AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 27 டிசம்பர், 2012

கடலூர் விவசாயிகள் மகிழ்ச்சி : வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

வீராணம்: வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் விவசாயிகள் மகிழச்சி அடைந்துள்ளனர். பாசனத்திற்காக வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கடந்த 4 நாட்களாக விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதனையடுத்து பொதுப்பணித் துறை அதிகாரிகளால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வீராணம் ஏரியிலிருந்து வினாடிக்கு 396 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடலூர் மாவட்டத்திலுள்ள கிராமங்களில் 1 லட்ச ஏக்கர் பயிர்கள் பயனடையும். வீராணம் ஏரியில் நீர் வரத்து குறைந்ததை அடுத்து பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர், கடந்த 1 மாதமாக தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. இதனையடுத்து கடலூர் மாவட்ட விவசாயிகள் சாலை மறியல், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களை நடத்தி வந்தனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக