AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

பர்மாவில் முஸ்லிம்கள் படுகொலை: சென்னையில் முஸ்லிம்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்

பர்மாவில் முஸ்லிம்கள் திரளாக வசித்துவரும் மாநிலங்களில் பௌத்த வெறிக்கும்பல் அரசாங்கத்தின் ஆதரவோடு முஸ்லிம்களை ஈவிரக்கம் இல்லாமல் இனப்படுகொலை செய்து வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த வெறியாட்டம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் வெட்டியும் எரித்தும் கொல்லப்பட்டுள்ளனர். புத்த பிக்குகள் கொலைப்படையை வழிநடத்துவது, இணையதங்களில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

ராகின் தேசியவாதிகள் எனப்படும் பௌத்த பயங்கரவாதிகளால் ஆயிரக்கணக்கான முஸ்-ம்களைப் படுகொலை செய்வது 1942ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து வருகிறது. 18.03.1942 அன்று 5 ஆயிரம் ராகின் முஸ்லிம்கள் பௌத்த பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இன்றுவரை அந்த வெறியாட்டம் பௌத்த பேரினவாதப் பின்னணியோடும் அரசு ஆதரவோடும் தொடர்ந்து வருகிறது. குடியுரிமை மறுக்கப்பட்டு கல்வி வேலைவாய்ப்புகளில் ஒடுக்கப்பட்டு கொடுமைகள் இழைக்கப்பட்டு மரணத்தின் விளிம்பில் பீதியோடு நிறுத்தப்பட்டுள்ள வறுமை முஸ்லிம்களுக்கு தமுமுக தனது தார்மீக ஆதரவைத் தெரிவிப்பதோடு, மத்திய அரசு மியான்மர் தூதரை நேரில் அழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டுமென்றும் தமுமுக வலியுறுத்துகிறது.


பர்மா முஸ்லிம் இனப்படுகொலைகளைக் கண்டித்தும், அதற்காக தீர்வு காண வ-யுறுத்தியும் தமுமுக சார்பில் இன்று 02.04.2013 (செவ்வாய் கிழமை) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் முஸ்லிம்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக மூத்த தலைவர் எஸ். ஹைதர் அலி அவர்கள் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர்,ஒ.யு. ரஹ்மத்துல்லா மாநில செயலாளர்கள் பேரா.ஜெ.ஹாஜாகனி, பி.எஸ். ஹமீது, காஞ்சி மீரான் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்பு செயலாளர்கள் எஸ். ஜைனுலாபிதீன், நாசர் உமரி உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் தென்சென்னை மாவட்ட தமுமுக தலைவர் ஜெ. சீனிமுஹம்மது முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வடசென்னை மற்றும் தென்சென்னை மாவட்ட மற்றும் பகுதி தமுமுக நிர்வாகிகள் உட்பட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர். வடசென்னை மாவட்ட தமுமுக தலைவர் எப்.உஸ்மான் அ- நன்றியுரையாற்றினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக