AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 16 அக்டோபர், 2012

பொது இடத்தில் புகை பிடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூ தலைமையில் சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் தடை சட்டம் குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கடலூரில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு கலெக்டர் ராஜேந்திரரத்னூ தலைமை தாங்கி பேசியதாவது:-

18 வயதிற்கு குறைவான நபர்களுக்கு சிகரெட் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள் உள்ள பகுதியில் 100 மீட்டர் சுற்றளவில் உள்ள கடைகளில் சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள், பஸ் நிலையங்கள், ஓட்டல்கள் மற்றும் சினிமா தியேட்டர்கள் போன்ற அனைத்து பொது இடங்களிலும் புகைபிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நலக்கேடு குறித்த எச்சரிக்கை குறி மற்றும் வாசகங்கள் அமைக்கப்பட வேண்டும்.

அனைத்து பொது இடங்களிலும் மற்றும் அரசு வளாகங்களிலும் புகை பிடித்தலை தடை செய்யப்பட்ட பகுதி. இங்கு புகை பிடித்தால் குற்றச்செயலாகும் என்ற விவரம் அடங்கிய எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட வேண்டும்.

பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இச்சட்டத்தை செயல்படுத்தும் அலுவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் ராஜேந்திரரத்னூ கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக