AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 20 மே, 2013

எவரெஸ்ட் சிகரம் ஏறி சவுதி பெண் சாதனை

காட்மாண்டு : உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலைச் சிகரத்தில் ஏறி சவுதி அரேபிய பெண் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரைச் சேர்ந்த ரஹா மொஹாரக் (25) துபாயில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர் பெண்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள நாட்டிலிருந்து எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி மிகக்குறைந்த வயதில் எவரெஸ்ட் ஏறிய அரபு நாட்டவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இவருடைய குழுவில் 4 பேர் இடம் பெற்றிருந்தனர்.


நேபாள மக்களின் கல்வி திட்டத்துக்காக ரூ.550 லட்சம் திரட்ட மொஹாரக் திட்டமிட்டுள்ளார். ''எவரெஸ்ட் சிகரம் ஏறுவதை விட என் பெற்றோரிடமிருந்து அனுமதி வாங்குவதுதான் சிரமமாக இருந்தது. முதன்முதலில் எவரெஸ்ட் ஏறியது குறித்து நான் பெருமைபட்டுக்கொள்ளவில்லை. இரண்டாவதாக ஒருவர் எவரெஸ்ட் ஏறும் வரைதான் இந்த பெருமை நிலைக்கும்'' என்று தனது இணைய தள பக்கத்தில் மொஹாரக் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக