AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 15 ஏப்ரல், 2013

லால்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி அமைய சட்டமன்றத்தில் குரல் ஒலித்தது

தமிழக சட்டமன்றதில் லால்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி அமைய குரல் எழுப்பிய காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு ந.முருகுமாரன் அவர்களுக்கு நன்றி !நன்றி !!நன்றி !!!

லால்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி அமையவேண்டும் என்று லால்பேட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது
லால்பேட்டை த.மு.மு.க வும் தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகிறது

15.12.2012 மாலை லால்பேட்டை நகர தமுமுக, மமக பொதுக்குழு கூட்டத்தில் லால்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உருவாக சில தடைகள் உள்ளதால் அதை தகர்தெரிய உணர்வுமிகு போராட்டம் நடத்தப்படும்.என்று தீர்மானம் நிறைவேற்ற பட்டது அதனை தொடர்ந்து அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் முறையாக கோரிக்கை மனு அனப்பபட்டது.
பள்ளி அமைவதில் தொடர்ந்து கால தாமதம் ஏற்ப்பட்டதால் 20.03.2013 அன்று நடந்த நகர த.மு.மு.க நிர்வாக குழு கூட்டத்தில் முதல் கட்டமாக சுவரொட்டிகள் ஓட்டுவது என்று முடிவெடுக்க பட்டது. அதனை தொடர்ந்து 21.03.2013 அன்று லால்பேட்டை முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.



லால்பேட்டை நகருக்கு வருகை தந்த சுற்று சுழல் அமைச்சர் எம்.சி.சம்பத் அவர்களையும் காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு ந.முருகுமாரன்அவர்களையும் த.மு.மு.க மாவட்ட துணை செயலாளர் மௌலவி அப்துல் சமது அவர்களும் மனித நேய மக்கள் கட்சி பேரூராட்சி மன்ற துணை தலைவர் அஹ்மத் அலி அவர்களும் சந்தித்து அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி அமைய கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கையின் இரண்டாம் கட்டமாக காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறப்பினர் ந.முருகுமாரன் MLA அவர்களின் தலைமையில் பேருராட்சி மன்ற தலைவர் A.R.சபியுல்லாஹ் ,பேருராட்சி மன்ற துணை தலைவர் அஹ்மத் அலி ,த.மு.மு.க மாவட்ட துணை செயலாளர் மௌலவி அப்துல் சமது ஆகியோர் சென்னை சட்டமன்ற அலுவலகம் சென்று சுற்று சுழல் அமைச்சர் எம்.சி.சம்பத் அவர்களையும் கல்வி அமைச்சர் வைகை செல்வன் அவர்களையும் நேரில் சந்தித்து லால்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி அமைய விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கை நிறைவேற துவா செய்யவும்.....


அல்ஹம்துலில்லாஹ்... புகழ் அனைத்தும் இறைவனுக்கே....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக