AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 3 அக்டோபர், 2011

வசதி இருந்தும் ஹஜ் செய்யாதவர்களே, உங்களைத்தான்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِஎவர் சிறப்புமிக்க கஃபதுல்லாஹ் வரை செ(ன்று தன் இ)ல்ல(த்திற்குத் திரும்பிவர) வாகனமும் உணவும் பெற்றிருக்கின்றாரோ அவர் ஹஜ்ஜுச் செய்யவில்லையானால் அவர் யூதனாகவோ, கிறிஸ்தவனாகவோ, இறந்து விடுவதில் அல்லாஹ்வுக்கு அவரைப் பற்றி எவ்வித அக்கரையும் இல்லை.  அன்றி (நான் கூறும்) இது ''... .. .. எவர்கள் அங்கு பிரயாணம் செய்ய ஆற்றலுடையவர்களாக இருக்கின்றார்களோ, அவர்கள் மீது அல்லாஹ்வுக்காக, (அங்கு சென்று) அவ்வாலயத்தை ஹஜ்ஜுச் செய்வது கடமையாகும். 3:97 என்ற இறைவசனத்திற்கு ஏற்பவேயாம்'' - என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அலி ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : திர்மிதீ)

உமர் பின் கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: (இஸ்லாம் கைப்பற்றியுள்ள) இந்நகரங்களில் சில ஆட்களை அனுப்பி, ஹஜ் செய்யும் சக்தியிருந்தும் ஹஜ் செய்யாமலிருப்பவர்கள் யார்? யார்? என்று ஆய்வு செய்து அவர்கள் மீது ஜிஸ்யா (முஸ்லிமல்லாத குடிமக்களிடம் வசூலிக்கப்படும்) வரிவிதித்திட நான் நாடியுள்ளேன். இவர்கள் முஸ்லிம்களல்லர்! இவர்கள் முஸ்லிம்களாக இருந்தால், எப்போதோ ஹஜ் செய்திருப்பார்களே! முஸ்லிம் என்பதன் பொருள் தன்னைத்தானே அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுபவன். ஒருவர் உண்மையிலேயே தம்மை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டிருந்தால், எவ்விதக் காரணமுமின்றி ஹஜ் போன்ற மகத்தான வணக்கத்தைக் குறித்து அவர் அலட்சியமாக இருந்திருக்க முடியுமா? (அறிவிப்பாளர் : ஹஸன் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அல்முன்தகா)  
''எவர் ஹஜ்ஜுச் செய்ய நாடுகின்றாரோ அவர் (இறந்து விடவோ அல்லது ஏழையாகி விடுவதற்கு முன்னதாகவோ) அவசரமாகச் செய்து விடவும்...'' என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
இஹ்ராம் ஆடைகள்
இஹ்ராம் அணிபவருக்கு என்னென்ன ஆடைகள் அணிவது ஆகும்! என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டதற்கு அவர்கள் சட்டை, தலைப்பாகை, மேல்அங்கி, கால்சட்டை, வர்ளி எனும் மணமுள்ள புல் அல்லது குங்குமத்தால் சாயம் காய்ச்சப் பெற்ற ஆடைகள் முதலானவற்றை இஹ்ராம் அணிபவர் அணியக் கூடாது. அன்றி கால் உரையில் (வாய்ப்பகுதியை) வெட்டி விட்டு அடிப்பாகத்தை கணுக்காலுக்குக் கீழே அணியலாம் என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் : இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரீ.)
ஹஜருல் அஸ்வத்
நிச்சயமாக நீ ஒரு கல் தான். நன்மை செய்யவோ அல்லது தீமைபயக்கவோ உன்னால் இயலாது என்பதை நிச்சயமாக நான் அறிவேன். மேலும் நிச்சயமாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், உன்னை முத்தமிடுவதை நான் ஒருவேளை பார்த்திரா விட்டால் உன்னை நான், ஒரு போதும் முத்தமிடப் போவதில்லை என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிக் கொண்டு ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட்டதை நான் பார்த்தேன்.  (அறிவிப்பவர் : ஹாபீஸ் இப்னு ரபீஆ ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரீ, முஸ்லிம். )
கஃபா
கஃபாவை வலம் வருவது தொழுகை போன்றதாகும். ஆனால் (தொழுகைக்கும் அதற்கும் உள்ள வேற்றுமை) நீங்கள் அதில் உரையாடுவதேயாகும். எவர் அதில் உரையாடுகிறாரோ அவர் நன்மொழிகளையே கூறட்டும், என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : திர்மிதீ, நஸயீ.)
ஹஜ்ஜின் மாண்புகள்
நாயகமே! செயல்களில் (எல்லாம்) இறைவழியில் போர்புரிவதைத்தான் நாங்கள் மேலானதாகக் கருதுகிறோம். (ஆகவே பெண்களாகிய) நாங்கள் போர் புரிய வேண்டாமா? என்று நான் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வினவினேன். (அதற்கு) அவர்கள் எனினும் போர்புரிவதை விட மிக மேலானது மாண்புமிக்கது (ஏதும்) பாவங்கள் செய்யப்படாத ஹஜ்ஜேயாகும். பின்னர், இல்லத்தில் இருந்து வருவதைக் கடமையாக்கிக் கொள்வதாகும் என்று கூறினார்கள். இதனை நான் செவியுற்றது முதல் ஹஜ்ஜுச் செய்வதை நான் எப்பொழுதுமே கைவிட்டதில்லை. (அறிவிப்பாளர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதாரம் : புகாரீ, நஸயீ.)
குர்பானி
ஹஜ்ஜுப் பெருநாளன்று மனிதன் செய்யும் செயல்களில் குர்பானி கொடுப்பதை விட அல்லாஹ்விற்கு உகந்ததாக (வேறு எதுவும்) இல்லை. அன்றி (குர்பானி கொடுக்கப்பட்ட) அந்த பிராணி மறுமை நாளின் போது தன் கொம்புகள், உரோமம், கால் குளம்புகள் ஆகியவற்றுடன் (உடல் பெற்று) வரும். மேலும், நிச்சயமாக அதன் ரத்தம் பூமியில் விழுவதற்கு முன்னதாகவே இறைவனிடம் ஒப்புக் கொள்ளப்பட்டு விடுகின்றது. எனவே நீங்கள் இந்த நன்மாராயத்தைக் கொண்டு மகிழ்ச்சியுறுங்கள்க என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதாரம் : திர்மிதீ)
Thanks. : http://www.nidur.info

என் அருமை சமுதாயமே !

இயக்கங்கள் பெயராலும் அமைப்புகளின் பெயராலும் பிரிந்து கிடக்கும் என் அருமை சமுதாயாமே !
உன்னை அழிக்க பள்ளிக்கு வெளியில் ஒரு பெருங்கொண்ட கூட்டம் காத்திருக்கிறது இன்னும் நீ பள்ளிக்குள் என்ன செய்து கொண்டிருக்கிராய் ?

ஒ ! சுன்னத்துகள் மீது சண்டையா ?

வெளியில் இருப்பவர்கள் உன் தலையை எடுக்க திட்டம் போட்டுக்கொண்டிருக்கிரார்கள்
நீ இன்னும் தலைக்கு மேல் தொப்பி போடுவது பற்றி சட்டம் போட்டுக் கொண்டிக்கிறாய் !

அவர்கள் உன் கையை உடைக்க திட்டம் போட்டுக்கோண்டிருக்கிரார்கள்
நீ இன்னும் கைவிரலை ஆட்டுவதை பற்றி சட்டம் போட்டுக்கொண்டிருக்கிராய் !

என் அருமை சமுதாயமே ! ஒன்றினைக்க முயர்சிப்பவர்களிடம் தவ்ஹீது ஷிர்கும் எப்படி ஒன்று சேரும் என கேட்கிராயே !

உன்னை ராமசாமியுடனும் , குப்புசாமியுடனும் ஒன்று சேர சோல்லவில்லை.

லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்ரஸீலுல்லாஹ் என்ற உன்னதமான ஏகத்துவகலிமாவை மொழிந்த அப்துல்லாஹ்வுடனும், அப்துர்ரஹ்மானுடனும் தான் ஒன்று சேர சொல்கின்றோம் !

தவ்ஹீதை நிலைநாட்ட துடிக்கும் அமைப்புகளே ! சமுதாயத்தோடு ஒன்றி போவதும் , ஒன்றுபட்ட சமுதாயயாய் வாழவும் இஸ்லாம் கற்றுதருவதை நீ அறியவில்லையா ?

ஒன்றுபட்ட சமுதாயத்தின் மீதுதான் அல்லாஹ்வின் அருளும் உதவியும் இரங்குகிறது என்பதை நீ அறியவில்லையா ?

என் அருமை சமுதாயமே ! புரிந்துகொள்
இன்று..... நீ ஒன்றுபடவில்லை என்றால்
நாளை..... இஸ்லாத்தில் இருந்து கொண்டு அறியாமையால் அனாச்சாரம் செய்ய அவர்களும் இருக்கமாட்டார்கள் ! தவ்ஹீதை எடுத்துரைக்க நீங்களும் இருக்க மாட்டீர்கள்.....

என் அருமை சமுதாயமே ! ஒன்றுபடுவோம்...

சுன்னத்-வல்-ஜமாஅத் என்றும் தவ்ஹீத் ஜமாஅத் எனறும் JAQH என்றும் TNNJ என்றும் அடையாளம் காட்டுவதை நிருத்துவோம். ஒன்றாக கைகோர்த்து 'நான் முஸ்லிம்' என கூறுவோம்.

நம்மில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறப்போம்
நம் சமுதாய பெண்களை காவு வாங்கி கொண்டிருக்கும் பாஸிஸ சக்திகளை எதிர்ப்போம்
இஸ்லாத்திர்க்காகவும் அல்லாஹ்விற்காகவும் அனைத்தையும் இழப்போம்
முடிந்தாள் உயிரையும்!
இழப்பிர்க்கு நிச்சயமாய் பகரமாய் நாம் அடைவோம் ஜன்னாத்தை

இன்ஷா அல்லாஹ்

ஒன்று பட்ட சமுதாயத்தின் மீதுதான் அல்லாஹ்வின் அருளும் உதவியும் இரங்குகிறது !

அதனால் ஒன்று படுவோம் என் அருமை சமுதாயமே ! ஒன்று படுவோம்

உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு; நாளை முதல் பிரசாரம் தீவிரமாகிறது

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 22-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடந்தது.   1 லட்சத்து 32 ஆயிரத்து 467 பதவிகளுக்கு, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. திருச்சி மாநகராட்சி தவிர மற்ற உள்ளாட்சி பதவிகளுக்காக 5 லட்சத்து 27 ஆயிரத்து 14 பேர் மனுதாக்கல் செய்து இருந்தனர். மனுக்கள் பரிசீலனை 30-ந்தேதி நடந்தது. முறையாக தாக்கல் செய்யாதே மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.  
 
திருச்சி மாநகராட்சி தவிர மற்ற 9 மாநகராட்சிகள், நகர சபைகள், பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட பஞ்சாயத்து பதவிகளுக்காக மனுதாக்கல் செய்தவர்கள், மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள். அரசியல் கட்சிகளில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை தவிர மற்ற வேட்பாளர்களில் பெரும்பாலானோர் இன்று வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.
 
கூட்டணி அமைத்துள்ள கட்சிகளிலும், ஒப்பந்தப்படி மனுதாக்கல் செய்த வேட்பாளர்கள் தவிர மற்றவர்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர். சுயேட்சை வேட்பாளர்களிலும் சிலர் இன்று தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர்.
 
இன்று காலை 11 மணி முதலே அரசியல் கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர். கட்சி சார்பில் சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மனு தாக்கல் செய்த சிலர் மனுக்களை வாபஸ் பெறவில்லை. மாலை 3 மணிக்குள் மனுக்களை திரும்ப பெற்றவர்கள் தவிர மற்ற அனைவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
 
வேட்பாளர்களின் அதிகாரப்பூர்வ இறுதிப்பட்டியல் இன்று மாலை 3 மணிக்குப் பிறகு வெளியிடப்படுகிறது. போட்டியிடும் அனைவருக்கும் இன்று சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. கட்சிகளின் அங்கீகார கடிதம் கொடுத்தவர்களுக்கு அவர்கள் போட்டியிடும் கட்சிகளின் சின்னம் ஒதுக்கப்பட்டது.
 
சுயேட்சை வேட்பாளர்களுக்கு தனித்தனி சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. சில இடங்களில் ஒரே சின்னத்தை பலர் விரும்பினார்கள். அது யாருக்கு என்பது குலுக்கல் மூலம் முடிவு செய்யப்பட்டது.   வேட்பாளர்கள் இறுதி பட்டியல், வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் பற்றிய அறிவிப்பு அந்தந்த மையங்களில் இன்று மாலை தெரிவிக்கப்பட்டது. இந்த விவரங்கள் மாவட்ட கலெக்டர் மூலம் மாநில தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
 
இந்த விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்ட பிறகு பட்டியல்கள் சரி பார்க்கப்படும். அதன் பிறகு மாநில தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல், சின்னங்கள் ஆகியவற்றை வெளியிடும். இன்று இரவு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநில தேர்தல் கமிஷன் வெளியிடும். அப்போது தள்ளுபடியான மனுக்கள் மற்றும் வாபஸ் பெறப்பட்ட மனுக்கள் விவரங்களும் வெளியாகும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  
 
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஒரே பதவிக்கு 2 பேர் போட்டியிட முடியாது. கிராம பஞ்சாயத்துகளில் சுயேட்சைகள் பலர் 2 அல்லது 3 பதவிகளுக்கு மனுதாக்கல் செய்து இருந்தனர். இதில் ஒரு பதவி தவிர மற்ற பதவிகளுக்கான மனுக்களை பலர் வாபஸ் பெற்றனர். வாபஸ் பெறாதவர்களின் மனுக்களில் உள்ள பதவிகளில் ஒன்றை மட்டுமே மனுதாரர் பெற முடியும். எனவே தாக்கல் செய்த பதவிகள் அதிகாரிகள் முன்னிலையில் துண்டுச் சீட்டில் எழுதி குலுக்கல் நடத்தப்பட்டது.
 
குலுக்கலில் விழுந்த ஒரு பதவி மட்டுமே அந்த வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டது.   அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டனர். மனுக்கள் வாபஸ் பெறப்படுவதை எதிர்பார்த்த மற்றவர்களும் இன்று மாலை பிரசாரத்தை தொடங்கி விட்டனர். அரசியல் கட்சிகளிலேயே மனுக்களை வாபஸ் பெறாத போட்டி வேட்பாளர்களும் இன்று பிரசாரம் செய்தார்கள்.
 
சுயேட்சை வேட்பாளர்களுக்கு இன்று சின்னம் ஒதுக்கப்பட்டு விட்டதால் அவர்களும் பிரசாரத்தை தொடங்கினார்கள். இதனால் இன்று பிரசாரம் சூடுபிடித்தது. கிராமங்களிலும் வேட்பாளர்கள் இன்று வீதிவீதியாக சென்று ஓட்டு கேட்டனர். நாளை முதல் பிரசாரம் மேலும் தீவிர அடையும். தேர்தலை சுமூகமாக நடத்த மாநில தேர்தல் கமிஷனர் சோ.அய்யர் தலைமையில் மண்டல வாரியாக மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கூட்டம் நடைபெறுகிறது.
 
நாளை சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். 7-ந் தேதி மதுரையிலும், 8-ந்தேதி திருச்சியிலும், 10-ந்தேதி கோவையிலும் அந்த பகுதியைச் சேர்ந்த கலெக்டர்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டம் நடக்கிறது.
 
உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப் பதிவு 17, 19-ந்தேதி களில் 2 கட்டமாக நடக்கிறது. ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பு மாதிரி ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. ஓட்டுப்பதிவு தொடங்குவதற்கு 1 1/2 மணி நேரத்துக்கு முன்பு மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட வேண்டும். எனவே அதிகாலை 5.30 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
 
வேட்பாளர் பட்டியல் இன்று இரவு அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டு விடும். எனவே ஓட்டுப்பதிவு எந்திரங்களில் பொருந்துவதற்கான வேட்பாளர் பட்டியல், கிராமப்புற ஓட்டுப்பதிவுக்கான ஓட்டுச் சீட்டுகள் ஆகியவற்றை அச்சடிக்கும் பணி நாளை முதல் தொடங்கும். திருச்சி மாநகராட்சிக்கு 30-ந் தேதி மனுதாக்கல் தொடங்கியது. 7-ந்தேதி வரை மனுதாக்கல் செய்யலாம். 8ந்தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. இந்த மாநகராட்சி பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் மனுக்களை வாபஸ் பெற வருகிற 9-ந்தேதி கடைசி நாள்.

குரூப்-2 தேர்வு முடிவு 7-ந்தேதி வெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 11-ந்தேதி குரூப்-2 பணிகளுக்கு அதாவது 1628 இடங்களுக்கு தேர்வு நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு கடந்த பிப்ரவரி 2-ந்தேதி முதல் மார்ச் 28-ந்தேதி வரை நடைபெற்றது. ஆனால் இதுவரை அந்த தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
 
இதனால் நேர்முகத்தேர்வில் கலந்துகொண்டவர்களில் பலர் இன்று சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த நிலையில் அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் செல்லமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குரூப்-2 தேர்வு முடிவு 7-ந்தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யலாம்: அரசு பஸ்களில் பயணம் செய்ய இ-டிக்கெட் வசதி; இன்று முதல் அறிமுகம்

ரெயில்களில் முன்பதிவு செய்ய இ-டிக்கெட் வசதி இருப்பது போல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்களிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது. டிக்கெட் கவுண்டரில் காத்து நிற்காமல் வீட்டில் இருந்தபடியோ, கம்ப்யூட்டர் மையத்தின் மூலமோ, டிராவல் ஏஜென்சி மூலமோ இனி பஸ்சிற்காக முன் பதிவு டிக்கெட் உறுதி செய்து கொள்ளலாம்.
 
எந்த ஊரில் இருந்து எங்கு செல்ல வேண்டுமானாலும் அரசு நீண்ட தூர பஸ்களுக்கு இந்த வசதி வழங்கப்படுகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி போக்குவரத்து கழக பஸ்களுக்கும் இ.டிக்கெட் மூலம் முன் பதிவு செய்து கொள்ளலாம்.
 
சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லவும், திருப்பதி, புதுச்சேரி, பெங்களூர் போன்ற அண்டை மாநில நகரங்களுக்கு செல்லவும் அரசு விரைவு பஸ்களில் ஆன்-லைனில் முன்பதிவு செய்யலாம். ஒரு மாதத்திற்கு முன்பாக பயணத்திட்டத்தை வகுத்து அதற்கேற்றவாறு அரசு பஸ்களில் முன் பதிவு செய்து கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கலாம்.
 
மேலும் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, ரம்ஜான் போன்ற பண்டிகை காலங்களிலும், கோடை விடுமுறை காலங்களிலும் இந்த திட்டத்தில் முன் பதிவு செய்து பயணம் செய்யலாம். ஆன்லைன் மூலம் இ.டிக்கெட் பெறும் வசதி செய்யப்படுவதால் தேவையற்ற அலைச்சல், கால விரயம், காத்திருத்தல் போன்றவற்றை தவிர்க்கலாம்.
 
http://www.tnstc.in/ என்ற இணையதளத்தின் வழியாக அரசு பஸ்களில் இன்று முதல் இ.டிக்கெட் முன்பதிவு செய்துக் கொள்ளலாம். இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் இன்று தொடங்கி வைக்கிறார்.
 
இதையடுத்து எந்த இடத்தில் இருந்தும் அரசு பஸ்களில் பயணம் செய்ய முன் பதிவு சேவை தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, செயலாளர் பிரபாகர்ராவ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.  
 
பஸ் இ.டிக்கெட் பெறுவதற்கு தூரத்திற்கு ஏற்றவாறு கட்டணம் மாறுபடுகிறது. ஆன்-லைன் முன் பதிவுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பஸ்களின் தடம் எண், எங்கிருந்து எங்கே செல்ல வேண்டும், பணம் செலுத்தும் முறை, தேதி, எத்தனை பேர் பயணம் செய்கிறார்கள் போன்ற தகவல்களை இணைய தளத்தின் வழியாக பதிவு செய்யும் போது இ-டிக்கெட் பெற்று கொள்ளலாம்.
 
பயணத்தின் போது இ.டிக்கெட் பயணிகள் அடையாள சான்றினை வைத்திருக்க வேண்டும்...

மொபைல் கிசான் கிரெடிட் கார்ட் இந்த ஆண்டு 2 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்க முடிவு

சென்னை : விழுப்புரம் மாவட்டத்தில் செல்போன் மூலம் செயல்படும் விவசாய கடன் அட்டை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான வங்கிகளுக்கு செயல்முறை விளக்கக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கே.சி.சக்ரபர்த்தி, நபார்டு வங்கி தலைவர் பிரகாஷ் பக்ஷி, இந்தியன் வங்கி தலைவர் டி.எம்.பாசின், பல்லவன் வட்டார வங்கி தலைவர் ஜி.ரங்கராஜன், வங்கி அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பின்னர், கே.சி.சக் ரபர்த்தி, பிரகாஷ் பக்ஷி, டி.எம்.பாசின், ஜி.ரங்கராஜன் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டி: விவசாயிகள் உடனடியாக பயிர் கடன் பெறுவதற்காக, ‘விவசாய கடன் அட்டை’ திட்டம் 1998& 1999ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டம் விவசாய பயிர் கடன், வேளாண்மை சார்ந்த பல பணிகள், நடைமுறை செலவினங்கள், விபத்து மற்றும் பயிர் காப்பீட்டு தேவைகளுக்காக விரிவுபடுத்தப்பட்டது. இந்தியா முழுவதும் கடந்த ஜூன் வரை 10 கோடி விவசாய கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் செல்போன் மூலம் செயல்படும் விவசாய கடன் அட்டை திட்டத்திற்கு நபார்டு வங்கி ரூ.44.66 லட்சம் நிதியுதவி வழங்கியது. இந்த திட்டம் தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் பல்லவன் வட்டார வங்கி மூலம் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியன் வங்கி, பல்லவன் வட்டார வங்கி மற்றும் தொழில்நுட்ப வசதியை வழங்கும் பேமேட் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் செயல்படுகிறது.

இதன்மூலம், விவசாயிகள் வீட்டில் இருந்தபடியே செல்போன் மூலம் தரமான வங்கி சேவைகளை பெற முடியும். விவசாய கடன் அட்டைதாரர்கள், வங்கி தொடர்பாளர்கள் மூலம் வங்கிகளில் பணம் எடுக்கலாம்; செலுத்தலாம். பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்களிடம் இருந்து விவசாயத்திற்கு தேவையான உரம், விதை, பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் விவசாய கருவிகளை வாங்க முடியும். 

இத்திட்டத்தில் செல்போன் மூலம் தகவல் தொடர்பு நடைபெறுவதால், ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ரகசிய குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், நேரடியாக பணம் பரிமாற்றம் நடைபெறாது. அவரவர் வங்கி கணக்குகளில் விரைவாக பணம் வரவு&செலவு பரிவர்த்தனை நடக்கும். இதில், தவறு நடக்க வாய்ப்பில்லை. இதனால், விவசாயிகள் கடனுக்காக அலையும் பயண நேரம் மிச்சமாகிறது. வீண் அலைச்சல் தவிர்க்கப்படுகிறது. 

விவசாயிகள் எந்த நேரத்திலும் வங்கி சேவையை பெற முடியும். இந்த ஆண்டுக்குள், விழுப்புரத்தில் 2 ஆயிரம் விவசாயிகளுக்கு விவசாய கடன் அட்டை வழங்க முடிவு செய்துள்ளோம். படிப்படியாக தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் நாட்டில் உள்ள 12 கோடி விவசாயிகள் வங்கி சேவை பெற முடியும்.  
இவ்வாறு அவர்கள் கூறினர்.

தெலுங்கானா பிரச்சினை விரைவில் தீர்வுக்கு வரும்: மூத்த காங்கிரஸ் தலைவர் ஆசாத்


ஹைதராபாத்:ஆந்திர பிரதேசத்தின் தனி தெலுங்கான பிரச்சினை விரைவில் தீர்வுக்கு வரும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
ஆந்திர பிரதேசத்தின் மூன்று பகுதிகளான தெலுங்கானா, கோஷ்டல் ஆந்திரா மற்றும் ராயலசீமா ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆலோசனைக்குப் பின்னும், தேசிய அளவில் சில ஆலோசனைகளுக்கு பின்னரும் இதற்க்கு ஒரு தீர்வு எடுக்கப்படும் என்று மாநிலத்தை பார்வையிட வந்த கட்சி விவாகரங்களின் பொறுப்பாளாரான் குலாம் நபி ஆசாத்  ராஜீவ்காந்தி சர்வேதேச விமான நிலையத்தில் ஊடங்களுக்கு தெரிவித்தார்.
‘இதற்க்கான தீர்வு உடனடியாக நாளை அல்லது நாளை மறுநாள் கிடைக்கும் என்று எங்களால் சொல்ல இயலாது, நாங்களும் இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தி வருகிறோம்,ஏனெனில் இந்த பிரச்சினையின் காரணமாக நடக்கும் வேலை நிறுத்தம் அனைவரையும் பாதிக்கிறது என்றும், அரசாங்க ஊழியர்களை இந்த வேலை நிறுத்தத்திலிருந்து விடுபட்டு வேலைக்கு செல்லுமாறும், பண்டிகை கால நேரத்தில் இவ்வாறு செய்வது மக்களுக்கு பாதிப்பை ஏற்ப்படுத்தும்’ என்றார். ஊடங்களின் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்த விவகாரத்தை கஷ்மீர் விவகாரத்துடன் ஒப்பிட இயலாது என்றும் தெரிவித்தார்.

தெலுங்கானா போராட்டத்தால் தமிழ் நாடு மற்றும் கர்நாடகா இருட்டில் மூழ்கும் அபாயம்


ஹைதராபாத்:தனி மாநிலம் கோரி தெலுங்கானாவில் நடக்கும் போராட்டத்தால் தென் இந்தியா முழுவதும் இருட்டில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிங்கரேணி நிலக்கரி சுரங்கம் போராட்டத்தால் மூடப்பட்டுள்ளதால் மின் உற்பத்திக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மின் உற்பத்தி பாதிப்பினால் தமிழ் நாடு மற்றும் கர்நாடக ஆகிய மாநிலங்களில் மின் தடை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிங்கரேணி நிலக்கரி சுரங்கத்தின் பணியாளர்கள் தெலுங்கானா கோரிக்கைக்கு அதரவு தெரிவிக்கும் விதமாக பணி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் 2600 மெகாவாட் திறன் கொண்ட ராமகுண்டம் தேசிய அனல் மின் நிலையம் நிலக்கரி பற்றாக்குறையால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் ராமகுண்டம் தேசிய அனல் மின் நிலையத்திலிருந்து தமிழ் நாட்டிற்கு 780 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாடு மின்சார துறை பெறுகிறது. எனவே இவ்வனல் நிலையம் மூடப்பட்டுள்ளதால் தமிழ் நாட்டிற்கு 780 மெகாவாட் மின்சாரம் கிடைக்காமல் தடைபடும்.
இதிலிருந்து தமிழ் நாடு மற்றும் கர்நாடகாவில் வசிக்கும் மக்கள் தெலுங்கானா போராட்டத்தால் பாதிப்புக்குள்ளாவார்கள் என்பது உறுதியாகிறது. மேலும் இந்த பாதிப்பினால் ஏற்கனவே இருக்கும் இரண்டு மணி நேரம் மின்வெட்டுடன் சேர்த்து மேலும் அரை மணி நேரம் மின்வெட்டு செய்ய தமிநாடு மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் கர்நாடகாவில் ஏற்கனவே மின் தட்டுப்பாடு காரணமாக போராட்டங்கள் வெடித்துள்ளதால் கர்நாடக அரசு கடந்த சனிக்கிழமை முதல் பஞ்சாபிலிருந்து மின்சாரம் வாங்குவதாக மின்சார துறை அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே தெரிவத்துள்ளார்.