லால்பேட்டை,ஆக-03
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் சார்பில்  லால்பேட்டை பூங்கா வீதி வளாகத்தில் இப்தார் நிகழ்ச்சி 03 .08 .12 . வெள்ளிக்கிழமை  தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் ஏ.இ.எம்.அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் தலைமையில் நடைபெற்றது.
/
கடலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.ஏ.அமானுல்லாஹ் ,SDPI .மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ஏ.அப்துஸ் ஸலாம் ,லால்பேட்டை  மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரி செயலாளர் பி.எம்.முஹமத் யஹ்யா ,அல்ஜமா பைத்துல்மால் செயலாளர் எஸ்.எம்.அனிசுர் ரஹ்மான் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக துணைத்தலைவர் மௌலானா தளபதி.ஏ.ஷபிகுர் ரஹ்மான் நோன்பின் மாண்புகள் பற்றி சிறப்புரையாற்றினார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அனைவர்களுக்கும் ரமலான் வாழ்த்துக்களை கூறி நிறைவுப் பேருரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் ஜாமியா மஸ்ஜித் முத்தவல்லியும் லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவருமான கே.ஏ.அபுசுஹூத் ,முபாரக் மஸ்ஜித் முத்தவல்லியும் லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளருமான எம்.ஒ.அப்துல் அலி,பனேசா ஜும்மா பள்ளி முத்தவல்லி எம்.ஏ.இஸ்மாதுல்லாஹ் ஜம் ஜம் நகர் முத்தவல்லி ஏ.ஆர்.ஹபிபுர் ரஹ்மான் . லால்பேட்டை ஐக்கிய ஜமாஅத் செயளாலர் ஹாஜி எம்.ஏ. பதஹுத்தீன்  தக்வா பள்ளி முத்தவல்லியும் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  துணைத் தலைவர் ஏ.ஆர்.அப்துல் ரசித் பி.எம்.அப்துல் காதர் , நூருல் முபாரக் முத்தவல்லி ஏ.எம்.ஜக்கரியா  SDPI நிர்வாகிகள் எஸ்.மக்பூல் அஹமத் ,மௌலவி ரஹமத்துல்லாஹ்,ஏ.வி.அப்துல் ஹமித்,எஸ் . சர்புதின் ,காங்கிரஸ் நிர்வாகிகள் ஏ.எம்.அய்யூப் ,எம்.அன்வர் பேரூராட்சி உறுப்பினர் ஒ.பி.அப்துர் ரஹீம்,இமாம் கஜ்ஜாலி மெட்ரிக் பள்ளி தலைவர் எஸ்.முஹமத் இப்ராஹிம் ,தாளாளர் எஸ்.எம்.சபீர் அஹ்மத்  எம்.ஹெச் முஹமத் ஆசிப், தாஹா முஹமத்,முஹமத் தையுப்,எம்.ஐ.ஷா  உள்ளிட்ட ஜமாஅத் நிர்வாகிகள் சமுதாய பிரமுகர்கள்  பங்கேற்றனர்
 விடுதலை சிறுத்தைகள் மாநில துணைச் செயலாளர் அப்துர் ரஹ்மான் நன்றி கூறினார்.
/
முன்னதாக புதிதாக கட்டப்பட்ட லால்பேட்டை  காயிதே மில்லத் பஸ் நிலைய கட்டிடத்தை திறந்து  வைத்த   திருமாவளவன் எம்.பி. இப்தார் நிகழ்ச்சிக்கு பின் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் ஏ.இ.எம்.அப்துர் ரஹ்மான் ஹஜ்ரத் அவரது   இல்லத்தில் அளித்த  தேனீர் விருந்தில் கலந்துக் கொண்டார்