
ஹைதராபாத்:ஆந்திர பிரதேசத்தின் தனி தெலுங்கான பிரச்சினை விரைவில் தீர்வுக்கு வரும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
ஆந்திர பிரதேசத்தின் மூன்று பகுதிகளான தெலுங்கானா, கோஷ்டல் ஆந்திரா மற்றும் ராயலசீமா ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆலோசனைக்குப் பின்னும், தேசிய அளவில் சில ஆலோசனைகளுக்கு பின்னரும் இதற்க்கு ஒரு தீர்வு எடுக்கப்படும் என்று மாநிலத்தை பார்வையிட வந்த கட்சி விவாகரங்களின் பொறுப்பாளாரான் குலாம் நபி ஆசாத் ராஜீவ்காந்தி சர்வேதேச விமான நிலையத்தில் ஊடங்களுக்கு தெரிவித்தார்.
‘இதற்க்கான தீர்வு உடனடியாக நாளை அல்லது நாளை மறுநாள் கிடைக்கும் என்று எங்களால் சொல்ல இயலாது, நாங்களும் இந்த பிரச்சினையில் கவனம் செலுத்தி வருகிறோம்,ஏனெனில் இந்த பிரச்சினையின் காரணமாக நடக்கும் வேலை நிறுத்தம் அனைவரையும் பாதிக்கிறது என்றும், அரசாங்க ஊழியர்களை இந்த வேலை நிறுத்தத்திலிருந்து விடுபட்டு வேலைக்கு செல்லுமாறும், பண்டிகை கால நேரத்தில் இவ்வாறு செய்வது மக்களுக்கு பாதிப்பை ஏற்ப்படுத்தும்’ என்றார். ஊடங்களின் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்த விவகாரத்தை கஷ்மீர் விவகாரத்துடன் ஒப்பிட இயலாது என்றும் தெரிவித்தார்.






0 கருத்துகள்:
கருத்துரையிடுக