AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 7 ஜனவரி, 2013

பாப்புலர் ஃப்ரண்டின் தமிழக தலைவராக மீண்டும் ஏ.எஸ்.இஸ்மாயீல் தேர்வு!


தேனி:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழக தலைவராக கோவையைச் சார்ந்த ஏ.எஸ்.இஸ்மாயீல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்ட முத்துதேவன் பட்டியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுக்குழு நடைபெற்றது. ஜனவரி 4,5,6 ஆகிய தினங்களில் நடைபெற்ற இப்பொதுக்குழுவுக்கு மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயீல் தலைமை வகித்தார்.
தலைமை உரையாற்றிய ஏ.எஸ்.இஸ்மாயீல் தனது உரையில், பாப்புலர் ஃப்ரண்ட் கடந்த காலங்களில் பயணித்த பாதை மற்றும் அதன் வளர்ச்சி குறித்து சுட்டிக்காட்டினார்.
மாநில பொதுச் செயலாளர் ஏ.காலித் முஹம்மது ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய அளவிலான பணிகளைக் குறித்து தேசிய செயலாளர் எம்.முஹம்மது அலி ஜின்னா உரையாற்றினார்.

பின்னர், பொதுக்குழுவில் சமூக, அரசியல், பொருளாதார ரீதியான விவாதங்களும், எதிர்காலத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் செயல்பாடுகள், நிகழ்ச்சி நிரல்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. அதன் பின்பு, அடுத்த 2 ஆண்டுகளுக்கான தமிழக பாப்புலர் ஃப்ரண்ட் மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் தேசிய தலைவர் கே.எம்.ஷெரீஃப் தலைமையில் தேசிய செயலாளர் எம்.முஹம்மது அலி ஜின்னா மேற்பார்வையில் நடைபெற்றது.
தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்டின் மாநில நிர்வாகிகள் பெயர் வருமாறு:
ஏ.எஸ்.இஸ்மாயீல் – மாநில தலைவர்(கோவை)
ஏ.காலித் முஹம்மது – மாநில பொதுச் செயலாளர்(மதுரை)
எம்.முஹம்மது ஷேக் அன்ஸாரி – துணைத் தலைவர்(சென்னை)
ஜெ.ரசீன்(முகவை), எஸ்.இல்யாஸ்(மதுரை) – செயலாளர்கள்
எஸ்.பைசல் அஹ்மத் – பொருளாளர்(கன்னியாகுமரி மாவட்டம்)
மேலும் 11 பேர் மாநில செயற்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பொதுக்குழுவில் வருகிற பிப்ரவரி 17, 2013ல் இந்தியா முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் தினமாக கோலாகலமாக கொண்டாடப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
பதவி உயர்வில் தலித் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டை வரவேற்பதுடன், பல்வேறு கமிஷன்கள் தாக்கல் செய்த பரிந்துரைகளின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்கிட மத்திய அரசு தேவையான சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சாமான்ய மக்கள் மீது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும், போலீஸ் அதிகாரிகளுக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்கும், ஜனநாயகத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் தமிழக அரசின் புதிய அறிவிப்பான, ஒரு கிரிமினல் குற்றம் செய்தாலே குண்டர் தடுப்புச் சட்டம் என்ற முடிவை கைவிட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் திரையுலகின் முஸ்லிம் விரோதப்போக்கு, அந்நிய நேரடி முதலீடு ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுக்கும் நோக்கில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள 13 அம்ச திட்டத்தை வரவேற்கும் வேளையில் எதிர்காலத்தில் இச்சட்டம் தவறாக பிரயோகிக்கப்படாமல் இருக்க பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படவேண்டும் என்றும், ஏற்கனவே இச்சட்டத்தில் உள்ள குண்டர் தடுப்புச் சட்டம் தவறாக பிரயோகிக்கப்பட்டு வருவதை கவனத்தில் கொண்டு அப்பாவிகளுக்கு எதிராக இச்சட்டம் தவறாக பிரயோகிக்கப்படாது என்பதை தமிழக அரசு உறுதிச் செய்ய வேண்டும் என்றும் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக