AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

இந்திய யுனியன் முஸ்லிம் லீக் கடலூர் மாவட்டத்தின் சார்பில் மாவட்டத் தலைநகர் கடலூரில் முப்பெரும் கோரிக்கைப் பேரணி


 நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு 10 சதவீத தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் வழங்கப்படும் 3.5 சதவீத தனி இட ஒதுக்கீட்டை உயர்த்தி தர வேண்டும்.
 
மது விலக்கை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் கடலூரில் நேற்று டவுன்ஹாலில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதி பேரணி சென்றனர். மாநில துணை தலைவர் ஷபிகுர் ரஹ்மான், மாநில தலைமை நிலைய பேச்சாளர் ராஷித்ஜான் ஆகியோர் தலைமை தாங்கினார். 
மாவட்ட தலைவர் அமானுல்லா, மாவட்ட செயலாளர் கக்கூர், மாவட்டப் பொருளாளர் அப்துல் காப்பார்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் நகர தலைவர் ஜபார், செயலாளர் முகமது இஸ்மாயில் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கடலூர், பிமுட்லூர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், கனகராப்பட்டு, லால்பேட்டை, ஆயங்குடி, கொள்ளமேடு, மானியம் ஆடூர் ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமானோர் பேரணியில் கலந்து கொண்டனர்.
பேரணியை தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஷபிகுர் ரஹ்மான் தலைமையில் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.

 செய்தியாளர்களுக்கு பேரணியின் நோக்கம் குறித்து மாநில துணைத் தலைவர் தளபதி ஏ.ஷபீகுர் ரஹ்மான் பேட்டியளிக்கிறார்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக