AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

திங்கள், 9 ஜூலை, 2012

சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்தது


சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3232 மில்லியன் கனஅடி. இங்கு தற்போது 1408 மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கிறது. ஏரிக்கு 220 கனஅடி வீதம் கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

இங்கிருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு 619 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. புழல் ஏரியில் இன்று காலை நிலவரப்படி 1257 மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கிறது. இதன் கொள்ளளவு 3330 மில்லியன் கனஅடி. பூண்டியில் இருந்து 255 கனஅடி வருகிறது. குடிநீருக்காக 180 கனஅடி திறந்து விடப்படுகிறது. 

செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி. இந்த ஏரியில் இன்று 800 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து 270 கனஅடி தண்ணீர் வருகிறது. குடிநீருக்காக 160 கனஅடி தண்ணீர் எடுக்கப்படுகிறது. சோழவரம் ஏரியின் கொள்ளளவு 881 மில்லியன் கனஅடி. இப்போது 85 மில்லியன் கனஅடி இருக்கிறது. 

வீராணம் ஏரியில் இப்போது 436 மில்லியன் கனஅடி உள்ளது. இதன் மொத்த கொள்ளளவு 1465 மில்லியன் கனஅடி. கடந்த வருடம் இதே நாளில் பூண்டி, புழல், செம்பரம் பாக்கம், சோழவரம், வீராணம் ஏரிகளில் மொத்தம் 5 ஆயிரத்து 617 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. 

இந்த ஆண்டு தண்ணீர் அளவு குறைந்து 3 ஆயிரத்து 550 மில்லியன் கனஅடியாக உள்ளது. பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரிகளில் இருக்கும் தண்ணீரையும் சேர்த்தால் அக்டோபர் வரை சென்னை நகரில் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வழங்க முடியும். 

சென்னையில் தற்போது தினமும் 830 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அக்டோபர் வரை இதே அளவு வினியோகம் செய்ய வாய்ப்பு உள்ளது. இதற்குள் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிடும். எனவே குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக