AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 12 டிசம்பர், 2012

சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலில் விவசாயிகளுக்கு சிட்டா வழங்க சிறப்பு ஏற்பாடு

கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீர் இன்றி கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து காவிரி டெல்டா விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு பிரிமிய தொகையை அரசே செலுத்த முடிவு செய்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் இத்திட்டம் மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
 இத்திட்டத்தில் சேரும் விவசாயிகள் உரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் சிட்டா மற்றும் அடங்கல் நகல்களை இணைத்து அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேற்று மாலைக்குள் அளிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் இணைய தள தொடர்பு மற்றும் மின்வெட்டு காரணமாக சிட்டா வழங்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. 


இதுகுறித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் விண்ணப்பம் மற்றும் அடங்கலை இன்று (நேற்று) மாலைக்குள் பெற்று கொள்ளுமாறும். பின்னர் ஓரிரு நாட்களில் சிட்டாவை விவசாயிகளிடமிருந்து பெற்று கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.இதற்கிடையில் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு போர் கால அடிப்படையில் சிட்டா வழங்க சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் கூடுதலாக தலா 5 இணை யதள வசதியுடன் கூடிய கணினிகள் அமைக்கப்பட்டு சிட்டாக்கள் வழங்கப்பட்டு வருகிறது. 
கணினி இயக்குபவர், எழுதுபொருட்கள் மற்றும் ஜெனரேட்டர் வசதியும் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு  உடனுக்குடன் சிட் டா வழங்கப்பட்டு வருகிறது. இன்று மாலை வரை சிட்டாக்கள் வழங்கப் படும் என வும் விவசாயிகள் இந்த வாய் ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சி யர் ராஜே ந்திர ரத்னூ கேட்டுக்கொண்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக