AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

தினமலர் செய்தி: தவறான புகைப்படத்திற்கு நேரில் வருத்தம் தெரிவித்த தினமலர் செய்திக்குழு

Add caption
Add caption
 மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜே.எஸ். ரிபாயி வெளிடும் பத்திரிக்கை அறிக்கை:
இன்று (27-4-2013) அன்று வெளிவந்த தினமலர் நாளிதழ் 11ஆம் பக்கத்தில் வெளியிட்டிருந்த தேசிய பாதுகாப்பு சட்டத்தில் தமீம் அன்சாரி கைது:ஐகோர்ட் ரத்து என்ற செய்தியில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமீமுன் அன்சாரி அவர்களின் புகைப்படமும் அவருக்கு சம்மந்தமே இல்லாத செய்தியும் பிரசுரிக்கப்பட்டது.
இச்செய்தி படித்து தமிழகம் முழுவதிலிருந்தும் தினமலர் நாளிதழுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து சென்னை தினமலர் செய்திக்குழுவின் சார்பாக செய்தி ஆசிரியர் லெனின் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு தமுமுக தலைமையகத்திற்கு வருகை தந்து என்னிடம் (தலைவர் ஜே.எஸ்.ரிபாயி) மேற்படி தவறுகாக வருத்தம் தெரிவிப்பதாகவும், இதற்கு நாளையே மறுப்பும் மமக தலைவரின் அறிக்கையும் வெளியிடுவதாகவும் தெரிவித்தனர். மேலும் தினமலர் இணையத்திளத்தில் உள்ள செய்தியில் தவறான புகைப்படத்தை அப்புறப்படுத்திவிட்டதாகவும், தெரிவித்தனர். இந்த பேச்சுவார்ûத்தையின் அடிப்படையில் இப்பிரச்சினைக்கு சுமூகமாக தீர்க்கப்பட்டது. இப்பேச்சு வார்த்தையின் போது மாநிலச் செயலாளர், பி.எஸ். ஹமீது, வடசென்னை மாவட்ட தலைவர் எப். உஸ்மான் அலி, தென் சென்னை மாவட்ட தலைவர் சீனி முகம்மது உட்பட மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அன்புடன்,
(ஜே.எஸ்.ரிபாயீ )

0 கருத்துகள்:

கருத்துரையிடுக