AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வெள்ளி, 3 மே, 2013

வெளிநாட்டு சிறையில் 6500 இந்தியர் : வெளியுறவு அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: வெளிநாட்டு சிறைகளில் 6500க்கும் அதிகமான இந்தியர்கள் அடைபட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்தியர் சரப்ஜித்சிங் கடந்த வாரம் சக கைதிகளால் கொடூரமாக தாக்கப்பட்டார். கோமா நிலைக்கு சென்ற அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதை தொடர்ந்து அன்னிய நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர் பற்றிய விவரங்களை இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொச்சியை சேர்ந்த மனித உரிமை பாதுகாப்பு இயக்கம் என்ற என்ஜிஒ அமைப்பு எடுத்த முயற்சியின் பலனாக இந்த தகவல் கிடைத்துள்ளது.


இதன்படி வெளிநாட்டு சிறைகளில் மொத்தம் 6469 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக குவைத் சிறையில் 1691 கைதிகள் உள்ளனர். இதற்கு அடுத்தபடியாக சவுதி அரேபியாவில் 1161 பேரும், ஐக்கிய அரபு குடியரசில் 1012 இந்தியர்களும் கைதிகளாக உள்ளனர். பாகிஸ்தானில் 253, சீனாவில் 157, நேபாளத்தில் 377, இலங்கையில் 63, இத்தாலியில் 121, இங்கிலாந்தில் 426, அமெரிக்காவில் 155, மலேசியாவில் 187 மற்றும் சிங்கப்பூரில் 156 பேர் சிறையில் உள்ளனர். அரபு நாடுகளில் விசா முடிந்து தங்கியதற்காகவும், முறையான ஆவணங்கள் இன்றி குடியேறியதற்காகவும் சிறை தண்டனை பெற்றுள்ளனர். 80 நாடுகளின் சிறைகளில் உள்ள இந்தியர்கள் பற்றிய விவரங்கள் மட்டுமே வெளியுறவு அமைச்சகத்திடம் உள்ளது. 30க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளவர்களை பற்றி ஒரு விவரமும் வெளியுறவு அமைச்சகத்திடம் இல்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக