AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வெள்ளி, 3 மே, 2013

தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை பேஸ்புக், டுவிட்டரை கண்காணிக்க தனிப்படை

சென்னை : இளைஞர்கள் மட்டுமல்லாது பெரியவர்கள், சிறியவர்கள் என்று அனைவரும் பயன்படுத்தும் தளமாக பேஸ்புக், டுவிட்டர் உள்ளது. கம்ப்யூட்டரில் மட்டுமே அதிகமாக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த இணையதளங்களை, இப்போது மொபைல் போன்களில் கூட பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இளைஞர்கள் மத்தியில் பேஸ்புக் பயன்படுத்தும் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பேஸ் புக்கை நல்ல நோக்கத்திற்காகவும் சிலர் பயன்படுத்துகின்றனர். 


சிலர், தவறான எண்ணத்தோடும் பயன்படுத்துகின்றனர். இதனால் சென்னை போலீசார் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் இணைய தளத்தை கண்காணிக்க முடிவு செய்துள் ளனர். இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், நேற்று காலை யில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, இணைய தளங்களை கண்காணிப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் இணையதளங்களை கண்காணிக்க, இணை கமிஷனர் அருண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் இணைய தளங்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, ''கடந்த சில மாதங்களாகவே இணைய தங்களை கண்காணித்தபோது, சமீபத்தில் மாணவர் போராட்டத்தை இணையத்தளங்கள் மூலமாகவே ஒருங்கிணைத்ததை கண்டுபிடித்தோம். செல்போனில் தனித்தனியாக அழைப்பது கடினம். எஸ்எம்எஸ் கொடுத்தாலும் போலீசார் எளிதாக கண்டுபிடித்தனர். இதனால், அவர்கள் பேஸ் புக்கை பயன்படுத்தியது தெரியவந்தது.

இது குறித்து ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், இனிமேல் பேஸ்புக், டுவிட்டர் இணையதளத்தை நாங்கள் கண்காணிப்போம். இதுபோன்ற செய்திகளை பயன்படுத்தும் பயன்பாட்டாளர்களுக்கு முதலில் எச்சரிக்கை செய்வோம். மீறி செயல்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு பேஸ்புக்கிற்கு அந்த இணையதள முகவரியை முடக்கும்படி கேட்டுக் கொள்வோம். ஆனால் தொடர்ந்து கண்காணிப்போம்'' என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக