அரபாத் மனித நேய மக்கள் கட்சியின் லால்பேட்டை பேரூராட்சி மன்ற துணை தலைவர் அஹ்மத் அலி, த.மு.மு.க. மாவட்ட துணை செயலாளர்மௌலவி அப்துல் சமது, ம.ம.க. மாவட்ட துணை செயலாளர் முஹமது ஆசிக், நகர த.மு.மு.க செயலாளர் நூருல் அமீன், நகர ம.ம.க செயலாளர் ஆசிக் நூர், நகர பொருளாளர் நவ்வர் ஹுசைன் மற்றும் நகர துணை நிர்வாகிகள்,வார்டு நிர்வாகிகள் செயர்குழுஉறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

ஞாயிறு, 19 மே, 2013

ஷார்ஜாவில் அனுமதியின்றி தங்கியிருந்த 170 பேர் கைது

அபுதாபி, மே 19-

ஷார்ஜாவில் அனுமதியின்றி தங்கியுள்ள வெளிநாட்டினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உள்துறை மற்றும் வெளியுறவு துறை அமைச்சகங்கள் உத்தரவிட்டிருந்தன.

இதனையடுத்து, ஷார்ஜா நகராட்சி மற்றும் வெளியுறவு துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் நடத்திய அதிரடி சோதனையில் 170 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 100 பேர் உரிய ஆவணங்களின்றி ஷார்ஜாவில் தங்கி தெரு வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.

53 பேர் வெளிநாட்டினருக்கான குடியுரிமை சட்டத்தை மீறியவர்கள். 17 பேர் சட்டபுறம்பான வகையில் கூலி தொழிலாளிகளாக வேலை செய்தவர்கள்.

சனி, 18 மே, 2013

நிடாகத் சட்டம் - சவூதியில் அறிவிக்கப்பட்டுள்ள கருணை காலத்தையும் பொது மன்னிப்பையும் முறையாக பயன்படுத்திக் கொள்ளும் படி இந்தியச் சமூகத்தைக் குறிப்பாக தமிழ்ச் சமூகத்தைக் கேட்டுக் கொள்கிறோம்


சவூதியில் உள்ள அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களையும் நிறுவனங்களையும் நிடாகத் சட்டத்தின் கீழ் கொண்டு வரும் திட்டத்தை சவூதி அரேபியா தொழிலாளர் நலத்துறை அமுல் படுத்தி அதை நடைமுறைப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மெற்கொண்டு வருகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் பல லட்சம் வெளிநாட்டவர்கள் குறிப்பாக இந்தியர்கள் வேலை வாய்ப்பை இழக்கும் நிலை இருந்தது. தீர்வுக்கான பல் வேறு உயர்மட்ட ஆலோசனைகள் சவூதி அதிகாரிகளுடன் தூதரக ஆதிகாரிகள் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டனர். தூதரக அதிகாரிகள் இந்தியச் சமுகத்தின் தமுமுக உட்பட பல சமுக நல ஆர்வளர்களிடம் பல்வேறுகட்ட ஆலாசனைகளை மேற்கொண்டர் வழங்கப்பட்ட அனைத்து ஆலோசனைகளையும் ஏற்று மத்திய அமைச்சர் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டது. மத்திய அமைச்சர் குழுவும் சவூதி அமைச்சகத்திடம் பேசி சுமூக தீர்வுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அவை, இரண்டு புனிதப் பள்ளிகளின் பராமரிப்பாளரும், சவூதி அரேபிய மன்னருமான அப்துல்லாஹ் அவர்களால் ஏற்கப்பட்டு கருணை காலம் மற்றும் மன்னிப்பு தீர்வாகக் கிடைக்கப்பட்டுள்ளன. எல்லாப்புகளும் இறைவனுக்கே.
சவூதிக்கு முறையாக வந்துள்ள அனைவரும் இந்த பொது மன்னிப்பை பயன்படுத்தி தங்களது பணிகளை உறுதி செய்து கொள்ளவும் அல்லது எந்த கட்டணமும் தண்டனையும் நிபந்தனையும் இன்றி தாயகம் செல்லவும் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
சவுதி அரசாங்கத்தால் 10.05.2013 அன்று அறிவிக்கப்பட்ட சலுகைகளின் குறிப்பிட்ட விவரங்கள்.

SDPI யின் காட்டுமன்னார்குடி தொகுதி செயற்குழு கூட்டம்


SDPI யின் காட்டுமன்னார்குடி தொகுதி செயற்குழு கூட்டம் 17.5.2013 அன்று மாலை 5 மணிக்கு லால்பேட்டை நகர SDPI அலுவலகத்தில் நடைப்பெற்றது.
காட்டுமன்னார்குடி தொகுதி தலைவர் அப்துல் ஹமீது தலைமை தாங்கினார் லால்பேட்டை, கொள்ளுமேடு, எள்ளேரி மற்றும் ஆயங்குடி யிலிருந்து தொகுதி செயர்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

செவ்வாய், 14 மே, 2013

அரசு உத்தரவு வெளியீடு ஒரே பள்ளியில் 3 ஆண்டுக்கு மேல் வேலை பார்த்தால் டிரான்ஸ்பர்

சென்னை: அரசு பள்ளிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் ஆசிரியர்கள் பணியாற்றக் கூடாது என்ற உத்தரவு இந்த ஆண்டும் தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது.இதுதொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆசிரியர் நலனுக்காக வெளிப்படையான ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு பொதுமாறுதல் வழிகாட்டி விதிமுறைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும். பள்ளிக்கல்வி துறை கட்டுப்பாட்டில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் இடையே 201314ம் கல்வியாண்டில் பொது மாறுதல்கள் வழங்க கீழ்க்காணும் நெறிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

* 3 ஆண்டுகளுக்கு மேல் அரசு பணியாளர்கள் ஒரே இடத்தில் பணியாற்ற கூடாது என்ற பொதுவான ஆணை உள்ளது. இது 201314ம் கல்வியாண்டிலும் தொடரும். ஒரு ஆசிரியருக்கு டிரான்ஸ்பர் தருவதற்காக காரணம் ஏதுமின்றி வேறொரு ஆசிரியரை டிரான்ஸ்பர் செய்யக்கூடாது.

திங்கள், 13 மே, 2013

ஹூரூப் கொடுக்கப்பட்டவர்களின் பாஸ்போர்ட் திருப்பிக் கொடுக்கப்படுகிறது.


யாரெல்லாம் ஹூரூப் கொடுக்கப்பட்டிருந்ததோ அவர்களின் பாஸ்போரட் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது அந்த வகையில் தூதரகத்திற்கு 15 ஆயிரம் பாஸ்போர்ட் வந்துள்ளது.
அந்த பாஸ்போர்ட்டின் எண்கள் தூதரக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதை சரிபார்த்து தூதரகம் சென்று பெற்றுக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறோம்.

13/05/2013 முதல் 18/05/2013 வரை பாஸ்போர்ட் வழங்க உள்ளது நேரம் மாலை 6 மணி முதல் 9 மணி வரை.

தங்களிடம் உள்ள பழைய பாஸ்போர்ட் காப்பியை எடுத்துச் செல்ல வேண்டும். அவரவர் போஸ்ட் அவரவரிடம் வழங்கப்படும்.

ஒருவருடைய பாஸ்போர்ட் அடுத்தவர்கள் பெறமுடியாது.

அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகளை தடை செய்ய அரசு தயங்காது: முதல்வர் எச்சரிக்கை:

சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது : 

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகளை தடை செய்ய தமிழக அரசு தயங்காது. தமிழக அரசும், போலீசும் திட்டமிட்டு வழக்கு தொடர்வதாக ராமதாஸ் பேசுவது அபத்தமானது. ஜாமினில் வெளிவந்த பின்னரும் பா.ம.க.,வினரை தூண்டிவிடும் வகையில் பேசி வருகிறார். ராமதாஸ் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்படும். பா.ம.க.,வின் சட்டவிரோத நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ள முடியாது. ராமதாஸ் கைது செய்யப்பட்ட பின்னர் பொதுச்சொத்துக்களுக்கு பா.ம.க.,வினர் சேதம் ஏற்படுத்தினர். கலவரத்தின் போது சேதமான சொத்துக்களுக்கு பா.ம.க.,விடமிருந்து நஷ்ட ஈடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேதம் குறித்து கணக்கிடப்பட்ட பின்னர் பா.ம.க.,விடமிருந்து நஷ்ட ஈடு பெறப்படும்.