AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 1 ஏப்ரல், 2013

இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்சவூதி அரேபியா அரசு நடவடிக்கை எடுக்கும் சவூதி இளவரசர் உறுதி

உள்நாட்டு மக்களுக்குவேலை வாய்ப்பு திட்டத்தால் இந்தியர்களுக்கு பாதிப்புஏற்படாத வகையில் சவூதிஅரேபியா அரசு நடவடிக்கைஎடுக்கும் என மத்தியவெளியுறவுத்துறை இணைஅமைச்சரும் இந்திய யூனியன்முஸ்லிம் லீக் தேசியதலைவருமான இ. அஹமதுசாகிபிடம் சவூதி இளவரசரும்அந்நாட்டின் வெளியுறவுத்துறை இணை அமைச்சருமானஅப்துல் அஜீஸ் பின் அப்துல்லாபின் அப்துல் அஜீஸ் உறுதிகூறியுள்ளார்.

உள்நாட்டு மக்களுக்கு 10சதவீதம் வேலைவாய்ப்பு வழங்குவதை கட்டாயமாக்கும், சவுதிஅரேபிய தொழிலாளர் சட்டத்தால் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை இழக்கும்அபாயம் ஏற்பட்டுள்ளது குறித்து,அந்நாட்டு அரசிடம் மத்திய அரசுகவலை தெரிவித்துள்ளது.சவுதி அரேபியாவில்வேலைவாய்ப்பு இல்லாதவர்கள்எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டில்அங்கு, மக்கள் தொகையில் 12.2சதவீதம் பேர், அதாவது 5,88,000 பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இவர்களில் 39சதவீதத்தினர் 15 முதல் 25வயதுக்கு உட்பட்டவர்கள் என்றுகண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து சொந்தமக்களுக்கு வேலைவாய்ப்பைஅதிகரிக்கும் வகையில், நிதாகத் என்ற திட்டத்தை சவுதிஅரேபிய அரசு தயாரித்துள்ளது இந்த புதிய தொழிலாளர்சட்டத்தின்படி, ஒவ்வொரு நிறுவனமும், உள்நாட்டுமக்களில் 10 சதவீதம் பேருக்குகட்டாயம் வேலைவாய்ப்புஅளிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உள்நாட்டுமக்களை பணியில் சேர்த்துக்கொள்ளாத நிறுவனங்கள் மீதுகடும் நடவடிக்கை எடுக்க சவுதிஅரேபிய தொழிலாளர் துறைமுடிவு செய்துள்ளது.
தற்போது இந்த பணிகளில் பெரும்பாலும் இந்தியர்கள்தான் உள்ளனர்.புதிய சட்டத்தால் இவர்கள் வேலையிழக்கும் நிலையில்உள்ளனர். இந்நிலையில், தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் சென்றுள்ள வெளியுறவுத்துறை இணையமைச்சர் இ.அகமது,அந்நகரில் நடக்கும் மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள வந்த,சவுதி அரேபிய இளவரசரும்,வெளியுறவு துணை அமைச்சருமான அப்துல் அஜிஸ் பின் அப்துல்லா பின் அப்துல் அஜிசைசந்தித்து இந்தியாவின் கவலையை எடுத்துரைத்தார்.
இதைக் கேட்டுக் கொண்டசவுதி இளவரசர், இந்தியாவுடன் நல்ல நட்புறவு நீடித்து வரும் நிலையில், தற்போது பணியாற்றிவரும் தொழிலாளர் களுக்குபாதிப்பு ஏற்படாத வகையில்சவுதி அரேபிய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றுஉறுதி அளித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக