AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 7 மே, 2013

இந்தியத் தூதரகம் சவூதியில் உள்ள பல்வேறு நிறுவனங்களை தொடர்பு கொண்டு நிடாகத் திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நம் தேசத்தவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்க ஏற்பாடுகள் செய்து வருகின்றது அதன் பட்டியல்...


சவூதி அரேபியா தொழிலாளர் நலத்துறையின் நிடாகத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டு பணியாளர்களை குறைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை சவூதி அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் நிடாகத் திட்டத்தின் கீழ் வராத நிறுவனங்கள் மற்றும் பணியாளர்களை அந்த திட்டத்தின் வரையறைக்குள் வர மூன்று மாத கால அவகாசம் மன்னர் அப்துல்லாஹ் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்திற்குள் தங்களின் தகுதிக்கேற்ப பணிகளை தேடி தகுதி உள்ள நிறுவனங்களில் சேர்ந்து கொள்ளவேண்டும் என்று நம் சமூகத்தை கேட்டுக் கொள்கிறோம்.
சவூதியில் நிடாகத் திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டு வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள், நிடாகத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள அதாவது பச்சை வண்ண தகுதி உடைய நிறுவனங்களில் சேர்ந்து கொள்ள தொழிலாளர் நலத்துறையிலிருந்து இணையத்தளம் வெளியிடப்பட்டுள்ளது http://www.redyellow.com.sa/ இந்த இணையத்தளத்தில் (சவூதியில் உள்ளவர்கள் மட்டும்) உங்களின் முழுத்தகவல்களையும் CV உட்பட உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ளவும்.. அதே தளத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ள விபரமும் உள்ளன. தகுதி உடையவர்கள் நல்ல நிறுவனம் மற்றும் பணிகளை தேர்வு செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் ரியாதிலுள்ள நமது இந்தியத் தூதரகமும் பல்வேறு பெரிய நிறுவனங்களை அணுகி அந்த நிறுவனங்களில் காலி உள்ள இடங்களில் நமது தேசத்தவர்களை பணி அமர்த்தும்படியும் கேட்டுக்கொண்டுள்ளது அந்த வகையில் சவூதியில் மிகப் பெரிய நிறுவனமான அல்-மராய் நிறுவனம் 1500 இந்தியப் பணியாளர்களை எடுத்துக் கொள்வதாக வாக்களித்துள்ளது 01- 4700005 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லதுcrd@almarai.com என்ற மின் அஞ்சலிலோ தொடர்பு கொண்டு உங்களது வேலைகளை தேர்வு செய்து கொள்ளவும்.
நிடாகத் திட்டம் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பிரச்சனை சம்பந்தமாக சவூதி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நமது நாட்டின் அமைச்சர் குழு மத்திய அமைச்சர் வயலார் ரவி, இ அஹமது மற்றும் பிரதமரின் ஆலோசகர் டி.கே.ஏ நாயர் ஆகியாருடன் தூதரக அதிகாரிகளும் சவூதி தொழிலாளர் நல அமைச்சகம் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பல் வேறு சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தினர். இதற்கிடைய இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த இந்தியச் சமூகத்தின் முக்கிய பிரதிநிதிகளுடன் அமைச்சர் குழு சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன அதில் தமுமுக மத்திய மண்டலத் தலைவர் ஹூஸைன்கனி உட்பட பல் வேறு சமுதாயத் தலைவர்கள் கலந்து கொண்டு சமுதாயத்தின் பல்வேறு கோரிக்கைகள் வலியுருத்தப்பட்டன. மீண்டும் சவூதி அரசின் உயர் மட்ட அதிகாரிகளை சந்தித்த அமைச்சர் மற்றும் தூதரகக்குழு நல்ல பல முடிவுகள் இந்தியச் சமூகத்திற்கு காத்திருப்பதாகவும் திருப்திகரமாக உள்ளதாகவும் பதிலளித்தனர்.

இந்தியாவிலிருந்து சவூதி வந்து பணியாற்றி விஷா காலம் முடிந்து தங்கியிருப்பவர்கள், ஃபிரிவிஷாவின் மூலம் வெளியில் பணியாற்றி விட்டு ஸ்பான்சருக்கும் அவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு (ஹூரூப்) ஓடிப்போய்விட்டார் என்று குடியுரிமைதுறையில் புகார் அளித்து அதனால் தாயகம் செல்ல முடியாமல் இருப்பவர்கள் போன்றோர் உடனே தூதரகத்தை தொடர்பு கொண்டு உங்களின் விபரங்களை பதிவு செய்து கொள்ளுங்கள் அல்லது +966 1 4884697/4881982 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். அல்லது wel.riyadh@mea.gov.indcm.riyadh@mea.gov.in andhoc.riyadh@mea.gov.in.என்ற மின் அஞ்சல் முகவரிக்கு உங்களின் தகவல்களை மின் அஞ்சல் செய்யவும். தாயகம் திரும்பிச் செல்ல பதிவு செய்யும் தகுதிஉடைய அனைவரையும் தண்டனைகளின்றி தாயகம் அனுப்ப இந்தியத் தூதரகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. சவூதியின் கிராமபுறப்பகுதியில் உள்ளவர்கள் அங்கிருப்பவர்களுக்கு தகவல்கள் தெரிவித்து தூதரகத்தை தொடர்புகொள்ளச் சொல்லவும்.

மீண்டும் நினைவுபடுத்துகிறோம். இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் வாய்ப்புக்கிடைக்காது 3 மாத கால அவகாசம் முடிந்தவுடன் சவூதியில் கெடுபிடி கடுமையாக இருக்கும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. யாரெல்லாம் விஷா காலம் முடிவடைந்து சட்ட விரோதமாக தங்கியிருக்கிறீர்களோ அவர்கள் உடனே இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொள்ளுங்கள். பிரி விஷாவில் வந்து பணியாற்றியவர்கள் அல்லது சிகப்பு மற்றும் மஞ்சல் வண்ண தரத்தில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் இந்த தவனைக்குள் பச்சை வண்ண நிறுவனத்திற்கு மாறி விடுங்கள் அதறாக சிறப்பு ஏற்பாடு http://www.redyellow.com.sa/ என்ற இணையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது தொழிலாளர் அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த இணையத் தகவல்களை பச்சை வண்ண நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள பணிக்கப்பட்டுள்ளன.

அதிகமானோர் பணிதேடுகின்றனர் அதிக இடங்களில் வேலைகள் காலி உள்ளன நல்ல நிறுவனங்களை தேடி தேர்வு செய்து கொள்ளுங்கள்.

மேலும் அலோசனைகளுக்கு சவூதியின் அனைத்து மண்டல தமுமுக நிர்வாகத்தை எப்பொழுதும் தொடர்பு கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

Telecommunications Consultants India Limited Surveyors, Draughtsmen Supervisors (Electrical & Optical Fiber), Transformer Technicians, Masons, Painters, Overhead lines Construction Technicians, Carpenters, HDD with Saudi Driving License, Machine Operator with License, Electrical Cable Jointers, OFCs, Splicers, Data Entry Operators, Welders, Technician Substation, Electricians and Labours. Mr. P. Suresh Babu, Joint General Manager (Adm),
Mr. V. Anand, Administrative Officer
P O Box 88987
Riyadh 11672 2378671, Extn. 231.
Fax 1 2356072 tcilksa@tcil-india.com


Riyadh Cables Group 300 Indian workers (skilled and unskilled labour) Mr. P.T. Chandramohan
P O Box 26862
Riyadh 11496 00966-1-2650850 Fax 0996-1-2651423

Al Faraá Group, carpenters, masons, helpers, electricians, plumbers, aluminum fitters, heavy duty drivers, light duty drivers and painters. P.O. Box 3891, Riyadh 12211, +966 1 4661891 or fax + 966 1 4661682 or

Western Auto Company Ltd (Ashok Leyland), qualified executives and technicians under transferable Iqama. Washiullah
P.O. Box 41003, Dammam 31521 0540280044 mnaim@etawestern.com or viswa@etawestern.com

Almarai Company Over 1500 Indian workers in different fields include managerial, technical, supervisory, operator and labour category workers
(Click here for details) P.O. Box 8524, Riyadh 11492 01- 4700005 crd@almarai.com

Fawaz Thamir Al Mulhim Est 700 Workers with different skills Mr. Habeeb Mohammed 0504225180marketing@ftmventures.com

Al Manashy Contracting Company Engineers and Lobours etc. Khalid Abdulrahman Al Rashed 1-2222544 ext. 105
Fax 2222744

Nasser S. Al-Hajri Corporation Civil, Mechanical and Electrical categories S. Gopan
Sr. Officer - HR
Head Office Al-Khobar
Kingdom of Saudi Arabia
Tel : 00966 3 8650 009 –Extn: 239 Mob: 00966 5152 02479 00966 5663 18794gopan@alhajricorporation.com

Riyadh Oxygen Plant General Labour
25 Drivers
25 Workers Bassam Abdullah Al Kharashi 00966-1-448-5070
Fax 00966-1-446-8319

Al-Majdouie Logistics Mechanics, Technicians, Operators, Labour and Heavy Duty Driver Syed Burhanuddin
P O Box 366
Dammam 31411 00966-3-8198177
Fax 00966-3-8116125 burhan@almaj

Al -Rosan Co Plumbers Eid.S.Al.Otaibi 00966-1-4938888 eid7500@yahoo.com

Random Company Labours Khalid AlSobaie 0966-551691000
555149154 pmo@tmkkiin.com

PSG Danter V.Aboobacker 00966-3-8334100-Ext333
Fax 00966-3-8324750/831 aboobacker@psg.com.sa

INSHA Group Construction industry Mohamed Niaz Kooloth +569526236 niaz@inshagroup.com

The Indian workers who are interested in approaching the above-mentioned companies may note that the work contract agreement to be signed between the employee and employer is a private affair of both parties and Embassy of India is not responsible for any terms and conditions of the work contract.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக