AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

கடலூர் மாவட்டத்தில் பொது இடத்தில் புகை பிடித்தால் ரூ.200 அபராதம்: கலெக்டர் எச்சரிக்கை

கடலூர், ஏப்.25-
புகையிலை மற்றும் புகையிலை பொருட்கள் தடுப்பு சட்ட அமலாக்கம் குறித்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கலெக்டர் கிர்லோஷ்குமார் தலைமையில் நடைபெற்றது தமிழகத்தில் குறிப்பிட்ட 8 மாவட்டங்களுக்குள் ஒன்றான கடலூர் மாவட்டத்திற்கு வரும் 2014-க்குள் புகையிலை இல்லா மாவட்டமாக அங்கீகாரம் செய்யப்பட வேண்டும் என்று திட்டமிடப்பட்டு அதற்குரிய ஆயத்த பணிகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இச்சட்ட அமுலாக்கம் மற்றும் விழிப்புணர்வு, மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் போன்ற அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும், கலெக்டருமான கிர்லோஷ்குமார், தலைமையில் பிற துறைகளுடன் கூடிய ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. 


கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- 

பொது இடங்களில் புகைபிடித்தால் ரூ.200 அபராதம் வசூலிக்கப்படும். மேலும் அலுவலகம், ஓட்டல், கடைகள் மற்றும் பொது இடங்களில் புகைபிடித்தல் தண்டனைக்குரிய குற்றம் என்ற வாசகம் அமைக்கப்பட வேண்டும். புகையிலை பொருட்கள் சம்மந்தமான விளம்பரம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விளம்பர படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே விளம்பரம் அமைத்தல் கூடாது. 18 வயதினருக்குட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது. 

அதேபோல் 18 வயதினருக்குட்பட்டவர்களை புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுத்தக்கூடாது. கடைக்காரர்கள் கயிறு, நெருப்பு, தீப்பெட்டி போன்றவைகளை வெளியில் புகை பிடிப்பவர்களுக்கு கொடுக்கக்கூடாது. மேற்கண்டவற்றில் விதி மீறல் இருந்தால் புகையிலை பொருட்கள் மற்றும் விளம்பர பலகைகள் பறிமுதல் செய்வதுடன், அபராதமும் விதிக்கப்படும். கூட்டத்தில் துணை இயக்குனர், சுகாதாரப் பணிகள், இணை இயக்குனர், மருத்துவம், அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், மாவட்ட ஆலோசகர், நிர்மலா மற்றும் இதர பிறதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இவ்வாறு அவர் பேசினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக