AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 11 ஜூன், 2013

உலகிலேயே கத்தார் நாட்டில்தான் அதிக கோடீஸ்வரர்கள்

துபாய்: உலகிலேயே கத்தார் நாட்டில்தான் கோடீஸ்வரர்கள் அதிகமாக உள்ளனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. 1,000 பேரில் 143 பேரிடம் ரூ.5 கோடிக்கு மேல் சொத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. போஸ்டன் கன்சல்டிங் குழுமம் (பிசிஜி) 13வது உலக கோடீஸ்வரர்கள் நிலவரம் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: உலகத்திலேயே கத்தார் நாட்டில்தான் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளனர். கச்சா எண்ணெய் வளம் மிகுந்த இந்த நாட்டில் 1,000 பேரில் 143 பேரிடம் ரூ.5.60 கோடிக்கு தனிப்பட்ட சொத்துக்கள் இருக்கின்றன.
இந்த வரிசையில் குவைத் நாடு 3வது இடத்தை பிடித்துள்ளன. இந்த நாட்டு மக்களில், 11.5 சதவீதம் கோடீஸ்வரர்களாக உள்ளனர். பஹ்ரைன் (4.9 சதவீதம்) மற்றும் ஐக்கிய அரசு குடியரசு (4 சதவீதம்) முறையே 7வது மற்றும் 9வது இடங்களை பிடித்துள்ளன. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்ரிக்காவில் கடந்த ஆண்டில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கை எண்ணை நெருங்கும் வகையில் 9.1 சதவீதமாக இருந்தது. இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக