AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 1 ஜனவரி, 2013

பிளஸ்–2 தேர்வு மார்ச் 1–ந்தேதி தொடங்குகிறது எஸ்.எஸ்.எல்.சி. மார்ச் 27–ல் ஆரம்பம்


பிளஸ்–2 பொதுத்தேர்வு மார்ச் 1–ந் தேதி தொடங்கி 27–ந்தேதி முடிவடைகிறது. இதே போல், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் 27–ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 12–ந்தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–
மார்ச் 1–ந் தேதி பிளஸ்–2 தேர்வு
பிளஸ்–2 தேர்வை மார்ச் மாதம் 1–ந்தேதி தொடங்கி நடத்தவும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மார்ச் 27–ந் தேதி தொடங்கி நடத்திடவும் தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. பிளஸ்–2 தேர்வு தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடக்கும்.காலை 10 மணிக்கு வினாத்தாள் விநியோகிக்கப்படும். மாணவர்கள் கேள்வித்தாளை படித்து பார்ப்பதற்கு 10 நிமிடம் கொடுக்கப்படும். விடைத்தாளில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்வதற்கு 5 நிமிடம் வழங்கப்படும். தட்டச்சு தேர்வு மட்டும் காலை 10 மணி முதல் மதியம் 12.20 மணி வரை நடைபெறும். தேர்வு தொடங்கி 15 நிமிடம் கழித்து தாமதமாக வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு அட்டவணை கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.
தேர்வு காலஅட்டவணை
மார்ச் 1–ந் தேதி – மொழித்தாள்–1
மார்ச் 2, 3–ந் தேதிகள் – விடுமுறை
மார்ச் 4–ந் தேதி – மொழித்தாள்–2
மார்ச் 5–ந் தேதி – தேர்வு இல்லை
மார்ச் 6–ந் தேதி – ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 7–ந் தேதி – ஆங்கிலம் 2–ம் தாள்
மார்ச் 8–ந் தேதி – தேர்வு இல்லை
மார்ச் 9, 10–ந் தேதிகள் – விடுமுறை
இயற்பியல்–பொருளாதாரம்
மார்ச் 11–ந் தேதி – இயற்பியல், பொருளாதாரம்
மார்ச் 12, 13–ந் தேதிகள் – தேர்வு இல்லை
மார்ச் 14–ந் தேதி – கணிதம், விலங்கியல், மைக்ரோபயாலஜி, நியூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ்
மார்ச் 15–ந் தேதி – வணிகவியல், மனையியல், புவியியல்
மார்ச் 16, 17–ந் தேதிகள் – விடுமுறை
மார்ச் 18–ந் தேதி – வேதியியல், கணக்குப்பதிவியல்
மார்ச் 19, 20–ந் தேதிகள் – தேர்வு இல்லை
உயிரியல்–வரலாறு
மார்ச் 21–ந் தேதி – உயிரியல், வரலாறு, தாவரவியல், பிசினஸ் மேத்ஸ்
மார்ச் 22–ந் தேதி – தேர்வு இல்லை
மார்ச் 23, 24–ந் தேதிகள் – விடுமுறை
தட்டச்சு பாடம்
மார்ச் 25–ந் தேதி – கம்யூனிக்கேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி–வேதியியல், அட்வான்ஸ் தமிழ், தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம்
மார்ச் 26–ந் தேதி – தேர்வு இல்லை
மார்ச் 27–ந் தேதி – அரசியல் அறிவியல், நர்சிங் (பொதுப்பிரிவு), புள்ளியியல், தொழிற்கல்வி பாடங்கள்
மார்ச் 27–ல் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மார்ச் மாதம் 27–ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 12–ந்தேதி முடிவடைகிறது. தேர்வு தினமும் காலை 10 மணி முதல் மதியம் 12.45 மணி வரை நடைபெறும். காலை 10 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்படும். வினாத்தாளை படிக்க 10 நிமிடம் வழங்கப்படும். அதன்பிறகு விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்ய 5 நிமிடம் கொடுக்கப்படும்.

தேர்வு காலஅட்டவணை
மார்ச் 27–ந்தேதி – மொழித்தாள்–1
மார்ச் 28–ந்தேதி – மொழித்தாள்–2
மார்ச் 29, 30, 31–ந் தேதிகள் – விடுமுறை
ஏப்ரல் 1–ந் தேதி – ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 2–ந் தேதி – ஆங்கிலம் 2–ம் தாள்
ஏப்ரல் 3, 4 தேதிகள் – தேர்வு இல்லை
சமூக அறிவியல்
ஏப்ரல் 5–ந் தேதி – கணிதம்
ஏப்ரல் 6, 7–ந் தேதிகள் – விடுமுறை
ஏப்ரல் 8–ந் தேதி – அறிவியல்
ஏப்ரல் 9, 10, 11–ந் தேதிகள் –தேர்வு இல்லை
ஏப்ரல் 12–ந் தேதி – சமூக அறிவியல்
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
19 லட்சம் மாணவ–மாணவிகள்
பிளஸ்–2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வுகள் மார்ச் 1–ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 12–ந்தேதியுடன் முடிவடைகிறது. பிளஸ்–2 தேர்வை ஏறத்தாழ 1,800 தேர்வு மையங்களில் 8 லட்சம் மாணவ–மாணவிகளும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 2,800 தேர்வு மையங்களில் 10½ லட்சம் மாணவ–மாணவிகளும் எழுதுகிறார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக