AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 9 ஜூன், 2013

கடலூர், காட்டுமன்னார்கோவில் இடி- மின்னலுடன் கனமழை


தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து 2-வது நாளாக பல இடங்களில் இடி- மின்னலுடன் கனமழை பெய்தது.

கடலூர், நெல்லிக்குப்பத்தில் நேற்று மாலை 5 மணி முதல் சுமார் 1 1/2 மணி நேரம் இடி- மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. மழையின்போது நெல்லிக்குப்பத்தில் மின்னல் தாக்கி 10-க்கும் மேற்பட்ட டி.வி.கள், 15 மின்விசிறிகள் கருகி சேதமடைந்தன. இது தவிர விருத்தாசலம், வடலூர், நெய்வேலி, புவனகிரி, காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று இரவு சுமார் 2 மணி நேரம் மழை தூறி கொண்டேயிருந்தது. விழுப்புரத்தில் நேற்று இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது. தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. அதே போல் திண்டிவனத்தில் இரவு 8.30 மணி முதல் சுமார் 1? மணி நேரம் கனமழை கொட்டியது. பின்னர் நள்ளிரவு வரை மழை தூறி கொண்டேயிருந்தது. உளுந்தூர்பேட்டை, வளவனூர், முகையூர், விக்கிரவாண்டி உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மழை பெய்தது.
புதுவையில் நேற்று தொடர்ந்து 2-வது நாளாக மழை பெய்தது. இரவு 9 மணி முதல் நள்ளிரவு வரை விட்டு, விட்டு மழை தூறியது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக