AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 4 ஜனவரி, 2012

துபாய் ஷாப்பிங் திருவிழா நாளை துவக்கம்


துபாய்:வர்த்தகத்தையும்,சுற்றுலா பயணிகளையும் இணைந்து ஒருசேர ஈர்க்கும் பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த இரவு பகல்களின் நிகழ்ச்சியான துபாய் ஷாப்பிங் திருவிழா நாளைது வங்குகிறது.
ஒரு மாதகாலம் துபாய்க்கு பெருமை சேர்க்கும் 17-வது வர்த்தக திருவிழாவை  துபாய் ஈவண்ட்ஸ் அண்ட் ப்ரமோசன்ஸ் எஸ்டாபிளிஷ்மென்ட்(டி.இ.பி.இ) நடத்துகிறது. பல்வேறு சர்வதேச கண்காட்சிகள், போட்டிகள், வர்த்தக ப்ரமோசன்கள், லட்சக்கணக்கான பண மதிப்புடைய பரிசு திட்டங்கள், கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் ஆகிய இவ்வாண்டின் வர்த்தக திருவிழாவை சிறப்பிக்கும்.
க்ளோபல் வில்லேஜ், அல்ஸீஃப், ஜுமைரா பீச் ரெசிடண்ட்ஸ், புர்ஜ் கலீஃபா ஆகிய இடங்களில் நிகழ்ச்சியை முன்னிட்டு பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அரங்கேறும்.
ஷாப்பிங் திருவிழாவையொட்டி துபாய் க்ரீக்கில் வாணவேடிக்கை நிகழ்ச்சி தினந்தோறும் எட்டரை மணிக்கு நடைபெறும்.
மேலும் ஷாப்பிங் திருவிழா நடைபெறும் அனைத்து தினங்களிலும் அல் ஸீஃப் வீதியில் அல்ஸரூனி குழுமத்தின் சார்பாக வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறும்.
ஒருமாத காலம் நடைபெறும் கார்ப்பெட் அண்ட் ஆர்ட்ஸ் ஒயாஸிஸ் நிகழ்ச்சி நாளை(வியாழக்கிழமை)முதல் ஏர்போர்ட் எக்ஸ்போவில் துவங்கும். காலை 10 மணிமுதல் இரவு 10 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறும். இம்மாதம் 12-ஆம் தேதி முதல் வியாழன், வெள்ளி தினங்களில் புர்ஜ் கலீஃபாவில் உள்ள புர்ஜ் ஸ்டெப்ஸில் பிரபலங்களின் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இரவு 10 மணிமுதல் இந்நிகழ்ச்சி நடைபெறும்.
துபை ப்யொட்ரி ஃபாரம், குடும்பத்தினர் தயார் செய்யும் பொருட்களின் கண்காட்சி, லைட் அண்ட்சவுண்ட் ஷோ, டெஸர்ட் கேம்ப் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஷாப்பிங் திருவிழாவையொட்டி நடைபெறுகின்றன.
ஜனவரி 26-ஆம் தேதி இந்திய குடியரசு தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. துபாய் இண்டர்நேசனல் கன்வென்சன் செண்டரில் ஷேக் ராஷித் ஹாலில் வைத்து நடக்கும் கவிதை மாநாடு இதில் முக்கியமானதாகும். இரவு ஒன்பது மணிக்கு கவிதை மாநாடு துவங்கும்.
ஹெரிட்டேஜ் அண்ட் டைவிங் வில்லேஜில் அனைத்து தினங்களிலும் மனதை கவரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். மேடைப் போட்டிகள், ஒட்டகம் மற்றும் குதிரைப் பந்தயம், போலீஸ் குதிரை, நாய் கண்காட்சி, கார் மற்றும் பைக் கண்காட்சி, பாரம்பரிய படகு கண்காட்சி ஆகியன நடைபெறும். துபாய் ஃபெஸ்டிவல் சிட்டியும், அல் அஹ்லி க்ளப்பும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்துகின்றன.
ஷாப்பிங் திருவிழாவின் முக்கிய அம்சமாக விளங்கும் க்ளோபல் வில்லேஜ் பார்வையாளர்களுக்காக ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது.
இந்திய பவிலியன் உள்பட பல்வேறு நாடுகளின் ஸ்டால்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததாக அமைப்பாளர்கள் கூறுகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் ஷாப்பிங் திருவிழாவின் போது க்ளோபல் வில்லேஜிற்கு வருகை தருவர்.
6 ஆயிரம் வர்த்தக நிறுவனங்கள், 50 ஷாப்பிங் மால்கள் இம்முறை ஷாப்பிங் திருவிழாவில் பங்கேற்கின்றன. அனைத்து தயாரிப்புகளிலும் பெரும் தள்ளுபடியை நுகர்வோர் எதிர்பார்க்கின்றனர். நகை தயாரிப்பாளர்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆடை தயாரிப்பாளர்கள் இந்த திருவிழாவில் அதிகமாக பங்கேற்பர்.
ஆடம்பர கார்கள், தங்கநகைகள் உள்பட பல லட்சங்களின் பரிசு திட்டங்களும் உண்டு. துபாய் கோல்ட் அண்ட் ஜுவல்லரி குழுமம் 19 கிலோ தங்க நகைகளையும், 45 லட்சம் திர்ஹமும் பரிசாக வழங்க உள்ளது. ஷாப்பிங் திருவிழாவில் பங்கேற்கும் ஜுவல்லரிகளில் இருந்து ஆயிரம் திர்ஹம் மதிப்பிலான தங்க நகைகளை வாங்குவோருக்கு பரிசு திட்ட கூப்பன் வழங்கப்படும்.
இனி ஒரு  மாத காலம் நடைபெறும் ஷாப்பிங் திருவிழாவில் பங்கேற்க மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து ஏராளமானோர் துபாய்க்கு வருகை தரவிருக்கின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக