AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 18 ஜூன், 2013

முழுமையாக நீக்க முடியாது ஜூலை 1ம் தேதி முதல் ரோமிங் கட்டணம் குறையும்


புதுடெல்லி: தேசிய ரோமிங் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் கட்டணத்தை, தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்) குறைத்துள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் கட்டணக் குறைப்பு அமலுக்கு வருகிறது.ரோமிங் கட்டணத்தை நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. விரைவில் அதை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் அறிவித்திருந்தார்.ஆனால், இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாகவும், ரோமிங் அழைப்புகளை கொடுப்பதால் தங்களுக்கு கூடுதல் செலவினம் ஏற்படுவதாகவும் தொலைதொடர்பு நிறுவனங்கள் தெரிவித்தன. ரோமிங் கட்டணத்தை குறைத்தால், அது மற்ற வாடிக்கையாளர்களுக்கு கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலையை ஏற்படுத்தி விடும் என்றும் அவை தெரிவித்தன.இந்நிலையில், ரோமிங் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் கட்டணத்தை தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் குறைத்துள்ளது. வரும் ஜூலை 1ம் தேதி முதல் இது அமலுக்கு வருவதாகவும் டிராய் தெரிவித்துள்ளது. ரோமிங் கட்டணம் குறைப்பு குறித்து டிராய் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

* கடந்த 2007ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட ரோமிங் அழைப்பு கட்டணம் ரூ.1.40ம், எஸ்டிடி அழைப்பு கட்டணம் ஸி2.40ம் தற்போது முறையே ரூ.1 மற்றும் 1.50 ஆக குறைக்கப்படுகின்றன.
* இதேபோல், ரோமிங்கில் இருக்கும்போது வெளியில் இருந்து வரும் அழைப்புகளுக்கு ஸி1.75 கட்டணம் விதிக்கப்பட்டது. அது 0.75 காசுகளாக குறைக்கப்படுகிறது.
* முன்பு ரோமிங்கில் எஸ்எம்எஸ்களுக்கு கட்டணம் விதிக்கப்படவில்லை. அந்த நடைமுறை மாற்றப்பட்டு தற்போது, ரோமிங்கில் இருக்கும்போது அனுப்பப்படும் எஸ்எம்எஸ்களுக்கு 1 கட்டணம் வசூலிக்கப்படும். எஸ்டிடி எஸ்எம்எஸ்களுக்கு ஸி1.50 கட்டணம் விதிக்கப்படும். ஆனால், வெளியில் இருந்து  வரும் எஸ்எம்எஸ்களுக்கு வழக்கம்போல் கட்டணம் எதுவும் விதிக்கப்படாது.
* சக போட்டியாளர்களை சமாளிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும், குறைவாகவே தொலைதொடர்பு நிறுவனங்கள் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கலாம். மேலும், தொலைதொடர்பு நிறுவனங்கள் ரோமிங் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்களுக்காக சிறப்பு கட்டண திட்டங்களை அறிவிக்கலாம். இரண்டுக்கும் இணைந்த திட்டங்களையும் அறிவிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.
* ரோமிங் கட்டணத்தை முழுமையாக நீக்குவதற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. ரோமிங் கட்டணத்தை முழுமையாக நீக்கினால், அது மறைமுக கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும். இவ்வாறு டிராய் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக