AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 13 மே, 2013

அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகளை தடை செய்ய அரசு தயங்காது: முதல்வர் எச்சரிக்கை:

சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது : 

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகளை தடை செய்ய தமிழக அரசு தயங்காது. தமிழக அரசும், போலீசும் திட்டமிட்டு வழக்கு தொடர்வதாக ராமதாஸ் பேசுவது அபத்தமானது. ஜாமினில் வெளிவந்த பின்னரும் பா.ம.க.,வினரை தூண்டிவிடும் வகையில் பேசி வருகிறார். ராமதாஸ் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்படும். பா.ம.க.,வின் சட்டவிரோத நடவடிக்கைகளை பொறுத்துக்கொள்ள முடியாது. ராமதாஸ் கைது செய்யப்பட்ட பின்னர் பொதுச்சொத்துக்களுக்கு பா.ம.க.,வினர் சேதம் ஏற்படுத்தினர். கலவரத்தின் போது சேதமான சொத்துக்களுக்கு பா.ம.க.,விடமிருந்து நஷ்ட ஈடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேதம் குறித்து கணக்கிடப்பட்ட பின்னர் பா.ம.க.,விடமிருந்து நஷ்ட ஈடு பெறப்படும்.


வன்முறையில் 853 பஸ்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. வன்முறையில் பலநூறு கோடி சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பா.ம.க.,வினர் செய்த கலவரத்தில் டிரைவர் ஒருவர் மற்றும் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளனர். 111 பேர் காயமடைந்துள்ளனர்.

அரசியல் கட்சிகள் தங்களது எதிர்ப்புகளை ஜனநாயக முறைப்படி தான் தெரிவிக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடக்கூடாது. அரசியல் கட்சிகள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். ஆனால் பா.ம.க.,வினர் வன்முறையினர் ஈடுபட்டனர். இதனால் வடமாவட்ட மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை போக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வன்முறையில் ஈடுபடும் எந்த அரசியல் கட்சிகளையும் தடை செய்ய அரசு தயங்காது என கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக