AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 16 அக்டோபர், 2012

கடலூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் நோய் அதிவேகமாக பரவி வருகிறது.


கடலூர் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் நோய் அதிவேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பீதி முடிவுக்கு வருவதற்குள் மர்ம காய்ச்சல் நோய் தீவிரமடைந்து வருகிறது.”தானே’ புயல் காரணமாக மரக்கிளைகள் ஒடிந்தும், இலைகள் உதிர்ந்தும் கடலூர் மாவட்டமே குப்பை மேடாகியது.
சென்னை மற்றும் பல்வேறு நகராட்சிகளில் இருந்து வந்த துப்புரவு பணியாளர்கள் ஓரளவுக்கு குப்பைகளை அகற்றினர்.இருப்பினும் இம்மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக கடலூர் மாவட்டத்தில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் நோய் பரவி வருகிறது. குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் வந்து விட்டால் அது மற்றவர்களுக்கும் பரவுகிறது.பண்ருட்டி பகுதியில் 6 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூர் சேவை இல்ல குழந்தைகள் காப்பகத்தில் மாணவி ஒருவர் இறந்துள்ளார்.டெங்கு காய்ச்சல் ஒருபுறம் மிரட்டிக்கொண்டிருக்கிற வேளையில், அதை விட அதிகமாக மர்ம காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் எலும்பு பாதிக்கப்பட்டு நடக்கக்கூட முடியாமல் அவதிப்படுகின்றனர்.
கடலூர் தலைமை மருத்துவமனைக்கு வரும் வெளி நோயாளிகளில் 4ல் ஒரு பங்கு மர்ம காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்ட வழிசோதனை பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவர் நேற்று ஆண்களுக்கான மருத்துவ வார்டில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து சுகாதார துணை இயக்குனர் ஜவகர்லால் கூறுகையில், “காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அவசியமாக மருத்துவமனையில் சேர்ந்து டெங்கு காய்ச்சல் உள்ளதா என சோதனை செய்து கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்கள் யாரும் பயப்படத்தேவையில்லை. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் மொட்டை மாடியிலோ, அல்லது தேங்காய் மட்டையிலோ மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக