AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 11 ஜூன், 2013

புகார் பதிவு செய்யாவிட்டால் போலீசுக்கு ஓராண்டு சிறை

புதுடெல்லி: எல்லையை காரணம் காட்டி பொதுமக்களின் புகார் மனுவை பெற மறுத்தாலோ அல்லது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுத்தாலோ சம்பந்தப்பட்ட போலீசார் மீது ஓராண்டு சிறை தண்டனை விதிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் எல்லைப்பிரச்னை காரணமாக போலீசார் துரித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விசாரணை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அதே போலவே மார்ச் மாதத்தில் 5 வயது சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பலாத்காரம் செய்யப்பட்டபோதும் போலீசார்  உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல் மெத்தனமாக செயல்பட்டதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் சம்பவம் நடந்தது குறித்து பாதிக்கப்பட்டவர் எந்த போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தாலும் புகாரை பெற வேண்டும். இல்லையேல் போலீசாருக்கு ஒரு வருடம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய உள்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில்,ÔÔஎப்.ஐ.ஆர் பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டால் குற்றங்களில் தொடர்புடையவர்கள் தப்பிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், உடனடியாக எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும். சம்பவம் நடந்த இடம் தங்கள் எல்லைக்குள் இல்லாவிட்டால் புகாரை பெற்று, ஜீரோ எப்.ஐ.ஆர் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு புகாரை அனுப்ப வேண்டும். ஒருவேளை வழக்கு விசாரணையின்போது, சம்பவ இடம் தங்கள் எல்லையில் இல்லை என்று தெரிந்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு எப்.ஐ.ஆரை மாற்ற வேண்டும். எப்.ஐ.ஆர் போட மறுப்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட போலீஸ் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 166 ஏ(அரசு ஊழியரே சட்டத்தை  மீறுவது) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இந்த சட்டப்பிரிவின் கீழ் ஓராண்டு வரை சிறை தண்டனை விதிக்கலாம். இது பற்றி எல்லா போலீஸ் நிலையங்களுக்கும் தகவல்  அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக