AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 18 அக்டோபர், 2012

இந்திய வரலாற்றில் மிகப் பெரிய பணக்காரர் ஐதராபாத்தின் கடைசி நிஜாம்

லண்டன் : இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய பணக்காரர் என்றால், யாருடைய பெயர் உங்களுக்கு நினைவுக்கு வருகிறது? எல்லோரும் நினைப்பதுபோல் டாடா, பிர்லா, அம்பானிகளை நீங்கள் நினைத்தால் அது தவறு. இந்தியாவின் முதல் பெரும் கோடீஸ்வரர், ஐதராபாத்தின் கடைசி நிஜாமான உஸ்மான் அலி கான்தான் அவர். உலக அளவில் விலைவாசி அடிப்படையில் கோடீஸ்வரர்கள் பட்டியலை, செலிபிரிட்டி நெட் வொர்த் என்ற இணையதளம் தயாரித்துள்ளது.

அந்த காலத்தில், அதாவது 1913ம் ஆண்டில் ரூ.530 கோடி சொத்து வைத்திருந்தால், அது தற்போது ரூ.12 லட்சத்து815 கோடியாக கருதப்படும்.  இதன் அடிப்படையில் 25 உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை தயாரிக்க இந்த இணையதளம் திட்டமிட்டது. ஆனால், அதில் 24 பேர் மட்டுமே இடம்பெற்றதாக அது தெரிவித்துள்ளது.

இப்பட்டியலின்படி, இந்திய வரலாற்றில் மிகப் பெரிய பணக்காரர் உஸ்மான் அலி கான். இவர் 1886 முதல் 1967ம் ஆண்டு வரையில் ஐதராபாத்தை ஆண்டுள்ளார். அவர் 1967ல் காலமானார். அவரது சொத்து மதிப்பு ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்து 800 கோடி. உலக அளவில் அவர் 6வது இடத்தை பிடித்துள்ளார். ஆப்ரிக்காவின் 14ம் நூற்றாண்டு அரசரான முதலாம் மான்சா மூசாதான், வரலாற்றிலேயே முதல் பெரும் கோடீஸ்வரர். அவரது சொத்து மதிப்பு ரூ.21 லட்சத்து 20 ஆயிரம் கோடி. இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் ரோத்ஸ்சைல்டு குடும்பம். இவர்களின் வாரிசுகள் இன்னமும் கூட உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 

18ம் நூற்றாண்டில் மேயர் ஆம்ஸ்செல் ரோத்ஸ்சைல்டு வங்கி நிதி நிறுவனத்தை ஆரம்பித்தார். அவரது சொத்து மதிப்பு ரூ.18 லட்சத்து 55 ஆயிரம் கோடி. பட்டியலில் 3வது இடத்தில் இருப்பவர், அமெரிக்காவின் ஜான் டி ராக்பெல்லர். 1937ம் ஆண்டில் இருந்த அவரது சொத்தின் தற்போதைய மதிப்பு ரூ.18 லட்சத்து 2 ஆயிரம் கோடி. அமெரிக்க வரலாற்றின் முதல் பெரும் கோடீஸ்வரர் இவர். ஆயிரம் ஆண்டுகள் அடிப்படையில் கோடீஸ்வரர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டபோதும், சிலரது சொத்து விவரங்கள் வரலாற்று அளவில் ஆராயப்பட்டுள்ளன. ஆனால், இந்த பட்டியல் முழுவதிலுமே பெண்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக