AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 1 ஏப்ரல், 2013

முப்பெரும் கோரிக்கைகளை வலியுறுத்தி இ.யூ.முஸ்லிம் லீக் நாளை கடலூரில் பேரணி

ல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்தி தர கோரியும், பூரண மதுவிலக்கை அமல் படுத்த வேண்டியும், நீண்ட கால சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரியும் வரும் ஏப்ரல் 2ம் தேதி செவ்வாய்கிழமை தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கோரிக்கை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. ஒரே நாளில் நடைபெறும் இந்நிகழ்ச்சிகளில் தமிழகம் முழுவதும் லட்சத்திற்கு மேற்பட்டோர் அணி திரள்கின்றனர்.

கேரள மாநிலம் கோழிக் கோட்டில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி முப்பெரும் கோரிக்கை பேரணிகள் நாடு தழுவிய அளவில் நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல்லில் நடை பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஏப் 2ம் தேதி தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் ஒரே நாளில் நடைபெறுகின்றன.



பேரணி நடைபெறும் ஊர்கள்:

திருவள்ளுர், திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி, திருப்பூர், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விழுப்புரம், தூத்துக்குடி, சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பேரணி நடைபெறுகின்றன. பேரணி முடிவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்கள்:

பேரணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட ஊர்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னை, திருநெல்வேலி, கோவை, காஞ்சிபுரம், தருமபுரி, நாமக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, அரியலூர், விருது நகர், இராமநாதபுரம் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

டவுன் ஹால் மைதானத்திலிருந்து...

கடலூர் மாவட்டத்தில் கடலூர் டவுன் ஹால் மைதானத்திலிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை பேரணி பச்சிளம் பிறைக் கொடிகளுடன் புறப்பட்டு கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்படுகிறது. இப்பேரணியில் விருதாச்சலம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, மங்கலம்பேட்டை, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், லால்பேட்டை, புவனகிரி, முட்லூர் ஆகிய மாவட்டத்தின் பல ஊர்களிலுருந்தும் பெருமளவில் கலந்து கொள்ள இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் தளபதி ஏ .ஷபிகுர் ரஹ்மான் இமாவட்ட தலைவர் கே.ஏ. அமானுல்லாஹ் இமாவட்ட செயலாளர் ஏ .சுக்கூர் உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பேரணி ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இதே போன்று தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாநில நிர்வாகிகள், முன்னணி தலைவர்கள் தலைமையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறு கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக