AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 5 ஜனவரி, 2012

வெளிநாடு வாழ் இந்தியத் தொழிலாளர்களுக்கு பென்சன், இன்சூரன்ஸ் திட்டம்


புதுடெல்லி:வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் அந்த நாடுகளில் ஓய்வூதிய மற்றும் ஆயுள் காப்பீட்டு நிதியத்தை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
வளைகுடா நாடுகள் உள்ளிட்ட குடியேற்ற அனுமதி அவசியமான நாடுகளில் இந்த நிதியம் அமைக்கப்படுகிறது. இதுபோன்ற நாடுகளில் பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்களில் 20 சதவீதத்துக்கும் அதிகமானோர் பெண்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
அதிக ஆயுள், குறைந்த வருமானம் போன்ற காரணங்களால் வயதான காலத்தில் அவர்கள் வறுமையில் வாடும் ஆபத்து அதிகமாக இருக்கிறது.
புதிய திட்டத்தின்படி, ஆண்டுக்கு ரூபாய் ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை செலுத்தும் தொழிலாளர்களுக்கு அரசின் பங்களிப்பாக ஆண்டுக்கு ரூபாய் ஆயிரம் கிடைக்கும். பெண் தொழிலாளர்களுக்கு அரசின் ரூபாய் ஆயிரம் பங்களிப்பு தவிர வெளிநாடுவாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் கூடுதலாக ரூபாய் ஆயிரம் அளிக்கப்படும்.
இந்தத் திட்டத்துக்கு ‘தேசிய ஓய்வூதியத் திட்டம் – லைட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக