AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

குப்பைகளை எரித்தால் ஹார்ட் அட்டாக் வரும்..

குப்பைகளை எரிப்பதால் உருவாகும் நச்சுவாயு, ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 4500 டன் வரை குப்பைகள் சேருகின்றன. குப்பைகள் சேரும் இடங்களில் அடிக்கடி தீ விபத்துகள் ஏற்பட்டு சில நாட்கள் வரையும் தீ எரியும் நிலையும் காணப்படுகிறது. 

குப்பைகள் எரிக்கப்படுவதால் ஏற்படும் நச்சுவாயுவால் மாரடைப்பும் வரும் என்ற அதிர்ச்சியான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.அமெரிக்காவின் சிகாகோ நகரை சேர்ந்தவர் சரோஜா பாரதி. இந்திய வம்சாவளியை சேர்ந்த இதய நோய் சிகிச்சை நிபுணர். சென்னையில் இதய நோய் சிகிச்சை அரங்கு திறப்பு விழா ஒன்றுக்கு வந்துள்ள இவர், கடந்த 1970-ம் ஆண்டில் இருந்து தனது மருத்துவ அனுபவங்கள், இதய அறுவை சிகிச்சைகள், தான் சந்தித்த சிக்கலான அறுவை சிகிச்சைகள் போன்றவற்றை தொகுத்து புத்தகமாக வெளியிட்டு, அதை இதய நோய் சிகிச்சை அரங்குநிர்வாகிகளிடம் அளித்துள்ளார்.

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் 10 உலர் பழங்கள்!!!

அனைவருக்கும் ஸ்நாக்ஸ் சாப்பிடும் பழக்கம் நிச்சயம் இருக்கும். அதுவும் ஸ்நாக்ஸ் என்றதுமே முறுக்கு, வடை, சிப்ஸ் போன்றவை தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் அத்தகைய உணவுப் பொருட்களை சாப்பிட்டால், உடலில் பல பிரச்சனைகள் தான் வரும். ஏனெனில் அவை அனைத்துமே எண்ணெய் பலகாரங்கள். அதிலும் இவற்றை சாப்பிட்டால், உடல் எடை தான் அதிகரிக்கும். அதிலும் உடல் எடையை குறைக்க விரும்புவோர், இத்தகைய உணவுப் பொருட்களை அறவே தவிர்க்க வேண்டும். அதற்கு மாறாக பழங்கள் அல்லது உலர் பழங்களை சாப்பிட்டால் மிகவும் நல்லது. பழங்களில் நிறைய சத்துக்கள் உள்ளது என்று நன்கு தெரியும். அதேப் போன்றே உலர் பழங்களிலும் சத்துக்கள் உள்ளன. ஏனெனில் உலர் பழங்கள் பழங்களில் இருந்து வந்ததே ஆகும். இவை உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, உடல் எடையையும் குறைக்க உதவியாக இருக்கும். குறிப்பாக வேலை செய்யும் போதோ அல்லது ஸ்நாக்ஸ் ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போதோ, இத்தகைய உலர் பழங்களை சாப்பிட்டால், எனர்ஜி கிடைக்கும். ஆனால் இதை மட்டும் சாப்பிட்டு இருக்க முடியாது. ஏனெனில் இவை பசியை கட்டுப்படுத்தாது. உலர் பழங்களில் அனைவருக்கும் தெரிந்தது உலர் திராட்சை, உலர் ஆப்ரிக்காட், உலர்ந்த அத்திப்பழம் போன்றவை தான். ஆனால் உலர் பழங்களில் இன்னும் நிறைய உள்ளன. அவை அனைத்து சீசன் பழங்கள் என்பதால், அவற்றை உலர் பழங்களாக்கி, வருடம் முழுவதும் சாப்பிடும் படியாக தயாரித்துள்ளனர். சரி, இப்போது அந்த உலர் பழங்களில் வேறு எவையெல்லாம் இருக்கின்றன என்று பார்ப்போமா!!! 

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

தினமலர் செய்தி: தவறான புகைப்படத்திற்கு நேரில் வருத்தம் தெரிவித்த தினமலர் செய்திக்குழு

Add caption
Add caption
 மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ். ரிபாயி வெளிடும் பத்திரிக்கை அறிக்கை:
இன்று (27-4-2013) அன்று வெளிவந்த தினமலர் நாளிதழ் 11ஆம் பக்கத்தில் வெளியிட்டிருந்த தேசிய பாதுகாப்பு சட்டத்தில் தமீம் அன்சாரி கைது:ஐகோர்ட் ரத்து என்ற செய்தியில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமீமுன் அன்சாரி அவர்களின் புகைப்படமும் அவருக்கு சம்மந்தமே இல்லாத செய்தியும் பிரசுரிக்கப்பட்டது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


வக்ஃப் வாரிய சொத்துகளைப் பாதுகாக்க வலியுறுத்தியும், வாரியத்துக்கு  மத்திய, மாநில அரசுகள் அதிக நிதி ஒதுக்கீடு செய்யக் கோரியும், வாரியப் பணியாளர்களை அதிகப்படுத்தக் கோரியும், சிதம்பரம் மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் எஸ்.அப்துல்லாஹ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலர் ஜே.பரகத்துல்லா பேசியது:
  முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்துக்காக 6 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் முன்னோர்களால் வழங்கப்பட்டு வக்ஃப் செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு வக்ஃப் வாரிய சொத்திலிருந்து வரும் வருமானமே போதுமானது.

மே 9ல் பிளஸ் 2 ரிசல்ட்- மே 31ல் 10ம் வகுப்பு ரிசல்ட்: தமிழக அரசு அறிவிப்பு


பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ரிசல்ட் மே 9-ந் தேதியன்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான ரிசல்ட் மே 31-ந் தேதியன்றும் வெளியாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு இன்று வெளிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தேர்வு முடிவுகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழகம், புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ந் தேதி தொடங்கி மார்ச் 27-ந் தேதி வரை நடைபெற்றது. இத் தேர்வில் 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 பேர் எழுதினர். 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ந் தேதியன்று வெளியிடப்படுகிறது.

சனி, 27 ஏப்ரல், 2013

வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்ததால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது ஓரிரு நாளில் நிறுத்தம்


வீராணம் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது ஓரிரு நாளில் நிறுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது.
சோழர் கால ஏரி
கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்குவது வீராணம் ஏரியாகும். இந்த ஏரி 905–936ம் ஆண்டு சோழர் காலத்தில் முதலாம் பராந்தகன் மன்னராக இருந்த காலத்தில் வெட்டப்பட்டது. அப்போது இந்த ஏரி வெறும் மழைநீர் சேமிப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
ஏரிக்கு நீர்வரத்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் பெய்யும் மழைநீர் கருவாட்டு, செங்கல்ஓடை வழியாக வீராணத்திற்கு வந்தது. தொடர்ந்து, முதலாம் ராஜேந்திர சோழர் கங்கையை படையெடுத்து வெற்றி பெற்றார். அதன் அடையாளமாக கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு கோவிலும், சோழகங்கம் என்ற ஏரியை வெட்டினார்.

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

சட்டப் பேரவையில் மமக கோரிக்கை


முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை உயர்த்தித் தர வேண்டும்,
பெங்களுர் குண்டு வெடிப்பு அப்பாவி முஸ்லிம்களை கைது செய்வதை தடுக்க வேண்டும்,
மத்திய அரசுக்கு இணையாக நிதியளித்து மாநில அரசு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும்,
பாரதிய ஜனதா எம்.ஆர். காந்தி மீது தாக்குதல் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்யப்பட வேண்டும் என சட்டப் பேரவையில் மமக கோரிக்கை
26.04.2013 அன்று 2013-2014 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானியக் கோரிக்கையில் பங்கு கொண்டு மனிதநேய மக்கள் கட்சியின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்கள் ஆற்றிய உரை:

கடலூர் மாவட்டத்தில் பொது இடத்தில் புகை பிடித்தால் ரூ.200 அபராதம்: கலெக்டர் எச்சரிக்கை

கடலூர், ஏப்.25-
புகையிலை மற்றும் புகையிலை பொருட்கள் தடுப்பு சட்ட அமலாக்கம் குறித்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கலெக்டர் கிர்லோஷ்குமார் தலைமையில் நடைபெற்றது தமிழகத்தில் குறிப்பிட்ட 8 மாவட்டங்களுக்குள் ஒன்றான கடலூர் மாவட்டத்திற்கு வரும் 2014-க்குள் புகையிலை இல்லா மாவட்டமாக அங்கீகாரம் செய்யப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டு அதற்குரிய ஆயத்த பணிகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இச்சட்ட அமுலாக்கம் மற்றும் விழிப்புணர்வு, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் போன்ற அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும், கலெக்டருமான கிர்லோஷ்குமார், தலைமையில் பிற துறைகளுடன் கூடிய ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. 

வியாழன், 25 ஏப்ரல், 2013

ஹஜ் பயணம் - 2701 பேர் குலுக்கல் முறையில் தேர்வு!

தமிழ் நாட்டிலிருந்து இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்பவர்கள் ஹஜ் கமிட்டி மூலம் 2, 701 பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். மேலும் 936 பேர் சிறப்பு தகுதியில் தேர்வு செய்யப்பட்டனர்.

இதற்கான குலுக்கல் 23.04.2013 செவ்வாய்க்கிழமை பிற்பகல் சென்னை இராயப்பேட்டை புதுக்கல்லூரி வளாகத்திலுள்ள ஆணைக்கார்அப்துல் சுக்கூர் கலையரங் கில் நடைபெற்றது.

இந்த ஆண்டு தமிழகத்திற்கு 3,637 இடங்கள் ஒதுக்கீடாக கிடைத்துள்ளன. இதில் இந்திய ஹஜ் குழுவின் வழிகாட்டுதலின் படி 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பயணியுடன் ஒரு துணை பயணி என்னும் வகையில் 380 பயணிகள் மற்றும் 2010ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரையில் மூன்று முறை தொடர்ச்சியாக விண்ணப்பித்து தேர்வு செய்யப்படாமல் இந்த ஆண்டு விண்ணப்பித்த 556 பயணிகள் ஆக மொத்தம் 936 பயணிகள் சிறப்பு வகையின் கீழ் குலுக்கல் இன்றி நேரடியாக தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் குலுக்கல் மூலம் 2,701 புனித பயணிகள் மாவட்டம் வாரியாக தேர்வு செய்யப்பட்டனர். இந்த பட்டியலும் காத்திருப்போர் பட்டியலும் வெளியிடப்பட்டது.

புதன், 24 ஏப்ரல், 2013

வீராணம் ஏரி தூர்வார அளவீடு பணி தீவிரம்

காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரி காட்டுமன்னார்கோவில், குமராட்சி, சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதி விவசாய நிலங்கள் பாசனம் பெற ஏதுவாக உருவாக்கப்பட்டது. ஏரியின் கீழ் கரையில் 28 பாசன மதகுகளும், மேற்கரையில் 6 மதகுகளும் என 34 மதகுகள் உள்ளன. இதன் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன.  
மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு திறந்து விடப்படும் நீர் கல்லணை வழியாக கீழணையை வந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வந்து சேரும். மழை காலங்களில் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, பாப்பாக்குடி வடிகால் ஆகிய ஓடைகளின் வழியாக ஏரிக்கு நீர் வரத்து வரும்.

பெண்கள், குழந்தைகளை காவல் நிலையத்துக்கு அழைக்கக் கூடாது: முதல்வர்

பெண்கள், குழந்தைகளை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைக்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, பாஸ்போர்ட் விசாரணைக்காக பெண்களைக் கூட காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்துகிறார்கள். இதனைத் தடுக்க வேண்டும் என்றார்.

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

லால்பேட்டை திருமணம் நிகழ்ச்சியில்

 லால்பேட்டை திருமணம் நிகழ்ச்சியில் எம்.தமிமுன் அன்சாரி, மாநில பொதுசெயலாளர் மமக மற்றும் ஜெ.ஹாஜா கனி,மாநில செயலாளர் தமுமுக கலந்துகொண்டர்கள்.இதில் லால்பேட்டை தமுமுக & மமக நகர நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்....

சிரிய உதவிகலோடு தொடங்கப்பட்ட லால்பேட்டை இமாம் கஜ்ஜாலி பள்ளி இன்று புதிய இணையதளம் உருவாக்கியுள்ளது

லால்பேட்டை இமாம் கஜ்ஜாலி பள்ளிக்கு தனியாக ஒரு இணையதளம் உருவாக்கி இருக்கின்றோம்http://www.imamgazzalilpt.com/                                                                                               

கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த நமது சமுதாய மக்களிடையே, குறிப்பாக லால்பேட்டை மக்களிடையே, கல்வியில் ஆர்வத்தை ஏற்படுத்தவும், பொருளாதார வசதியற்றவர்களுக்கு இலவச கல்வி உதவி, மருத்துவ வசதி போன்ற வசதிகள் செய்யவும், லால்பேட்டையைச் சேர்ந்த பட்டதாரிகள் ஒன்று சேர்ந்து'முஸ்லிம்பட்டதாரிகள்கல்விச்சங்கம்' என்ற அமைப்பை உருவாக்கினர்.

இதன் முதல் கட்டமாக 'இமாம் கஸ்ஸாலி மெட்குலேசன் பள்ளி' 1990ம் ஆண்டு 200 மாணவ, மாணவியர் மற்றும் 11 ஆசிரியர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இப் பள்ளிக்கு 1994 ஆம் ஆண்டு முறையான அரசு அங்கீகாரம் கிடைத்தது.

வாடகை கட்டிடத்தில்தொடங்கப்பட்ட இப்பள்ளி, நல்லுள்ளம் கொண்ட லால்பேட்டை மக்களின் பேராதரவுடன் சொந்த கட்டிடத்தில் செயல்பட துவங்கியது. 

சனி, 20 ஏப்ரல், 2013

தமுமுகவின் கோடை கால மாணவர் முகாம் ஏப்ரல் 27ல் தொடங்குகிறது


தமுமுக மாணவர் அணியின் சார்பில் கோடை கால இஸ்லாமிய பண்பியல் பயிற்சி முகாம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடைபெற உள்ளது.
முதலாவதாக ஏப்ரல் 27 தொடங்கி மே 1 வரை விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தில் நடைபெற இருக்கிறது. இதில் விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, கடலூர் வடக்கு, கடலூர் தெற்கு, புதுச்சேரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.
இரண்டாவது முகாம் நாகூரில் ஏப்ரல் 29 தொடங்கி மே 2 வரை நடைபெற இருக்கிறது. இதில் நாகை தெற்கு, நாகை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை வடக்கு, காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

அன்பார்த்த கொள்ளுமேடு சகோதர்களே நமதூரில் அமைதியும்,ஒற்றுமையும் எங்கே சென்றது ?

                               அன்பிற்கினிய கொள்ளுமேடு சகோதரர்களுக்கு,

                       அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ் 


இந்த கடிதம் இஸ்லாமிய சிந்தனையோடும், பொதுநலத்தோடும், நடுநிலை சிந்தனையோடும் உங்கள் அனைவரையும் சந்திக்கட்டுமாக.

அன்பு சகோதரர்களே!

இந்தச் சமுதாயம் கருத்துவேறுபாடுகள் நிறைந்த சமுதாயமாகும். முஸ்லிம்களுக்கிடையிலான இந்த கருத்து வேறுபாடுகள் கியாமத் நாள்வரை இருக்கக்கூடியது! அனைவரும் ஒருமித்தக் கருத்தையுடைய சமுதாயமாக மாறுவது என்பது நடைமுறைக்கு சாத்தியமானதன்று! எனவே எனது கருத்துக்கு ஒருவர் மாறுபட்டிருக்கின்றார் என்பதற்காக அவர் ஏக இறைவனை மட்டுமே வழிபடும் முஸ்லிமாக இருந்தும் அவரை கேவலமாக விமர்சிப்பது என்பது ஒரு உண்மையான முஃமினுக்கு உரிய பண்பாக இருக்கமுடியாது! ‘ஒரு முஸ்லிம் பிறமுஸ்லிமுடைய கண்ணியத்தைக் களங்கப்படுத்துவது ஹராமாகும்’ என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை நாம் எக்கணமும் மறந்துவிடக்கூடாது.

புதன், 17 ஏப்ரல், 2013

பயங்கர நிலநடுக்கம் ஈரான், பாகிஸ்தானில் 73 பேர் பலி

இஸ்லாமாபாத் : ஈரான், பாகிஸ்தான் எல்லையில் நேற்று ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தால் இரு நாடுகளிலும் ஏராளமான கட்டிடங்கள் இடிந்தன. இதில், 73 பேர் பலியானார்கள். வட இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டதால் மக்களிடையே பீதி ஏற்பட்டது. ஈரான், பாகிஸ்தானில் நேற்று மாலை இந்திய நேரப்படி மாலை 4.14 மணிக்கு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. 15 விநாடிகள் பூமி குலுங்கியதில், அந்த பகுதியில் இருந்த பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாயின. 

இந்த ஆண்டுக்கான ஹஜ் புனிதப் பயணிகள் 23–ந் தேதி குலுக்கல் மூலம் தேர்வு: அரசு அறிவிப்பு


தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் க.அருள்மொழி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவால் பெறப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டிற்கான ஒதுக்கீடு சுமார் 3 ஆயிரம் மட்டுமே. எனவே, மும்பை, இந்திய ஹஜ் குழுவின் அறிவுரைப்படி, இந்த ஆண்டுக்கான புனிதப் பயணிகளைத் தெரிவு செய்ய, குலுக்கலை (குறா) நடத்த தமிழ்நாடு மாநில ஹஜ் குழு முடிவு செய்துள்ளது.

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

ஈரானில் பயங்கர நிலநடுக்கம்- டெல்லியும் குலுங்கியது


ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் வளைகுடா நாடுகள்,மற்றும் டெல்லி, அஹ்மதாபாத், உ பி, சண்டிகார் உள்ளிட்ட பல இடங்களில் உணரப் பட்டது.
இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் ஈரானில் 7.5 புள்ளியாகவும் டெல்லியில் 7.8 எனவும் அமெரிக்க ஆய்வு மையம் தெரிவிக்கிறது. ஈரானில் 40 பேர் இறந்துள்ளதாகவும் தகவல்.
இந்த நில நடுக்கத்தின் தாக்கம்  துபை , குவைத், மஸ்கட், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் உணரப் பட்டது.

திங்கள், 15 ஏப்ரல், 2013

குடந்தையில் நடைபெற்ற TNTJ வின் 14 வது மாநிலப் பொதுக்குழு!


2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று குடந்தை மஹாமஹம் திருமண மஹாலி ல்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 14 வது மாநிலப் பொதுக்குழு நடைபெற்றது. இதில் மாநிலத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
மேலும் மார்க்க மற்றும் சமுதாயப் பணிகளில் சிறப்பாக செயலாற்றிய மாவட்ட கிளைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
பொதுக்குழு நிகழ்வுகள் பற்றிய விரிவான தகவல் அறிய புத்துணர்வூட்டிய டிஎன்டிஜே பொதுக்குழு!

லால்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி அமைய சட்டமன்றத்தில் குரல் ஒலித்தது

தமிழக சட்டமன்றதில் லால்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி அமைய குரல் எழுப்பிய காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு ந.முருகுமாரன் அவர்களுக்கு நன்றி !நன்றி !!நன்றி !!!

லால்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி அமையவேண்டும் என்று லால்பேட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது
லால்பேட்டை த.மு.மு.க வும் தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகிறது

15.12.2012 மாலை லால்பேட்டை நகர தமுமுக, மமக பொதுக்குழு கூட்டத்தில் லால்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உருவாக சில தடைகள் உள்ளதால் அதை தகர்தெரிய உணர்வுமிகு போராட்டம் நடத்தப்படும்.என்று தீர்மானம் நிறைவேற்ற பட்டது அதனை தொடர்ந்து அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் முறையாக கோரிக்கை மனு அனப்பபட்டது.
பள்ளி அமைவதில் தொடர்ந்து கால தாமதம் ஏற்ப்பட்டதால் 20.03.2013 அன்று நடந்த நகர த.மு.மு.க நிர்வாக குழு கூட்டத்தில் முதல் கட்டமாக சுவரொட்டிகள் ஓட்டுவது என்று முடிவெடுக்க பட்டது. அதனை தொடர்ந்து 21.03.2013 அன்று லால்பேட்டை முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.

ஜூலை 6ல் கோட்டையை நோக்கி முஸ்லிம்களின் கோரிக்கைப் பேரணி - தமுமுக அறிவிப்பு


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்களின் தலைமையில் 11.04.2013 அன்று நடைபெற்றது. அதில்,
தமிழகத்தில் முஸலிம்களுக்கு தற்போது அமலில் உள்ள 3.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிகரித்து தரக் கோரியும்,
10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சிறைகளில் வாடும் முஸ்லிம்கள் உட்பட அனைத்து ஆயுள் சிறைவாசிகளுக்கும் பொது மன்னிப்பு அளித்து விடுவிக்கக் கோரியும்,
திருமணப் பதிவுச் சட்டத்தில் திருத்தங்கள் கோரியும்,

சனி, 13 ஏப்ரல், 2013

முஸ்லிம் மாணவிகளுக்கு சென்னையில் மாணவியர் விடுதிகள் அமைக்க வேண்டும்

08.04.2013 அன்று தமிழ்நாடு சட்டபேரவை கூட்டத்தொடரில் பேரா எம் எச் ஜவாஹிருல்லா அவர்களில் கேள்வியும் அமைச்சரின் பதிலும்
முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: சென்னையில் சிறுபான்மையினர் நலத்துறை கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகள் அமைக்க அரசு முன்வருமா?
மாண்புமிகு முஹம்மத் ஜான்(பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்): மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு முதலமைச்சர் முதல்வராக ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு சில மாதங்களிலேயே சிறுபான்மையின சமுதாயத்திற்கு 8 விடுதிகளை அளித்தார்கள், அதில் ஒரு விடுதியை சென்னை இராயப்பேட்டையில் கல்லூரி மாணவியர்கள் 100 பேர் தங்கிப் படிக்கும் வகையில் துவங்குவதற்காக ஆணையிட்டுள்ளார்கள், இந்த ஆண்டு முதல் இந்த விடுதி செயல்படத் தொடங்கும், தற்போது சென்னையில் சிறுபான்மையின கல்லூரி மாணவியர் விடுதிகள் தொடங்குவது குறித்து கருத்துரு எதுவும் தற்சமயம் அரசின் பரிசீலனையில் இல்லை, இருப்பினும் சென்னையில் உள்ள 8 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில் அவர்கள் தங்கி கல்விப் பயில சிறுபான்மையின மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அபுதாபி முரூர் சாலையில் இந்திய பாஸ்போர் ட் சேவை மையம்: இந்திய தூதரகம் அறிவிப்பு.


கடந்த மாதம் 9ம் தேதி முதல் அபுதாபி முரூர் சாலையில் இந்திய பாஸ்போர்ட் சேவை மையம் செயல்படுகிறது என்று இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
அமீரகத்தில் இந்திய பாஸ்போர்ட் வழங்கும் சேவையினை பி.எல்.எஸ். இன்டர்னேஷனல் என்னும் நிறுவனம் செய்து வருகிறது.
அபுதாபியில் செயல்பட்டு வரும் பி.எல்.எஸ். இன்டர்னேஷனல் நிறுவனம் மார்ச் 9ம் தேதி முதல் முரூர் சாலையில் அபுதாபி கமர்ஷியல் வங்கியின் பின்புறம் அமைந்துள்ள போர்ட் சிட்டி ஜாவா கட்டிடத்தின் 202 எனும் அலுவலகத்தில் செயல்படுகிறது என இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 11 ஏப்ரல், 2013

கடலூர் மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கலாம் தீவிர விசாரணை நடத்தி வழங்கப்படும்


கடலூர்,ஏப்ரல்-11
கடலூர் மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு கேட்டு அந்தந்த தாலுக்கா அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் எனவும், தீவிர விசாரணைக்கு பின்னரே வழங்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
அடையாள சின்னம்
ஒருவர் இந்திய நாட்டின் குடிமகன் என்பதற்கான பல்வேறு அடையாளங்களில் ஒன்றுதான் ரேஷன் கார்டு. இது தவிர அரசு நலத்திட்ட உதவிகள் பெறவும், பல்வேறு அத்தியாவசிய பயன்பாட்டுக்கும் ரேஷன் கார்டு முக்கிய காரணியாக இருக்கிறது. அதனால்தான் திருமணம் முடிந்ததும் புதுமண தம்பதிகள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து விடுகிறார்கள்.
ஆனால் விண்ணப்பித்த 45 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தாலும், ஒரு ஆண்டு ஆகியும் ரேஷன் கார்டு கிடைக்காமல் தவிப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் தினமும் வீடுகளில் இருந்து தாலுக்கா அலுவலகங்களுக்கு பொடி நடையாக நடந்து அலைக்கழிப்பதுதான் மிச்சம். ஊழியர்களும் நாளை வரும், அடுத்த மாதம் வந்துவிடும் என்று அவர்களை சமாதானம் செய்து அனுப்பி விடுகிறார்கள். இதுதான் தற்போது நடந்து வருகிறது.

லால்பேட்டை த,மு.மு.க சார்பில் மருத்துவ உதவி....

லால்பேட்டை வடக்கு தெருவில் வசிக்கும் ஹபீபுல்லா.அவர்கள் .கடந்த சில நாட்களாக சிறுநீரகம் கோலாரால் அவதிப்பட்டு வருகிறார் .
அவரை நகர தலைவர் முஹமது ஹாரிஸ் 
நகர த.மு.மு.க.செயலாளர் நூருல் அமீன் 
நகர பொருளாளர் நவ்வர் ஹுசைன்
நகர துணை செயலாளர் ஹபிபுர்ரஹ்மான்
நகர மாணவர் அணி செயலாளர் முஹமது ஷபீக் ஆகியோர்
நேரில் சென்று நலம் விசாரித்து அவரிடம் மருத்துவத்திற்காக
த.மு.மு.க சார்பில் ரூ 25 ஆயிரம் உதவி வழங்கினார்கள்.

சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய "விதிமுறை மீறல் மற்றும் அபராதங்களின் பட்டியல்" – (08.04.2013 தேதிப்படி)

1. இக்காமா காலாவதி ஆகும் தேதிக்கு (எக்ஸ்பைரி தேதி) 3 நாட்கள் முன்னதாக, இக்காமாவை புதுப்பிக்க (ரெனிவ் செய்ய) சமர்ப்பிக்க வேண்டும்.


மீறினால்: இக்காமா கட்டணத்தின் இருமடங்கு செலுத்த வேண்டும்

2. அரசு அதிகாரிகள் இக்காமா-வை காண்பிக்கச் சொல்லி கேட்கும்போது, தகுந்த காரணங்கள் அன்றியே அல்லாமல், காண்பிக்க வேண்டும்

மீறினால்: முதல் முறை - SR 1000 அபராதம்; இரண்டாம் முறை - SR 2000 அபராதம்; மூன்றாம் முறை - SR 3000 அபராதம்

3. எக்ஸிட்-ரீஎன்ட்ரி விசாவையோ அல்லது ஃபைனல் எக்ஸிட் விசாவையோ பயன்படுத்தாமல் இருந்தால், முறையாக கேன்ஸல் செய்ய வேண்டும்.

பாஸ்வேர்டை நினைத்தாலே கம்ப்யூட்டரை இயக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு

ஒவ்வொரு இணையதள தொடர்பிற்கும், ஒவ்வொரு பாஸ்வேர்ட் உபயோகப்படுத்தப்படும். சிலர் பாதுகாப்பு கருதி அடிக்கடி தங்களின் பாஸ்வேர்டை மாற்றிக் கொண்டிருப்பார்கள். வளர்ந்து வரும் விஞ்ஞானத்தின் புதிய தொழில்நுட்பமாக பாஸ்வேர்டை டைப் செய்வதற்குப் பதிலாக மனதில் நினைப்பதன் மூலமே நமது தகவல் தொடர்பினை இயக்க முடியும்.  
யு.சி.பெர்க்லி ஸ்கூல் என்ற ஆராய்ச்சி மையம், இதுகுறித்த செய்முறையை நடத்தி காட்டியுள்ளது. இம்மையத்தின் பேராசிரியர் ஜான் சுவாங், ஜப்பான் நாட்டின் ஒக்கினாவா நகரில் நடைபெற்ற, பதினேழாவது தகவல் பாதுகாப்பு மற்றும் ரகசியக் குறியீடு எழுத்து குறித்த கருத்தரங்கில், இந்த ஆராய்ச்சியின் அறிக்கையை சமர்ப்பித்தார். அவருடைய குழுவினர், ஈஈஜி சென்சார்கள், புளூடூத் மற்றும் தலையணைக் கருவி உபயோகிப்பதன்மூலம் இதனை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை அங்கு செயல்படுத்திக் காட்டினார்கள்.

திங்கள், 8 ஏப்ரல், 2013

பர்மாவில் முஸ்லீம்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் நெய்வேலி அருகே மந்தாரக்குப்பத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


பர்மாவில் முஸ்லீம்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் நெய்வேலி அருகே மந்தாரக்குப்பத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
இலங்கையில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யபட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், பர்மாவில் முஸ்லீம்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் நெய்வேலி அருகே மந்தாரக்குப்பத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு த.மு.மு.க.மாவட்ட செயலாளர் ஷேக் தாவூத் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஜாபர்அலி முன்னிலை வகித்தார். மாநில மாணவரணி இணை செயலாளர் ஆரூன்ரஷித், அமைப்பு செயலாளர் ஜெயின்ஸ் ஆபுஜீன், மாணவர் இந்தியா மாநில செயலாளர் சர்வத்கான் மனித நேய கட்சி நகர செயலாளர் ஜலால் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

கொள்ளுமேடு அல் அமான் நர்சரி & பிரைமரி பள்ளி பரிசளிப்பு விழா


 கொள்ளுமேடு அல் அமான் நர்சரி & பிரைமரி பள்ளி பரிசளிப்பு விழா 05-04-2013 மாலை சிறப்பாக நடைப்பெற்றது. பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர்களும் ஊர் பொதுமக்களும் திரளாக கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

துபாயில் நேற்று முதல் வெளுத்து வாங்கும் மழை.. மக்கள் செம குஷி!

வளைகுடா நாடுகளான துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த மழையால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும், வெப்பத்தின் தாக்கம் வெகுவாக குறைந்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பல்வேறு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
சனிக்கிழமை மாலை முதல் துபாய், ஷார்ஜா, அபுதாபி ம‌ற்றும் அமீர‌க‌த்தின் ப‌ல்வேறு ப‌குதிக‌ளிலும் ச‌னிக்கிழ‌மை மாலை மழை கொட்டத் தொடங்கியது.


பலத்த காற்று -இடி மின்னல் இப்பகுதிகளில் பலத்த காற்று ம‌ற்றும் இடி மின்ன‌லுட‌ன் கூடிய‌ ப‌ல‌த்த‌ ம‌ழை பெய்த‌து.
காற்றில் பறந்த விளம்பர பதாகைகள் பலத்த காற்றின் கார‌ண‌மாக‌ விள‌ம்ப‌ர‌ப் பதாகைக‌ள் ரோட்டின் மீது வ‌ந்து விழுந்து போக்குவ‌ர‌த்துக்கு இடையூறாக‌ மாறிய‌து.

அவகாசம் வழங்குமாறு மன்னர் அப்துல்லா உத்தரவு

சவூதியில் சட்டவிரோதமாக பணிபுரியும் வெளிநாட்டவருக்கு 3 மாத கெடு விதித்த மன்னர்

ரியாத்: முரையான ஆவணங்கள் இன்றி சவூதியில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் உரிய ஆவணங்களைப் பெற 3 மாத கால அவகாசம் அளித்து சவூதி மன்னர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.

சவூதியில் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் என வெளிநாட்டவர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சவூதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானோர் வேலையின்றி உள்ளனர். இதையடுத்து அனைத்து நிறுவனங்களிலும் சவூதி மக்களுக்கு வேலையில் முன்னுரிமை வழங்கும் சட்டம் அமலுக்கு வருகிறது.

இந்நிலையில் சவூதியில் விதிகளை மீறி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் கண்டறியப்பட்டு நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும் முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த 2 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டவர்கள் சவூதியில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

A.R.சாகுல் ஹமீது - ஜெஸீரா பர்வீன் திருமணம்

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}  வாழ்த்துக்களுடன்..கொள்ளுமேடுடைம்ஸ் இணையதளம் 

சனி, 6 ஏப்ரல், 2013

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் 19 வது பொதுக் குழு கூட்டம் புதிய நிர்வாகிகள் தேர்வு!


 ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் வசிக்கும் லால்பேட்டை மக்களின் ஒன்றிணைந்த ஜமாஅத்தாக விளங்கும் அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் 19 வது பொதுக் குழு கூட்டம் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் செண்டரில் வெள்ளிக் கிழமை மாலை 5.30 மணிக்கு துவங்கியது.
அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் தலைவர் மெளலவி ஏ.அமீனுல் ஹுஸைன் தலைமை வகித்தார்.

M.R. நஜ்முத்தீன் M.ஆசியா பர்வின் திருமணம்

 இன்ஷா அல்லாஹ்... 07.04.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை ஜாக்கிர் வருகைதரயிருக்கிரார்கள்

வியாழன், 4 ஏப்ரல், 2013

லால்பேட்டை நகரில் நீர் மோர் பந்தல் அமைப்பு.......!!


 லால்பேட்டை நகர 8வார்டு த.மு.மு.க.&மனித­ நேய மக்கள் கட்சி யின் சார்பாக லால்பேட்டை கைகாட்டி யில் நீர் மோர் பந்தலும்லால்பேட்டை நகர 5 வார்டு சார்பாக லால்பேட்டை சிங்கார வீதி கடைவீதியில் தண்ணீர் பந்தலும் அமைக்க பட்டது.

கடலூர் தெற்கு மாவட்ட. ம.ம.க.செயலாளர் எ.யாசர் அரபாத்,

Dr ஜாகிர் ஹூசைன் நகரில் மாபெரும் மீலாதுன் நபி விழா


செவ்வாய், 2 ஏப்ரல், 2013

பர்மாவில் முஸ்லிம்கள் படுகொலை: சென்னையில் முஸ்லிம்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்

பர்மாவில் முஸ்லிம்கள் திரளாக வசித்துவரும் மாநிலங்களில் பௌத்த வெறிக்கும்பல் அரசாங்கத்தின் ஆதரவோடு முஸ்லிம்களை ஈவிரக்கம் இல்லாமல் இனப்படுகொலை செய்து வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த வெறியாட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வெட்டியும் எரித்தும் கொல்லப்பட்டுள்ளனர். புத்த பிக்குகள் கொலைப்படையை வழிநடத்துவது, இணையதங்களில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

ராகின் தேசியவாதிகள் எனப்படும் பௌத்த பயங்கரவாதிகளால் ஆயிரக்கணக்கான முஸ்-ம்களைப் படுகொலை செய்வது 1942ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து வருகிறது. 18.03.1942 அன்று 5 ஆயிரம் ராகின் முஸ்லிம்கள் பௌத்த பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இன்றுவரை அந்த வெறியாட்டம் பௌத்த பேரினவாதப் பின்னணியோடும் அரசு ஆதரவோடும் தொடர்ந்து வருகிறது. குடியுரிமை மறுக்கப்பட்டு கல்வி வேலைவாய்ப்புகளில் ஒடுக்கப்பட்டு கொடுமைகள் இழைக்கப்பட்டு மரணத்தின் விளிம்பில் பீதியோடு நிறுத்தப்பட்டுள்ள வறுமை முஸ்லிம்களுக்கு தமுமுக தனது தார்மீக ஆதரவைத் தெரிவிப்பதோடு, மத்திய அரசு மியான்மர் தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டுமென்றும் தமுமுக வலியுறுத்துகிறது.

இந்திய யுனியன் முஸ்லிம் லீக் கடலூர் மாவட்டத்தின் சார்பில் மாவட்டத் தலைநகர் கடலூரில் முப்பெரும் கோரிக்கைப் பேரணி


 நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் வழங்கப்படும் 3.5 சதவீத தனி இட ஒதுக்கீட்டை உயர்த்தி தர வேண்டும்.

தமிழகம் முழுவதும் நாளை கல்லுரிகள் திறப்பு

சென்னை:ஏப்ரல் 2
/
இரண்டு வார கால வரையற்ற விடுமுறைக்குப் பின், பொறியியல் மற்றும் அரசு கலை கல்லூரிகள், நாளை திறக்கப்படுகின்றன. வருடாந்திர இறுதி தேர்வுகளும் திட்டமிட்ட படி நடக்கும் என, தெரிகிறது.
/
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள், மார்ச், 9ம் தேதி முதல் போராட்டத்தை துவங்கி, பல்வேறு கட்டமாக நடத்தி வந்தனர். மாணவர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், கலை கல்லூரிகள், மார்ச், 15ம் தேதியும், பொறியியல் கல்லூரிகள், 18ம் தேதியில் இருந்தும், கால வரையின்றி மூடப்பட்டன. விடுதிகளில் இருந்து, மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.கல்லூரிகள் மூடப்பட்ட நிலையிலும், மாணவர்கள், கூட்டமைப்புகளை உருவாக்கி, போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.
/
பொதுமக்கள், தமிழ் உணர்வாளர்கள் என, பலரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். “போராட்டத்தை கைவிடுங்கள்’ என, அரசியல் கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்தனர்.”போராட்டம் வேண்டாம்’ என, முதல்வரும் கேட்டுக் கொண்டார். எனினும், மாணவர்கள், பல்வேறு இடங்களில், போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால், மீண்டும் கல்லூரி திறப்பதில் கேள்விக்குறி எழுந்தது.

திங்கள், 1 ஏப்ரல், 2013

முப்பெரும் கோரிக்கைகளை வலியுறுத்தி இ.யூ.முஸ்லிம் லீக் நாளை கடலூரில் பேரணி

ல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்தி தர கோரியும், பூரண மதுவிலக்கை அமல் படுத்த வேண்டியும், நீண்ட கால சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரியும் வரும் ஏப்ரல் 2ம் தேதி செவ்வாய்கிழமை தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கோரிக்கை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. ஒரே நாளில் நடைபெறும் இந்நிகழ்ச்சிகளில் தமிழகம் முழுவதும் லட்சத்திற்கு மேற்பட்டோர் அணி திரள்கின்றனர்.

கேரள மாநிலம் கோழிக் கோட்டில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி முப்பெரும் கோரிக்கை பேரணிகள் நாடு தழுவிய அளவில் நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல்லில் நடை பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஏப் 2ம் தேதி தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் ஒரே நாளில் நடைபெறுகின்றன.

இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்சவூதி அரேபியா அரசு நடவடிக்கை எடுக்கும் சவூதி இளவரசர் உறுதி

உள்நாட்டு மக்களுக்குவேலை வாய்ப்பு திட்டத்தால் இந்தியர்களுக்கு பாதிப்புஏற்படாத வகையில் சவூதிஅரேபியா அரசு நடவடிக்கைஎடுக்கும் என மத்தியவெளியுறவுத்துறை இணைஅமைச்சரும் இந்திய யூனியன்முஸ்லிம் லீக் தேசியதலைவருமான இ. அஹமதுசாகிபிடம் சவூதி இளவரசரும்அந்நாட்டின் வெளியுறவுத்துறை இணை அமைச்சருமானஅப்துல் அஜீஸ் பின் அப்துல்லாபின் அப்துல் அஜீஸ் உறுதிகூறியுள்ளார்.

உள்நாட்டு மக்களுக்கு 10சதவீதம் வேலைவாய்ப்பு வழங்குவதை கட்டாயமாக்கும், சவுதிஅரேபிய தொழிலாளர் சட்டத்தால் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும்அபாயம் ஏற்பட்டுள்ளது குறித்து,அந்நாட்டு அரசிடம் மத்திய அரசுகவலை தெரிவித்துள்ளது.சவுதி அரேபியாவில்வேலைவாய்ப்பு இல்லாதவர்கள்எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டில்அங்கு, மக்கள் தொகையில் 12.2சதவீதம் பேர், அதாவது 5,88,000 பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இவர்களில் 39சதவீதத்தினர் 15 முதல் 25வயதுக்கு உட்பட்டவர்கள் என்றுகண்டறியப்பட்டுள்ளது.