AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

அன்பார்த்த கொள்ளுமேடு சகோதர்களே நமதூரில் அமைதியும்,ஒற்றுமையும் எங்கே சென்றது ?

                               அன்பிற்கினிய கொள்ளுமேடு சகோதரர்களுக்கு,

                       அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹ் 


இந்த கடிதம் இஸ்லாமிய சிந்தனையோடும், பொதுநலத்தோடும், நடுநிலை சிந்தனையோடும் உங்கள் அனைவரையும் சந்திக்கட்டுமாக.

அன்பு சகோதரர்களே!

இந்தச் சமுதாயம் கருத்துவேறுபாடுகள் நிறைந்த சமுதாயமாகும். முஸ்லிம்களுக்கிடையிலான இந்த கருத்து வேறுபாடுகள் கியாமத் நாள்வரை இருக்கக்கூடியது! அனைவரும் ஒருமித்தக் கருத்தையுடைய சமுதாயமாக மாறுவது என்பது நடைமுறைக்கு சாத்தியமானதன்று! எனவே எனது கருத்துக்கு ஒருவர் மாறுபட்டிருக்கின்றார் என்பதற்காக அவர் ஏக இறைவனை மட்டுமே வழிபடும் முஸ்லிமாக இருந்தும் அவரை கேவலமாக விமர்சிப்பது என்பது ஒரு உண்மையான முஃமினுக்கு உரிய பண்பாக இருக்கமுடியாது! ‘ஒரு முஸ்லிம் பிறமுஸ்லிமுடைய கண்ணியத்தைக் களங்கப்படுத்துவது ஹராமாகும்’ என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை நாம் எக்கணமும் மறந்துவிடக்கூடாது.


எனவே நாம் நம்முடைய பிறசகோதரர்களை கீழ்தரமாக எண்ணுவதையோ அல்லது அவர்கள் மனம் நோகும்படி கூறுவதையோ தவிர்க்கவேண்டும். அதை மீறி செயல்பட்டால், நாம் மறுமை நாளின் மீது உறுதியான நம்பிக்கையுடையவர்களாக இருந்தால், நம்மால் பாதிப்புக்குள்ளான சகோதரர்கள் நம்மை மன்னிக்காதவரை நாம் ஒரு அடி கூட எடுத்துவைக்க இயலாது என்பதை உறுதியுடன் நம்பவேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் நம்மீது சுமத்தப்பட்டடுள்ள பொறுப்புகளை நிறைவேற்றக் கடமைபட்டவர்களாக இருக்கின்றோம். அதில் ஒன்று தான் ஒவ்வொருவரும் தம்மையும், தம் குடும்பத்தார்களையும் மற்றும் தம்மைச் சார்ந்தவர்களையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்வது! அல்லாஹ் கூறுகின்றான்:

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (அல்-குர்ஆன் 66:6)


இப்போது  நான் நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.

சமிபகாலமாக நமதூரில் தனிப்பட்டவர்களின் சொத்துக்களை சூரையாடியும், செதப்படித்தியும் சில விஷமிகள் செய்துவருகிறார்கள் என்பதை தாங்கள் அறிவிர்கள். S .K  .M  மளிகை கடையில் 200 லிட்டர்  எண்ணெய் பாரலை தரையில் சாத்தி சேதப்படுத்தியது ,அப்துர் ரஹ்மான் டீ கடையில் இன்வட்டரையும் களவாடியதும், சாம்பாரில் மண்ணை கொட்டியதும் ,அல் அமான் பள்ளி வாகனத்தை சேதப்படுத்தியும்,ஆம்பிளிபார் மைக்கையும் களவாடியது , நமக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும்  என்பதற்காக மொட்ட கடிதங்களை எழுதி அவதூர்களை பரப்பியும் வருகிறார்கள்.

அந்த வகையில் இரண்டு நாள்களுக்கு முன்பு  கூபா தெருவில் இருக்கும் மர்ஹூம்  நஸ்ருத்தீன் மகன் அப்துல் ஹலீம் அவரின் தோட்டத்தில் 40 மேல்பட்ட வாழை மரம் பயிர் செய்து  இருந்தார் இன்னும் ஒரு மாதத்தில் வாழைத்தார் அறுவடைக்கு வளர்ந்து வந்து    இருக்கும். இந்த நிலையில் அனைத்து வாழை மரத்தையும் சேதப்படுத்திவிட்டார்கள்.  தனிநபரின் பொருளாதரத்தை சேதப்படுத்தும் விஷமிகளின் இந்த செயல்கள் கோழைத்தனமானது அல்லவா?  இது வண்மையாக கண்டிக்கத்தக்கது அல்லவா ? மேலும் பாதிக்கப்பட்டவரின் சாபம் அவர்களை சும்மா விடுமா ? இன்று பாதிக்கப்பட்டவர்களின் சாபத்திலிருந்து அந்த கயவர்கள் தப்பலாம்  ஒருநாள் இல்லை ஒருநாள் அவர்களின் சாபம்  அந்த கயவர்களை வந்துதடைந்தே தீரும்.

அநீதி இழைக்கப்பட்டவரின் சாபத்திலிருந்து உங்களை பாதுக்கார்த்துக்கொல்லுங்கள் என்று வல்ல இறைவன் கூறி  இருக்கிறான் ஆகையனால் சகோதர்களே அஞ்சிக்கொள்ளுங்கள்.

அநியாயக் காரர்களின் 
தவறுகள் சுட்டிக்காட்டுவது 
தண்டிக்கபடுவதற்காக அல்ல 
சுட்டி காட்டி அதை திருத்துவதற்காக 

நீதி மறுக்கப்படலாம்
ஆனால் நிச்சயமாக 
நியாயங்கள் தண்டிக்கப் படக்கூடாது

 ஒரு ஆர்.எஸ்.எஸ் காரன், ஒரு பி.ஜே.பிக்காரன் மேலோ அல்லது இந்து முன்ணணிக்காரன் மீதோ அபாண்ட பழிசுமத்தி வழக்கு தொடுத்து ஒருவருக்கொருவர் மோதிக்கொள்வதில்லை அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு இயக்கங்களைச்சார்ந்தவர்களாக இருந்த போதிலும்.

ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றிப்பிடியுங்கள் என்ற நம் மார்க்கத்தின் நல்ல கருத்தை வேற்றுமை என்னும் கயிற்றை வசதிக்குத்தகுந்தார்போல் பற்றிப்பிடித்துக்கொண்டு சங்கடப்பட்டுக்கொண்டிருக்கிறது நம்ம ஊர்.

அல் குர்-ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் ஏக இறைவனுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்ட தலைமையில் சத்திய தூதர் வழியில் ஸஹாபாக்கள் இருந்ததால் அல்லாஹ் இஸ்லாத்தினை அவர்கள் மூலமாக நம் அளவில் கொண்டுவந்துள்ளான்..

அந்த வகையில் யாருதான் இந்த அநியாயங்களை செய்துவருகிறார்கள் என்று தெரியாமல் இவன் செய்துயிருபானோ இல்லை அவன் செய்துயிருப்பானோ என்று ஒருவருக்கு ஒருவர் முகமன் (சலாம் )கூறிக்கொள்ளாமல் சந்தேகத்தின் அடிப்படையில் பிரிந்து கிடைக்கின்றோம்.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால்.


மனிதர்களின் உள்ளத்தில் உள்ளதை நாம் அறிய முடியாத பொது அல்லாஹ்வின் பொறுப்பில்  விட்டு விட்டு பிரச்னையை முடிவிற்கு கொண்டுவருவதை தவிர மனிதனுக்கு வேறு வழி இல்லை 


கருத்துவேர்ப்பாட்டால் இருப்பிரிவுகலாக பிரிந்து செயல்ப்பட்டு வருபவர்க்கு மத்தியில் சந்தேகங்களும், கோபங்களும்,குழப்பங்களும், நாளுக்கு நாள் அதிகரித்தவண்ண உள்ளது ஒருநாள்  விபரிதமான நிகழ்வுகள் நடர்ந்துவிடுமோ என்ற அச்சத்தால் மக்கள் ஒற்றுமையையும் அமைதியையும் இழந்து   வாழ்கிறார்கள். யார் இந்த குற்ற செயல்களை செய்கிறார்கள் என்று விசாரித்தால் சத்தியமாக எங்க பசங்க இந்த காரியத்தை செய்யமாட்டார்கள் என்று அடித்து சொல்வார்கள் ஒவ்வொருவரும் மற்றவர் மேல் குற்றங்களை சுமத்திக்கொண்டு வருகிறார்கள் .மறைவான செயல்களை அறியக்கொடியவன் அல்லாஹ் ஒருவனே ! ஆகைனால் நமக்குள் இருக்கும் விருப்பு வெறுப்புகளை தூக்கி எறிந்துவிட்டு   பொதுநல நோக்கத்தோடு ஊர் நன்மையை கருதி  இவர்களுக்கு மத்தியில் நாம் ஒற்றுமையையும் அமைதியையும் ஏற்ப்படுத்த வேண்டும். ஆகைனால் இருத்தரப்புகளில் போதுப்படையானவர்கள் சேர்ந்து பிரச்சைக்குரிய இருசாராரையும்   அழைத்து  முபாஹலா செய்ய சொல்வதுதான் இந்த குழப்பங்களுக்கு தீர்வு ஏற்ப்படும்.


ஒருவர் உண்மை சொல்கிறாரா பொய் சொல்கிறாரா என்பது ஒரு பிரச்சனை இந்த பிரச்சையில் எந்த முடிவும்  எட்டப்பாடா விட்டால் அதற்க்கு ஒரு தீர்வு காண்டாக வேண்டும் அந்தத் தீர்வுதான் அல்லாஹ்வின் பொறுப்பில்  விட்டு விடுவதாகும். அதுதான் முபாஹலா என்பதாகும்.


ஒற்றுமை வீழ்த்தப்பட்டுவிட்டது. பிரிவுகள் கொழுத்து வருகின்றன. ஒற்றுமை ஏற்பட வழியே இல்லையா? மானுட ஒற்றுமை சாத்தியமே இல்லாததா?- மனிதநேய விரும்பிகளின் ஏக்கம் விரிந்து செல்கிறது. நமதூரில் இதுகாலம் ஒற்றுமை ஏற்பட யாரும் எந்த முயற்சியும் செய்யவில்லை. என்பதுதான் வேதனைக்குரிய கசப்பான உண்மை. பிரிவுகள் பெயரால் நேர்வழி வழிகேடாகவும், வழிகேடு நேர்வழியாகவும் சித்தரிக்கப்படுகின்றன.  

மேலும் இருப்பிரிவிலும் இந்த விஷமத்தனத்தை   செய்யாமல் முன்றாவதாக ஒரு கயவன் இருக்கலாம். ஊர் இரண்டுப்பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல அமைந்துவிடக்கூடாது.நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இந்த ஏற்பாட்டை இந்த தருணத்தில் நாம் செய்ய தவறினால் நாளை நம் பிள்ளைகளும் இந்த சூழ்ச்சிகாரர்களின் வலையில் விழுந்து விடமாட்டார்களா? இதை நாம் தடுக்க வேண்டாமா ? இல்லை நாளை மறுமையில் இறைவனிடத்தில் நற்பதவி  பெறாமல் நஷ்டவாளியாக  நாம் ஆகா வேண்டுமா? எனதருமை சகோதர்களே ! நாம்  சிந்திக்க வேண்டாமா?

இதை படித்துவிட்டு ஏனோதானோ என்று இல்லாமல் நம் ஊர் நலனை கவனத்தில் கொண்டு உங்களுடைய ஆலோசனைகளையும், கருத்துக்களையும்,  கண்டிப்பாக தெரியப்படுத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .


யார் எக்கேடு கெட்டுப்போனால் நமக்கென்ன? நாம் உண்டு! நமது வேலையுண்டு என்று சுயநலத்தின் மொத்த உருவாய் நாம் இருந்தால் நாளை நம் வீட்டு படியிலேயே இந்தமாதரியான பிரச்சனைகள் வந்து அடையவும்.

எந்த ஒரு சமுதாயமும் தன்னைத்தானே சீர்படுத்திக்கொள்ளதவரை அல்லாஹ் அவர்களுக்கு நேர் வழி காட்ட மாட்டான் என்பது வான்மறையின் கருத்து என்பதனை அனைவரும் அறிவோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானகவும்.தவறு செய்பவன் மனிதன். மனிதன் என்ற அடிப்படையில் தவறு இருபக்கமும் நடைதிருக்கலாம். இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மன்னித்துவிட்டு, தூய இஸ்லத்திற்காக பாடுபட முயலவேண்டும். ஊரில் திருத்தவேண்டியவைகள் நிறையவே உள்ளது என்பதை மட்டும் மனதில் நிறுத்தி சுயநலனை தூக்கி எறிந்து பொதுநல நோக்கத்தில் நடந்து வரும் சம்வங்களை அனுக முயற்சி செய்யலாமே. 

யா அல்லாஹ்! ஷைத்தானின் தீய சூழ்ச்சிக்கு உட்பட்டு முஸ்லிம்களுக்களுக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்தும் குழுச்சண்டைகளிலே எங்களின் சக்திகளை, நேரங்களை வீணடிக்காமல் அவைகளை நிரந்தர நரகத்திற்கு வழிகோலுகின்ற ஷிர்க் மற்றும் வழிகேட்டிற்கு இட்டுச்சென்று அதன் மூலம் நரகத்திற்கு வழிவகுக்கும் பித்அத்,குடிப்பழக்கங்கள் ,விபச்சாரங்கள் இன்னும் சமுதாய சீர்கேடுகள்  போன்ற செயல்களைச் செய்பவர்களைச் சீர்திருத்துவதில் திருப்புவதற்கு உதவி செய்வாயாக
!

என்றும் உங்கள் நலவிரும்பி 
ஜாக்கிர் ஹூசைன் 
தூபை 0 கருத்துகள்:

கருத்துரையிடுக