ஹஜ் பயணிகள் இந்த மாதம் 31-ந் தேதிக்குள் பயண தொகையை செலுத்த வேண்டும் என இந்திய ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் அபுபக்கர் கூறினார்.
31-ந் தேதிக்குள்
இந்தியாவில் ஆண்டுதோறும் முஸ்லிம்கள் புனித ஹஜ் யாத்திரைக்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு செல்வார்கள். இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்காக சவுதி அரேபிய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய இந்திய அரசு சார்பில் இந்திய ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் அபுபக்கர் தலைமையில் நிர்வாக அதிகாரி டாக்டர் ஜாகீர் உசேன், உறுப்பினர் ஜமீல் அகமது ஆகியோர் நேற்று சவுதி அரேபியாவிற்கு சென்றனர்.
முன்னதாக ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் அபுபக்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் இருந்து 3,315 பேர் ஹஜ் பயணம் செய்ய உள்ளனர். ஹஜ் பயணம் செல்பவர்கள் பணம் கட்டுவதற்கு ஜுலை 31-ந் தேதி கடைசி நாளாக உள்ளது. ஹஜ் பயணத்திற்கு செல்பவர்களின் தமிழக கோட்டாவை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிரமமின்றி சென்றுவர
சவுதி அரேபியாவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட 2 நாள் பயணமாக செல்கிறோம். அங்கு இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் செல்பவர்கள் சிரமமின்றி சென்று வர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






0 கருத்துகள்:
கருத்துரையிடுக