AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வெள்ளி, 3 மே, 2013

சட்டம் ஒழுங்கு என்ன விலை..?

கடந்த சில நாள்களாக வட மாவட்டங்களில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களைப் பார்க்கும் போது தமிழகத்தில் அரசு எந்திரம் முற்றிலும் பழுதடைந்து விட்டது என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.

எங்களது கடலூர் மாவட்டத்தை பெறுத்த வரையில் குறைந்த பட்சம் 50 கிமீ தூரம் பயணிக்க வேண்டுமெனில்,நீண்ட காத்திருப்புக்கு பின்னர் தான் பயணிக்க இயலும் என்ற நிலை இருக்கிறது. லால்பேட்டையில் வாடகை கார்கள் தொழிலில் ஈடுபட்ட ஒருவரிடம் நேற்று நான் பேசினேன்.. 

அவர் கூறினார்... நமது பகுதியிலிருந்து சென்னைக்கு செல்ல வேண்டுமென்றால்.. சேத்தியாதோப்புக்கு சென்றவுடன் காவல்துறையினர் வாகனங்களை காத்திருக்க சொல்கின்றனர்.வடலூர் மார்க்கமாக செல்ல வேண்டி வரக்கூடிய குறைந்தபட்சம் 15 அல்லது 20 வாகணங்கள் ஒன்று சேர்ந்த உடன் முன்னும் பின்னுமாக காவல்துறை வாகனங்கள் சூழ இந்த வாகன அணிவகுப்பு வடலூரை சென்றடைகிறது.



வடலூரில் நிற்கும் காவல்துறை பண்ருட்டி மார்க்கமாக செல்லும் வாகணங்களை ஒன்று சேர்த்து வடலூரிலிருந்து வரும் இரு காவல்துறை வாகணங்கள் பண்ருட்டி வரை இந்த வாகணங்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வருகிறது..

இவ்வாறே.. குறிப்பிட்ட 30 அல்லது 50 கிமீ தூரத்துக்கும் இரண்டு காவல்துறை வாகணங்கள் மாறி மாறி செல்லக்கூடிய வாகணங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு சென்னையை சென்றடைகிறது.பின்னர் திரும்பி வரும் போதும் இதே நிலை தான் என்றார்.

இந்த நிலையில் தான் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதாக ஆட்சியாளர்கள் பீற்றிக் கொள்கிறார்கள்..

தம் மீது அவதூறு சுமத்தினார்கள் என்று கூறி எதிர்கட்சிகள் பத்திரிக்கைகள் மீது வழக்கு போடும் முதல்வர்..தீப்பிழம்பு...அக்கிணிக் குழம்பு... என்று வடிவேலு பாணியில் காலங்காலமாக பேசி வரும் காடுவெட்டியையும் அந்த விஷக்கிருமி பரப்பும் மருத்துவர்கள் இருவரையும் தர்மபுரி சம்பவம் நடந்த போதே "பீஸ் பிடுங்கி" இருக்க வேண்டும்.

அப்பொழுது வெறுமெனே வேடிக்கை பார்த்து விட்டு, ராமதாஸ் முடிந்தால் என்னை கைது செய்து கொள்ளட்டும் என்று கூறியிருக்கிறார்.. அவரின் விருப்பப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சட்டப் பேரவையில் சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் பொறுப்பில் இருக்கும் முதல்வர் பெறுப்பில்லாமல் பேசினார்.

என்னை கைது செய் என்று அவர் சொன்னால் உடனடியாக அவரை கைது செய்யும் அரசு..என்னை கைது செய்யாதீங்க என்று அவர் கெட்டுக் கொண்டால்..அவரை வெறுமெனே விட்டு விடுமா அரசு..?

சட்டத்துக்கு சவால் விடும் வகையிலும் வெறுப்பை துண்டும் ரீதியிலும் பேசினால்.. அக்பருத்தீன் ஒவைசிகளை கைது செய்ய இந்த நாட்டின் சட்டத்தில் இடமிருக்கிறது.. அதே வேலையை விஷக்கிருமி மருத்துவர்களும் காடுவெட்டிகாரரும் செய்தால் இந்த சட்டம் வாய் மூடி மௌனித்திருப்பது ஏன்..?

இன்றைக்கு தும்பை விட்டு வாலை பிடிக்கும் இந்த அரசு பரமக்குடியில் மட்டும் அன்றைக்கு துப்பாக்கி சூடு நடத்தியது ஏன்...?

சட்டம் ஒழுங்கே.. உன் விலை தான் என்ன..?

-கொள்ளுமேடு ரிஃபாயி

0 கருத்துகள்:

கருத்துரையிடுக