AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 9 ஜூன், 2013

கோடை கொண்டாட்டம் முடிந்தது... தமிழகம் முழுக்க பள்ளிகள் நாளை திறப்பு..!


ஒன்றரை மாத கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்களை ஒரே வாரத்தில் வழங்க உத்தரவிட்டுள்ளதால் புகைப்படம் எடுக்கும் பணியும் நாளையே தொடங்குகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 20ம் தேதி பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறையை கொண்டாட மாணவ, மாணவிகள் பெற்றோருடன் சொந்த ஊர்களுக்கும் சுற்றுலா தலங்களுக்கும் சென்றனர். ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கோடை வெயில் கொளுத்தியதாலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதாலும் பள்ளிகள் திறப்பு 10ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் பள்ளிகள் நாளை திறக்கப்படுகின்றன.


கோடை விடுமுறை காலத்தை பயன்படுத்தி, பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். வாகனங்களை சரியாக பராமரிக்க வேண்டும் என ஏற்கனவே பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. கடந்த ஒரு வாரமாக மாநிலம் முழுவதும் கல்வித்துறை அதிகாரிகளும் போக்குவரத்து அதிகாரிகளும் பள்ளிகளில் ஆய்வு நடத்தினர். சரியாக பராமரிக்கப்படாத வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. மேலும் அடிப்படை வசதி மற்றும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.இந்நிலையில், பள்ளிகள் நாளை திறக்கப்படுவதையடுத்து அதற்கான முன்னேற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகளும் ஆசிரியர்களும் செய்து வருகின்றனர். பள்ளிகள் திறந்த ஒரே வாரத்தில் மாணவ, மாணவிகளுக்கான இலவச பஸ் பாஸ், சீருடை, செருப்பு, புத்தகப்பை, உலக வரைபடம், பென்சில், ஜியாமென்ட்ரி பாக்ஸ் போன்ற பொருட்களை வினியோகிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, இலவச பஸ் பாஸ்களுக்கான புகைப்படம் எடுக்கும் பணி, அந்தந்த பள்ளிகளில் நாளையே தொடங்குகிறது. புகைப்படம் எடுத்த 24 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளின் பஸ் பாஸ்களை, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளதால், புகைப்படம் எடுக்கும் பணியில் கான்ட்ராக்ட் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இலவச பாட புத்தகங்கள் ஏற்கனவே மாவட்ட வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து எல்லா பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டது. பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு விட்டன. விடுபட்ட மாணவர்களுக்கு பள்ளி திறந்ததும் புத்தகங்கள் வழங்கப்படும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக