AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

இந்தியா – பாகிஸ்தான் நல்லெண்ண நடவடிக்கை: 185 இந்தியர்கள் சிறையிலிருந்து விடுதலை


இந்தியாவுடனான உறவை இயல்பு  நிலைக்கு கொண்டுவரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவும்,  புத்தாண்டின் முதல்  நல்லெண்ண நடவடிக்கையாகவும், தங்கள் நாட்டு நீர் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்ட 179 மீனவர்கள், மற்றும் இந்திய குடிமக்கள் 6 பேர் என, மொத்தம்185 இந்தியர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு நம்பிக்கை அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை அடுத்து, சிறையில் இருப்போரை விடுவிக்க முயற்சிகள் சமீபகாலமாக இருதரப்பிலும் தீவிரப்படுத்தப்பட்டன.

அதன் அடிப்படையில், 185 பேர் கராச்சி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, லாகூருக்கு அனுப்பப்பட்டனர். பின் அங்கிருந்து 4-பஸ்கள் மூலமாக வாகா எல்லைக்கு வழியனுப்பி வைக்கப்பட்டனர்.இவர்கள் அனைவரும் நாளை வாகா எல்லையைக் கடந்து இந்தியாவுக்குள் வருவர். இதற்கான சட்டப்பூர்வமான அனைத்து ஏற்பாடுகளையும் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம்  மேற்கொண்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக