AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 27 டிசம்பர், 2011

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு? பலன் இருக்குமா?


மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 20 சதவீத ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக 4.5 சதவீதத்தை சிறுபான்மையினருக்குஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனால் இந்த சதவீதம் மிக மிக குறைவு என்று பல சிறுபான்மை அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளது!!
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அளிக்கப்பட்ட இந்த ஒப்புதலை அடுத்து, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அதற்கான அரசாணையையும் வெளியிட்டுவிட்டது. அதன்படி, 2012, ஜனவரி 1ம் தேதி முதல் இந்த ஒதுக்கீடு நடைமுறைக்கு வருகிறது.
இதன் மூலம், முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் உட்பட தேசிய சிறுபான்மையின ஆணையம் வரையறுத்துள்ள மதம் மற்றும் மொழி அடிப்படையில் சிறுபான்மையினராகக் கருதப்படும் அனைத்து மாணவர்களும் பயன் பெறலாம்.
இந்த உள் ஒதுக்கீட்டின் மூலம், ஐஐஎம், ஐஐடி, ஏஐஐஎம்எஸ், என்ஐடி, என்ஐஎப்டி, என்ஐடீ, 44 மத்திய பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் சேர்க்கையில் சிறுபான்மையின மாணவர்கள் பயன்பெறலாம்.
மத்திய கல்வி நிறுவனங்களில் ஏற்கனவே நுழைவுத் தேர்வுக்கான அறிவிக்கைகள் வெளியாகிவிட்டதால், மாணவ சேர்க்கையில் வரும் கல்வியாண்டில் இந்த இட ஒதுக்கீட்டு மாற்றத்தை அனைத்து கல்வி நிறுவனங்களும் நடைமுறைப்படுத்த ஏதுவாக இருக்கும்.
மத்திய அரசின் இந்த முயற்சி எந்த அளவிற்கு சாத்தியம் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக