AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வெள்ளி, 7 ஜூன், 2013

அங்கீகாரம் பெறாத 44 பள்ளிகளை மூட உத்தரவு

கடலூர் மாவட்டத்தில் அங்கீகாரம் பெறாமல் இயங்கும் 44 மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 இதுகுறித்து ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் படி எந்த ஒரு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியும் முதன்மைக்கல்வி அலுவலர் அல்லது மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அங்கீகாரம் பெறாமல் செயல்படக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரிடமிருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் 44 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுவது தெரியவந்துள்ளது.

 அப்பள்ளிகளுக்கு 4 முறை காரணம் கேட்பு அறிவிக்கை அனுப்பப்பட்டும் எந்த பதிலும் கிடைக்காத நிலையில் இப்பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 2013-2014-ம் கல்வி ஆண்டில் இப்பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம்.
மூட உத்தரவிடப்பட்டுள்ள பள்ளிகள் விவரம்: அண்ணாகிராமம் ஒன்றியத்தில் அகரம் மற்றும் முத்துகிருஷ்ணாபுரம் ஆப்ரகாம், அக்கடவல்லி மற்றும் அருங்குணம்குச்சிபாளையம் பாரதி,   புதுப்பேட்டை ஜவஹர், எணதிரிமங்கலம் வைஷ்ணவி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி.
 புவனகிரி ஒன்றியத்தில், கணேஷ்நகர் வின்வித்யாலயா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி.
 கடலூர் ஒன்றியத்தில், வண்டிப்பாளையம் விவேகானந்தா, பாதிரிக்குப்பம் சக்தி, வெள்ளக்கரை கே.பி.ஜீத்யாலயா, ரெட்டிச்சாவடி ஸ்டீபன், தூக்கணாம்பாக்கம் சரஸ்வதி, வழிசோதனைப்பாளையம் ஜவஹர், சான்றோர்பாளையம் மற்றும்  மணக்குப்பம் தாமோதரனார், ராமாபுரம் மாடர்ன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி.
 விருத்தாசலம் வட்டத்தில் கோட்டேரி செம்பா மற்றும் அன்னை காளிகாம்பாள், கங்கைகொண்டான் மில்லர், புதுக்குப்பம் நேரு, கருவேப்பிலங்குறிச்சி ஜெ.வி.சக்ஸஸ், பேரளையூர் ஸ்ரீவிஷ்வா வித்யாலயா, ராஜேந்திரப்பட்டினம் பாரதி, சத்தியவாடி எஸ்டிஎஸ், எம்.பரூர் ஸ்டீபன் மற்றும் ஓம்சக்தி,  திட்டக்குடி இந்தியன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி. கம்மாபுரம் ஒன்றியத்தில் வி.குமாரமங்கலம் நியூ ஆக்ஸ்போர்டு, சேப்பளாநத்தம் புனித ஜோசப்,  பாலக்கொள்ளை நித்யமலர்.    காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்தில் மாணியம் ஆடூர் கிரசண்ட், மாமங்களம். அன்னை திலகவதி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி.
 குமராட்சி ஒன்றியத்தில் சிதம்பரம் சிவசக்தி நகர் அன்னீஸ், மந்தக்கரை விவேகானந்தா, வடக்கொளக்குடி கெய்சான், சிதம்பரம் ஞாயிறுமடத்தெரு கந்தசாமி,  லால்பேட்டை ஜக்கரியா,  சிதம்பரம், சரஸ்வதி நகர், ராஜலட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி .
 குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் வடக்குத்து கிருபை மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி,  கம்மாபுரம் ஒன்றியத்தில் வி.குமாரமங்கலம் நியூ ஜவஹர் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி.
 பண்ருட்டி வட்டத்தில் சாத்தமாம்பட்டு பாரதி, வீரப்பெருமாள்நல்லூர் விநாயகா,   மருங்கூர் தேவா, சேமக்கோட்டை தமிழரசி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக