இந்தியாவில் 3ஜி தொலைத் தொடர்பு சேவை அதிக அளவில் வளர்ந்து விட்ட நிலையில் 4ஜி சேவையும் கணிசமான அளவில் வளர்ந்து வருகிறது. இந்த 4ஜி சேவை கடந்த ஏப்ரலில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்குள் அதன் வளர்ச்சியும் அசூர வேகத்தில் இருக்கிறது.
பாரதி ஏர்டெல் நிறுவனம் கல்கத்தா மற்றும் பெங்களூர் போன்ற நகரங்களில் 4ஜி சேவையை அறிமுகம் செய்து அதன் மூலம் 3,180 டிடி-எல்டிஇவாடிக்கையாளர்களை இணைத்தது. அதுபோல் பிஎஸ்என்எல் நிறுவனமும் தனது 4ஜி அல்லது டபுள்யுஐமேக்ஸ் சேவை மூலம் 50,077 வாடிக்கையாளர்களை இணைத்திருக்கிறது.
பாரதி ஏர்டெல் கடந்த ஏப்ரல் மாதம் பெங்களூரிலும், மே மாதம் கொல்கத்தாவிலும் தனது 4ஜி சேவையைத் தொடங்கியது. பிடபுள்யுஎ உரிமத்தை வைத்திருக்கும் இந்த நிறுவனம் கொல்கத்தா, கர்நாடகா, பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் தற்போது இந்த சேவையை வழங்கி வருகிறது. அதே நேரத்தில் இந்தியாவில் 13 பகுதிகளில் 3ஜி சேவையும் இந்த நிறுவனம் வழங்குகிறது.
தற்போது இந்தியாவில் இருக்கும் 3,180 டிடி-எல்டிஇ வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக எண்ணிக்கையாகும். இந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வரும் 2013க்குள் 5 மில்லியானாக அதிகரிக்கும் என்று தெரிகிறது. மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்க புதிய நிறுவனங்களான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் மற்றும் டிக்கோனா போன்றவையும் காரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு நோக்கியா, சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் வரும் காலங்களில் பல புதிய எல்டிஇ ஸ்மார்ட்போன்களைக் களமிறக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தற்போது 4ஜி சேவைக்கான உபகரணங்கள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. அவற்றின் விலை குறைந்தால் இன்னும் 4ஜி சேவை இந்தியாவில் அதிக அளவில் விரிவடையும் என்று தொலைத் தொடர்பு ஆய்வாளர் கூறுகிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக