இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாடு கும்பகோணத்தில் மாபெரும் பிறைக்கொடி பேரணி-பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் சீருடை அணிவகுப்பு தப்ஸ் குழுவினரின் இன்னிசை, கண்கவர் வீர விளையாட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாபெரும் கல்வி விழிப்புணர்வு மாநாடு 08-09-2012 அன்று கும்பகோணத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அன்று மாலை 3 மணிக் கெல்லாம் கும்பகோணம் மகாமகக்குளம் மேல்கூரை அருகில் மக்கள் வெள்ளம் குவியத் தொடங்கியது. எங்கு நோக் கினும் பச்சிளம் பிறைக் கொடியின் பசுமைக் காடாக காட்சியளித்தது. சமுதாயத்தின் சன்மார்க்க வீரர்கள் வரிசை வரிசையாக தனி வாகனங்கள் மூலம் பச்சிளம் பிறைக்கொடிகளோடு வரத் தொடங்கினர். மாலை 4.30 மணிக்கு தஞ்சை மாவட்ட ச்செயலாளர் வழுத்தூர் ஏ. பசீர் அஹமது தலைமையில் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செயலாளர் அய்யம்பேட்டை மில் லத் எஸ்.பி.முஹம்மது இஸ்ம hயில் பச்சிளம் பிறைக் கொடியை அசைத்து சமய நல்லி ணக்க பேரணியை துவக்கி வை த்தார். மாநிலத்துணைத்தலைவர் அதிரை எஸ்.எஸ்.பி. நஸ்ருதீன் யானை மீது அமர்ந்து பச்சிளம் கொடி பிடித்து வந்தார். ...
ஞாயிறு, 9 செப்டம்பர், 2012
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கல்வி விழிப்புணர்வு மாநாடு
லேபிள்கள்:
kollumedutimes.com
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக