AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 9 மே, 2013

சவுதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பும் 18,000 இந்தியர்கள்

புதுடெல்லி: சவுதி அரேபியாவில் அந்நாட்டு அரசின் புதிய சட்டத்தால் வேலை இழக்கும் 18 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர். இதற்காக அவர்கள் இந்திய தூதரகத்தில் அவசரகால சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.சவுதி அரேபியாவில் வேலையில்லா திண்டாட்டத்தை போக்க அந்நாட்டு அரசு, Ôநிதாகத்Õ என்ற புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, அங்கு உள்ள தனியார் நிறுவனங்கள் வெளிநாட்டினர் 10 பேரை பணி அமர்த்தினால், ஒரு சவுதி குடிமகனுக்கு வேலை வழங்க வேண்டும். இந்த விகிதாச்சாரத்தை அமல்படுத்துவதால், பல கம்பெனிகளில் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டினர் வேலை இழக்கின்றனர். தற்போது 2 லட்சம் இந்தியர்கள் சவுதியில் பணிபுரிகின்றனர்.
இவர்களில் ஏராளமானோர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், மக்களவையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி நேற்று கூறுகையில், Ôசவுதியில் வேலை இழக்கும் இந்தியர்கள் நாடு திரும்புகின்றனர். இதற்காக 18 ஆயிரம் இந்தியர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தில் அவசரகால சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். நிதாகத் சட்டப்படி விதிமுறைகள் பூர்த்தி ஆகாதவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று சவுதி அரசு பிரசாரம் செய்து வருகிறது. இதனால் ஏராளமானோர் அங்கிருந்து வெளியேற விண்ணப்பித்துள்ளனர். சட்டவிரோதமாக பணியாற்றிவரும் இந்தியர்கள் மட்டுமின்றி பல வெளிநாட்டினரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்Õ என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக