AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 15 அக்டோபர், 2012

பயங்கரவாதத்திற்கெதிரான சட்டங்கள் முஸ்லிம்களுக்கெதிராக தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன!:PUCL செயலாளர்


புது தில்லி : “பயங்கரவாதத்திற்கெதிரான சட்டங்கள் விளிம்பு நிலை மக்களுக்கெதிராகவும், மதச் சிறுபான்மையினருக்கெதிராகவும், குறிப்பாக முஸ்லிம்களுக்கெதிராக தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. போலீஸ் அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கெதிராக குரோத நோக்கத்துடன் செயல்பட்டுள்ளதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன” என்று PUCL தேசியப் பொதுச் செயலாளர் வி. சுரேஷ் கூறினார்.
“சட்டவிரோத நடவடிக்கைகளைத் தூண்டுதல், பயங்கரவாதத்திற்கெதிரான சட்டங்கள், ஜனநாயகம்” என்ற தலைப்பில் புது தில்லியிலுள்ள இந்திய சட்டக் கல்வி நிறுவனத்தில் நடந்த பேராசிரியர் இக்பால் அன்சாரி நினைவு உரையாற்றும்பொழுது வி. சுரேஷ் இவ்வாறு கூறினார்.
“தடா, பொடா சட்டங்களை விட ஆபத்தானது இப்பொழுது நிலவிலுள்ள திருத்தப்பட்ட சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம், 1967 (Unlawful Activities Prevention Act, 1967 – UAPA). தடா, பொடா சட்டங்களிலுள்ள ஒருசில தவறாகப் பயன்படுத்தப்படாமல் தடுப்பதற்குரிய பாதுகாப்பு அம்சங்கள் கூட இந்த UAPA சட்டத்தில் இல்லை” என்று மேலும் கூறினார் வி. சுரேஷ்.
மனித உரிமைகள் என்பது ஆடம்பரமோ, சலுகையோ, சொகுசோ அல்ல, அது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமை என்று குறிப்பிட்ட அவர், “தவறு செய்யும் அதிகாரிகள் மீது வழக்கு நடவடிக்கைகள் எடுக்க சரியான தருணம் இது” என்று கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக