AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

சரித்திரம் படைத்த அபுதாபி தமுமுக இஃப்தார் நிகழ்ச்சி

சரித்திரம் படைத்த அபுதாபி தமுமுக இஃப்தார் நிகழ்ச்சி ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபி மண்டலம் தமுமுக சார்பாக கடந்த 02-08-2012 வியாழக் கிழமை அன்று கேரளா ஷோசியல் சென்டரில் நடைபெற்றது. இருமேனி ஆலிம் இஸ்மாயில் குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். அபுதாபி மண்டல துணைத்தலைவர் அபுல் ஹசன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அபுதாபி மண்டலம் தமுமுக செயலாளர் கீழை இர்பான் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரக தமுமுக தலைவர் அப்துல் ஹாதி அமீரக பொதுச்செயலாளர் கட்டிமேடு நூருல்லாஹ் அபுதாபி மண்டல தமுமுக பொருளாளர் கீழை சாதிக் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். 


திருச்சி அப்துல் ரஹ்மான் இறையச்சத்தை அதிகரிப்போம் என்ற தலைப்பிலும் ஏ.எஸ்.இப்ராஹிம் பித்ராவின் அவசியம் என்ற தலைப்பிலும், ஐக்கிய அரபு அமீரக தமுமுக தலைவர் அப்துல் ஹாதி கடந்து வந்த பாதை என்ற தலைப்பிலும் துவக்கவுரை நிகழ்த்தினார்கள்.


தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கும் தமுமுக மாநில செயலாளர் தர்மபுரி சாதிக் அவர்கள் நேர்வழி என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். அபுதாபி மண்டல தமுமுக துணை செயலாளர் முகவை இஸ்மாயில் அவர்கள் நன்றி உரை நிகழ்த்த,இறுதியாக துஆ ஓதி நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

நிகழ்ச்சியின் சிறப்புகள்
•   வேலை நாளில் நடத்தப் பட்டது.
• வெப்பத்தையும் பொருட்;படுத்தாமல் தமுமுக நிகழ்ச்சிக்காக மக்கள்    திரண்டனர்
• பிரதான சாலையிலிருந்து அரங்கம் வரை வரவேற்பு குழவினர்
• நோன்பு துறப்புக்காக மிகசிறப்பான உயர்தர உணவு ஏற்பாடுகள்

தொழில் அதிபர்கள்அனைத்து சகோதர அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் அபுதாபி வாழ் தமிழ் மக்களும் 300 க்கும் அதிகமானோர் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை உஸ்மான்மவ்லவி இஸ்மாயில்ஷாமொய்தீன்,  சாதிக்,அஹ்மத் மற்றும் ஸ்டிஃபன் ஆகிய குழுவினர் 10 தினங்களாக கடுமையாக பணி செய்து மக்களை அழைத்தனர்.

 அல்ஹம்துலில்லாஹ்! thanks abudhabi tmmk

0 கருத்துகள்:

கருத்துரையிடுக