AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 10 செப்டம்பர், 2012

ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள இந்தியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்

ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள இந்தியர்களுக்கு ஒரு ஓய்வூதிய திட்டத்தை இந்த மாத இறுதியில் இந்திய அரசு செயல் படுத்த உள்ளதாக துபாயில் வெளியாகும் தினசரி நாளிதழ் ஒன்றின் தேசிய ரிப்போர்ட் கூறியுள்ளது.
“மகாத்மா காந்தி பிரவாசி சுரக்ஷா யோஜனா” என்று அழைக்கப்படும் இத்திட்டம் இந்தியாவின் வெளிநாடு வாழ் மக்களுக்கான முதல் பாதுகாப்பு திட்டமாகும் .
இத்திட்டம் தொழிலாளர்களுக்கு உதவும் திட்டமாகவும் ஓய்வு ஊதிய திட்டமாகவும் அமையும் .ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ஒருமில்லியன் இந்தியர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும் .அவர்கள் Emigration Cheque Required (ECR ) பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் .
இந்த திட்டத்தில் சேருபவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வருடத்திற்கு குறைந்தது ரூ. 5000 செலுத்த வேண்டும் .இதனில் ,இந்திய அரசு ரூ.1900 கூடுதலாக சேர்த்துக் கொள்ளும் .இந்த ஒய்வூதிய திட்டத்திற்கான அலுவலகம் துபாயிலும் ,அபுதாபியிலும் ஒவ்வொரு அலுவலகம் திறக்கப்படும் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக