ஞாயிறு, 8 ஜனவரி, 2012
பரங்கிப்பேட்டையில் கடலூர் மாவட்டம் தழுவிய மாபெரும் மீலாது ஸீரத்துன் நபி மாநாடு அழைப்பிதழ்
லேபிள்கள்:
kollumedutimes
இந்தியா – பாகிஸ்தான் நல்லெண்ண நடவடிக்கை: 185 இந்தியர்கள் சிறையிலிருந்து விடுதலை
இந்தியாவுடனான உறவை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும், புத்தாண்டின் முதல் நல்லெண்ண நடவடிக்கையாகவும், தங்கள் நாட்டு நீர் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்ட 179 மீனவர்கள், மற்றும் இந்திய குடிமக்கள் 6 பேர் என, மொத்தம்185 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு நம்பிக்கை அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை அடுத்து, சிறையில் இருப்போரை விடுவிக்க முயற்சிகள் சமீபகாலமாக இருதரப்பிலும் தீவிரப்படுத்தப்பட்டன.
அதன் அடிப்படையில், 185 பேர் கராச்சி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, லாகூருக்கு அனுப்பப்பட்டனர். பின் அங்கிருந்து 4-பஸ்கள் மூலமாக வாகா எல்லைக்கு வழியனுப்பி வைக்கப்பட்டனர்.இவர்கள் அனைவரும் நாளை வாகா எல்லையைக் கடந்து இந்தியாவுக்குள் வருவர். இதற்கான சட்டப்பூர்வமான அனைத்து ஏற்பாடுகளையும் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டுள்ளது.
அதன் அடிப்படையில், 185 பேர் கராச்சி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, லாகூருக்கு அனுப்பப்பட்டனர். பின் அங்கிருந்து 4-பஸ்கள் மூலமாக வாகா எல்லைக்கு வழியனுப்பி வைக்கப்பட்டனர்.இவர்கள் அனைவரும் நாளை வாகா எல்லையைக் கடந்து இந்தியாவுக்குள் வருவர். இதற்கான சட்டப்பூர்வமான அனைத்து ஏற்பாடுகளையும் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டுள்ளது.
லேபிள்கள்:
kollumedutimes
சனி, 7 ஜனவரி, 2012
ஈரோடு, கோவையில் சட்டப்பேரவை மதி்ப்பீட்டு குழு ஆய்வு பேரா எம்.எச். ஜவாஹிருல்லா பங்கேற்பு
ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த ஜனவரி 4,5, மற்றும் 6 நாட்களில் சட்டபேரவை மதிப்பீட்டு குழு ஆய்வு மேற்கொண்டது மதிப்பீட்டு குழு தலைவர் பி.ஜி.நராயணன் தலைமையிலான இக்குழுவில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி தலைவருமான பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா, டாக்டர் கிருஷ்ணசாமி (ஒட்டப்பிடாரம்), ஆறுமுகம் (வால்பாறை), பிரின்ஸ் (குளச்சல்), தங்கத்தமிழ் செல்வன் (ஆண்டிப்பட்டி), தனசிங் (பல்லாவரம்), நீலகண்டன்(திரு.வி.க. நகர், சாமி (மேலூர்) உள்ளிட்டோர் பங்கு கொண்டனர்.
இக்குழு ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் உள்ள ஆவின் பால் பொருட்கள் தயாரிப்பு ஆலை, சத்துணவு கூடம், பவானி விதை பண்னை, ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலை, சுமார் 30 லட்சம் செலவில் போடப்பட்டுள்ள பனங்காட்டூர் ஆதி திராவிடர் காலனி சாலைகளை ஆய்வு செய்து இறுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் நடைபெற்ற கலதாய்வு கூட்டத்தில் ஈரோட்டில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசல் சம்மந்தமாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் மேற்கொண்ட ஆய்வில் வால்பாறை, டாப்சிலிப் காட்டுப்பகுதி, பெத்தநாயகனூர் ஆரம்ப சுகாதார நிலையம், கிணத்துக்கடவு சாலைகளை ஆய்வு செய்த குழு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் நடைப்பெற்ற காலந்தாய்வு கூட்டத்தில் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் சம்பள மற்றும் பென்சன் பிரச்சனை, வால்பாறை நகர பேருந்து நிறுத்தத்தை உடனே மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். விலங்களால் பாதிக்கும் மக்களுக்கு தகுந்த நிவாரணம், மருத்துவ உதவி வழங்கவும், மாவட்ட ஆட்சியருக்கு இக்குழு கோரியது. கோவை மாநகரில் மேட்டுப்பாளையம் சாலையில் 8 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு; மக்கள் பயன்பாட்டிற்க்காக இதுவரை திறக்கப்படாமல் இருப்பது குறித்தும்;, கோவை நகரத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகளை பணிகள் முடிந்த உடனே மூட வேண்டுமெனவும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தது.
இக்குழு ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் உள்ள ஆவின் பால் பொருட்கள் தயாரிப்பு ஆலை, சத்துணவு கூடம், பவானி விதை பண்னை, ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலை, சுமார் 30 லட்சம் செலவில் போடப்பட்டுள்ள பனங்காட்டூர் ஆதி திராவிடர் காலனி சாலைகளை ஆய்வு செய்து இறுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் நடைபெற்ற கலதாய்வு கூட்டத்தில் ஈரோட்டில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசல் சம்மந்தமாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் மேற்கொண்ட ஆய்வில் வால்பாறை, டாப்சிலிப் காட்டுப்பகுதி, பெத்தநாயகனூர் ஆரம்ப சுகாதார நிலையம், கிணத்துக்கடவு சாலைகளை ஆய்வு செய்த குழு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் நடைப்பெற்ற காலந்தாய்வு கூட்டத்தில் வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் சம்பள மற்றும் பென்சன் பிரச்சனை, வால்பாறை நகர பேருந்து நிறுத்தத்தை உடனே மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். விலங்களால் பாதிக்கும் மக்களுக்கு தகுந்த நிவாரணம், மருத்துவ உதவி வழங்கவும், மாவட்ட ஆட்சியருக்கு இக்குழு கோரியது. கோவை மாநகரில் மேட்டுப்பாளையம் சாலையில் 8 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு; மக்கள் பயன்பாட்டிற்க்காக இதுவரை திறக்கப்படாமல் இருப்பது குறித்தும்;, கோவை நகரத்தில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகளை பணிகள் முடிந்த உடனே மூட வேண்டுமெனவும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தது.

ஆவின் பால் பண்னையில் பால் பொருட்கள் தயார் செய்வது தொடர்பான ஆய்வு

பள்ளிக்கூடங்களில் வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்யும் போது...

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில்...

ஆணைமலை நம்பியாற்றின் நீரோட்டத்தை பார்வையிட்ட போது...

பெத்தநாயகனுர் அரசு சுகாதார நிலையத்தின் ஆய்வின் போது...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்
லேபிள்கள்:
kollumedutimes
வியாழன், 5 ஜனவரி, 2012
மருந்து மாத்திரைகள் வாங்கும் போது… சில எச்சரிக்கை குறிப்புகள்!!
மருத்து வாங்கும் போது… கீழ்க்கண்ட விஷயங்களை அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இது உயிர் பற்றிய விஷயம். எனவே அக்கறை அவசியம்.
1. மருத்துவரின் சீட்டு இல்லாமல்வாங்காதீர்கள்!
தமிழ் சினிமாவின் பிரபல வசனங்களில் ஒன்று, யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும. யார் வெட்டினாலும் கத்தி வெட்டும். மருந்து, டாக்டர் எழுதிக் கொடுத்தாலென்ன… கடைக்காரரே கொடுத்தால் என்ன? என்று நினைப்பவர் அநேகர். அது உண்மையல்ல. குடும்ப மருத்துவருக்குக் கொடுக்கும் பணம் உங்கள் உடல்
நலத்திற்கான முதலீடு என்பதை உணருங்கள். நீங்கள் சரியான மருத்துவரிடம் 50, 100 ரூபாய் கொடுத்தால் அவர் குறைந்தது 5 மடங்கு பணம் மிச்சப்படுத்தும் வேலையைச் செய்வார்!
நலத்திற்கான முதலீடு என்பதை உணருங்கள். நீங்கள் சரியான மருத்துவரிடம் 50, 100 ரூபாய் கொடுத்தால் அவர் குறைந்தது 5 மடங்கு பணம் மிச்சப்படுத்தும் வேலையைச் செய்வார்!
இப்போது பெரும்பாலான மருத்துவர் கள் தங்கள் மருந்துச் சீட்டை தெளிவாக, தனித்தனியாக கொட்டை எழுத்துக்களில் தான் எழுதித்தருகின்றனர். சிலர் கம்ப் யூட்டர் மூலம் பிரிண்ட் செய்யப்பட்ட மருந்துச் சீட்டை கொடுக்கிறார்கள்.
கையெழுத்துப் புரியவில்லை என்றால் கேட்டு விடுங்கள்! கோபிக்க மாட்டார்! சிலர் பழைய சீட்டை வைத்தே வருடக் கணக்கில் வாங்குவார்கள். அதுவும் தவறு! அவ்வப்போது மருத்துவரைப்பாருங்கள்!
2. செல்போனில் மருந்துச் சீட்டு
நீண்ட காலத்திற்கு சாப்பிட வேண்டிய உயிர் காக்கும் மருந்துகளின் பெயர், டோஸ் அளவு போன்றவற்றை Cell Phone™ மெஸேஜ் ஆக எழுதி பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த Message வீட்டில் உள்ள அனைத்து செல்ஃபோனி லும் இருக்கட்டும். அவசரத்தில் சிகிச்சை யளிக்க மருத்துவர் கேட்கும்போது இது உயிர் காக்க உதவும்.
3. பில் இல்லா மருந்து மருந்தல்ல எங்கே வாங்கினாலும், எவ்வளவு வாங்கினாலும் எவ்வளவு அவசர மானாலும், பில் இல்லாமல் மருந்துகளை வாங்காதீர்கள்.
பில்லில் உங்கள் பெயர், மருத்துவரின் பெயரும் இருக்கட்டும். மருத்துவரின் மருந்துச் சீட்டுடன், பில்லை வைத்து கவனமாக சரிபார்த்து, வாங்குங்கள். சந்தேகம் இருக்கும் பட்சம் மருத்துவரிடமோ அவரது உதவியாளரிடமோ Cross Check செய்து கொள்ளுங்கள்.
4. உதிரிகள் வேண்டவே வேண்டாம்..
மருந்தின் பெயர், மருந்துப் பொருட்களின் பெயர், தயாரித்த கம்பெனியின் பெயர், விற்கும் கம்பெனியின் பெயர் மருந்தின் வீரிய அளவு, மருந்து தயாரித்த தேதி காலாவதி தேதி ஆகியவற்றை முழு அட்டையாக மாத்திரை வாங்கும் போதுதான் கவனித்து வாங்க முடியும். எனவே கூடுமானவரை உதிரியாக மாத்திரை வாங்குவதை தவிர்த்து விடுங் கள். உதிரி மாத்திரைகள், காலாவதி, போலி, சாம்பிள் மாத்திரைகளாகக் கூட இருக்கக் கூடும். எனவே கூடுதல் கவனம் தேவை.
5. வீரியமில்லாமல் காரியமில்லை
மாத்திரை பெயர் பார்த்து வாங்கும் போது அதன் அளவு 2 மிலி, 5 மிலி, 10 மிலி என வீரியத்தின் அளவு பார்த்து வாங்க வேண்டும். இது மிக முக்கியம்.
6. காலாவதி மாத்திரை
காலனிடம் சேர்க்கும் எந்த மருந்தையும் நீங்களாகப் பார்த்து, காலாவதி தேதி சரிபாருங்கள். சில மாத்திரைகளில், 18 மாதங்கள், 24 மாதங்கள். தயாரித்த தேதியிலிருந்து என போட்டிருப்பார்கள். அதையும் சரிபாருங்கள்.
ஒரே வகையான மருந்து 6 மாதம் ஒரு கம்பெனியும் மற்றொரு கம்பெனி 3 வருடம் கழித்தும் காலாவதி தேதியை குறிப்பிட்டிருக்கும். அது மருந்து தயாரிக் கும் முறை, மருந்தின் உட்பொருட்கள் பொறுத்து மாறக்கூடும். நீங்களாக ஒரு முடிவுக்கு வர வேண்டாம்.
சில மருந்துகள் 1 நாள் தாண்டினால் கூட விஷமாக மாற வாய்ப்பு உண்டு. உதாரணம் டெட்ராசைக்ளின் வகை மருந்துகள். சில மருந்துகளில் காலாவதி தேதி நீண்ட நாட்கள் இருந்தாலும், குறிப்பாக குழந்தைகளுக்கு பவுடர் வடிவில் கொடுக்கப்படும் ‘ஆன்டி பயாடிக்Õ வகை மருந்துகள், காய்ச்சி ஆறவைத்த நீரில் கலந்து 5 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என சிறிய எழுத்தில் எழுதியிருப்பார்கள். அதுபோன்ற மருந்து களை 5 நாட்களுக்கு மேல் வைக்கக் கூடாது.
7. நீண்ட நாட்களுக்கு…
நீண்ட நாட்களுக்கு சாப்பிட வேண்டிய, தினசரி தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள் குறைந்தது 1 வாரத்துக்கான அளவாவது வீட்டில் இருக்கட்டும். இரவு ஒரே மாத்திரை இருந்து அதுவும் கீழே தவறி விழுந்துவிட்டால், தேவையில்லாத, பயம், பதட்டம், கவலை, அலைச்சல் டென்ஷன் இதை தவிர்க்க கைவசம் சற்று மாத்திரைகள், பர்ஸ், அல்லது ஹேண்ட் பேகில் இருக்கட்டும்.
8. குறைந்த செலவில் நிறைய மருந்துகள் சில
மொத்த மருந்து வியாபாரிகளின் சில்லறை விலைக் கடைகளிலோ, சேவை நிறுவனங்கள் நடத்தும்
கடைகளிளோ, 10 முதல் 20% வரை எம்.ஆர்.பி. விலையில் இருந்து தள்ளுபடி விலையில் மருந்து கிடைக்கும். ஒரு மாதத்திற்குத் தேவை யான மருந்துகளை இதுபோன்ற கடை களில் வாங்கினாலே கணிசமான பணம் மிச்சமாகும். சில கடைகளில் போனில் ஆர்டர் கொடுத்தால் இலவச டோர் டெலிவரி வசதியும் உண்டு. பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரத்தை
மிச்சப்படுத்துங்கள்.
கடைகளிளோ, 10 முதல் 20% வரை எம்.ஆர்.பி. விலையில் இருந்து தள்ளுபடி விலையில் மருந்து கிடைக்கும். ஒரு மாதத்திற்குத் தேவை யான மருந்துகளை இதுபோன்ற கடை களில் வாங்கினாலே கணிசமான பணம் மிச்சமாகும். சில கடைகளில் போனில் ஆர்டர் கொடுத்தால் இலவச டோர் டெலிவரி வசதியும் உண்டு. பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரத்தை
மிச்சப்படுத்துங்கள்.
9. அதே மருந்து…
வேறு கம்பெனி சில மருந்து கம்பெனியின் தயாரிப் புகள் இல்லாதபோது நீங்களாகவே வேறு கம்பெனி மருந்துகளை மருத்துவரின் அனுமதியில்லாமல் வாங்காதீர்கள். போலி கம்பெனியா, தடைசெய்யப்பட்ட மருந்துகள் கலந்துள்ளனவா என்பதை உங்கள் மருத்துவர் அறிவார். குறிப்பாக வலிப்பு/ சர்க்கரை வியாதி/ ரத்தக் கொதிப்பு மாத்திரை வாங்கும்போது, வீரியம் அதிகரித்தாலோ, குறைந்தாலோ, தேவையில்லாத பாதிப்புகள் ஏற்படக் கூடும்.
அதுபோலவே மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்தை நீங்களாகவே குறைத்துக் கொள்ளவோ அதிகரித்துக் கொள்ளவோ வேண்டாம்.
என் நண்பர் ஒருவர் ‘விருந்துக்குப் போய்விட்டு வந்தால் சர்க்கரை மாத்திரை இரண்டாகப் போட்டுக் கொள்வேன்’ என்பார். தலைக்கு மேல் கத்தி தொங்கு வது போன்றது இது. எப்போதும் ஆபத்து நேரலாம்.
10. மருந்துகள் பாதுகாக்க குழந்தைகள் கைக்கு எட்டாமல் வைக்கவும்.
பல மாத்திரைகள் கலர் கலராக ஜெம்ஸ் மிட்டாய் போல இருப்பதால் குழந்தைகள் வாயில் போட்டுக் கொள்ளும் ஆபத்து அதிகம்.
சில மருந்து மாத்திரைகள் குறிப்பாக நெஞ்சுவலி மாத்திரைகள் போன்றவை கைக்கு எட்டும் வகையிலும், தேவைப்பட்டால் ஒவ்வொரு அறையிலும் இருப்பது நலம்.
சில மருந்துகளை குளிர் சாதனப் பெட்டியில் தான் (இன்சுலின் போன்றவை) வைக்க வேண்டும். ஆனால் ஓபஸ் பெட்டியில் (ப்ரீஜரில்) வைக்கக் கூடாது.
பொதுவாக எல்லா மருந்துகளையும் வெயில், சூடுபடாத, ஈரம் இல்லாத உலர்ந்த இடத்தில் வைப்பது அவசியம். அடுப்பு அருகே, ப்ரிட்ஜின் மேல், சூடான பாத்திரம், ஹீட்டர் அருகே அல்லது வெயில்படும் இடங்களில் மருந்துகளை வைத்தால் மருந்து கெட்டுப்போக வாய்ப்பு உண்டு. சிலவகை தடுப்பு
மருந்துகளில், மருந்தின் வீரியம் கெட்டுப் போனதை அந்த லேபிள் கலர் மாறு வதைப் பொறுத்து கண்டுபிடிக்க இயலும் ........... thanks கல்வி களஞ்சியம்
மருந்துகளில், மருந்தின் வீரியம் கெட்டுப் போனதை அந்த லேபிள் கலர் மாறு வதைப் பொறுத்து கண்டுபிடிக்க இயலும் ........... thanks கல்வி களஞ்சியம்
லேபிள்கள்:
kollumedutimes
கர்நாடக மாநிலத்தில் பாகிஸ்தான் கொடி ஏற்றிய ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்த 6 பேர் கைது.
கர்நாடக மாநிலம், பிஜப்பூரை அடுத்த சிந்தகி நகரத்தில் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 1 ந் தேதி அதிகாலை பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டு பறந்து கொண்டிருந்தது. புத்தாண்டு தினத்தன்று நடந்த இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், மக்களிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதை கண்டித்து பந்த், பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் போன்ற வன்முறை சம்பவங்கள் நடந்தன.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் கொடி ஏற்றியதாக கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு மாணவரை தேடி வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஸ்ரீராம் சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள். எதற்காக அவர்கள் பாகிஸ்தான் கொடி ஏற்றினார்கள் என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்
லேபிள்கள்:
kollumedutimes.com
வெளிநாடு வாழ் இந்தியத் தொழிலாளர்களுக்கு பென்சன், இன்சூரன்ஸ் திட்டம்
புதுடெல்லி:வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் அந்த நாடுகளில் ஓய்வூதிய மற்றும் ஆயுள் காப்பீட்டு நிதியத்தை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
வளைகுடா நாடுகள் உள்ளிட்ட குடியேற்ற அனுமதி அவசியமான நாடுகளில் இந்த நிதியம் அமைக்கப்படுகிறது. இதுபோன்ற நாடுகளில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்களில் 20 சதவீதத்துக்கும் அதிகமானோர் பெண்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
அதிக ஆயுள், குறைந்த வருமானம் போன்ற காரணங்களால் வயதான காலத்தில் அவர்கள் வறுமையில் வாடும் ஆபத்து அதிகமாக இருக்கிறது.
புதிய திட்டத்தின்படி, ஆண்டுக்கு ரூபாய் ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை செலுத்தும் தொழிலாளர்களுக்கு அரசின் பங்களிப்பாக ஆண்டுக்கு ரூபாய் ஆயிரம் கிடைக்கும். பெண் தொழிலாளர்களுக்கு அரசின் ரூபாய் ஆயிரம் பங்களிப்பு தவிர வெளிநாடுவாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் கூடுதலாக ரூபாய் ஆயிரம் அளிக்கப்படும்.
இந்தத் திட்டத்துக்கு ‘தேசிய ஓய்வூதியத் திட்டம் – லைட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
லேபிள்கள்:
kollumedutimes
அத்வானியை கொல்ல வெடிக்குண்டு: முஸ்லிம் தம்பதிகளை கொடுமைப்படுத்திய போலீஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்
மதுரை:பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானியின் ஜனசேதனா யாத்திரை தமிழகத்தில் நடைபெறும் வழியில் பைப் வெடிக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வழக்கில் விசாரணையின் பெயரால் அப்பாவி முஸ்லிம் தம்பதியினரை கொடுமை படுத்திய புகாரில் போலீஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளது. தென்காசியை சார்ந்த செய்யித் சுலைமான் சேட் மற்றும் அவரது மனைவி ஷரஃபுன்னிஸா ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில் நீதிபதி கெ.கெ.சசிதரன் சிறப்பு புலனாய்வு குழுவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஜனவரி 18-ஆம் தேதிக்குள் இந்த அதிகாரியை மாற்றவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு தடையாக இருக்கிறார் என்றும், சட்டத்தை மீறி கொடுமைப்படுத்துகிறார் என்றும் புகார் அளித்துள்ள முஸ்லிம் தம்பதியினர் அந்த போலீஸ் அதிகாரியை கட்டுப்படுத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
லேபிள்கள்:
kollumedutimes
புதன், 4 ஜனவரி, 2012
துபாய் ஷாப்பிங் திருவிழா நாளை துவக்கம்
துபாய்:வர்த்தகத்தையும்,சுற்றுலா பயணிகளையும் இணைந்து ஒருசேர ஈர்க்கும் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இரவு பகல்களின் நிகழ்ச்சியான துபாய் ஷாப்பிங் திருவிழா நாளைது வங்குகிறது.
ஒரு மாதகாலம் துபாய்க்கு பெருமை சேர்க்கும் 17-வது வர்த்தக திருவிழாவை துபாய் ஈவண்ட்ஸ் அண்ட் ப்ரமோசன்ஸ் எஸ்டாபிளிஷ்மென்ட்(டி.இ.பி.இ) நடத்துகிறது. பல்வேறு சர்வதேச கண்காட்சிகள், போட்டிகள், வர்த்தக ப்ரமோசன்கள், லட்சக்கணக்கான பண மதிப்புடைய பரிசு திட்டங்கள், கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் ஆகிய இவ்வாண்டின் வர்த்தக திருவிழாவை சிறப்பிக்கும்.
க்ளோபல் வில்லேஜ், அல்ஸீஃப், ஜுமைரா பீச் ரெசிடண்ட்ஸ், புர்ஜ் கலீஃபா ஆகிய இடங்களில் நிகழ்ச்சியை முன்னிட்டு பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அரங்கேறும்.
ஷாப்பிங் திருவிழாவையொட்டி துபாய் க்ரீக்கில் வாணவேடிக்கை நிகழ்ச்சி தினந்தோறும் எட்டரை மணிக்கு நடைபெறும்.
மேலும் ஷாப்பிங் திருவிழா நடைபெறும் அனைத்து தினங்களிலும் அல் ஸீஃப் வீதியில் அல்ஸரூனி குழுமத்தின் சார்பாக வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும்.
ஒருமாத காலம் நடைபெறும் கார்ப்பெட் அண்ட் ஆர்ட்ஸ் ஒயாஸிஸ் நிகழ்ச்சி நாளை(வியாழக்கிழமை)முதல் ஏர்போர்ட் எக்ஸ்போவில் துவங்கும். காலை 10 மணிமுதல் இரவு 10 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறும். இம்மாதம் 12-ஆம் தேதி முதல் வியாழன், வெள்ளி தினங்களில் புர்ஜ் கலீஃபாவில் உள்ள புர்ஜ் ஸ்டெப்ஸில் பிரபலங்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இரவு 10 மணிமுதல் இந்நிகழ்ச்சி நடைபெறும்.
துபை ப்யொட்ரி ஃபாரம், குடும்பத்தினர் தயார் செய்யும் பொருட்களின் கண்காட்சி, லைட் அண்ட்சவுண்ட் ஷோ, டெஸர்ட் கேம்ப் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஷாப்பிங் திருவிழாவையொட்டி நடைபெறுகின்றன.
ஜனவரி 26-ஆம் தேதி இந்திய குடியரசு தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. துபாய் இண்டர்நேசனல் கன்வென்சன் செண்டரில் ஷேக் ராஷித் ஹாலில் வைத்து நடக்கும் கவிதை மாநாடு இதில் முக்கியமானதாகும். இரவு ஒன்பது மணிக்கு கவிதை மாநாடு துவங்கும்.
ஹெரிட்டேஜ் அண்ட் டைவிங் வில்லேஜில் அனைத்து தினங்களிலும் மனதை கவரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். மேடைப் போட்டிகள், ஒட்டகம் மற்றும் குதிரைப் பந்தயம், போலீஸ் குதிரை, நாய் கண்காட்சி, கார் மற்றும் பைக் கண்காட்சி, பாரம்பரிய படகு கண்காட்சி ஆகியன நடைபெறும். துபாய் ஃபெஸ்டிவல் சிட்டியும், அல் அஹ்லி க்ளப்பும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்துகின்றன.
ஷாப்பிங் திருவிழாவின் முக்கிய அம்சமாக விளங்கும் க்ளோபல் வில்லேஜ் பார்வையாளர்களுக்காக ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது.
இந்திய பவிலியன் உள்பட பல்வேறு நாடுகளின் ஸ்டால்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததாக அமைப்பாளர்கள் கூறுகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் ஷாப்பிங் திருவிழாவின் போது க்ளோபல் வில்லேஜிற்கு வருகை தருவர்.
6 ஆயிரம் வர்த்தக நிறுவனங்கள், 50 ஷாப்பிங் மால்கள் இம்முறை ஷாப்பிங் திருவிழாவில் பங்கேற்கின்றன. அனைத்து தயாரிப்புகளிலும் பெரும் தள்ளுபடியை நுகர்வோர் எதிர்பார்க்கின்றனர். நகை தயாரிப்பாளர்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆடை தயாரிப்பாளர்கள் இந்த திருவிழாவில் அதிகமாக பங்கேற்பர்.
ஆடம்பர கார்கள், தங்கநகைகள் உள்பட பல லட்சங்களின் பரிசு திட்டங்களும் உண்டு. துபாய் கோல்ட் அண்ட் ஜுவல்லரி குழுமம் 19 கிலோ தங்க நகைகளையும், 45 லட்சம் திர்ஹமும் பரிசாக வழங்க உள்ளது. ஷாப்பிங் திருவிழாவில் பங்கேற்கும் ஜுவல்லரிகளில் இருந்து ஆயிரம் திர்ஹம் மதிப்பிலான தங்க நகைகளை வாங்குவோருக்கு பரிசு திட்ட கூப்பன் வழங்கப்படும்.
இனி ஒரு மாத காலம் நடைபெறும் ஷாப்பிங் திருவிழாவில் பங்கேற்க மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஏராளமானோர் துபாய்க்கு வருகை தரவிருக்கின்றனர்.
லேபிள்கள்:
kollumedutimes
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)











